எது தமிழ்ப்புத்தாண்டு? ஓர் அலசல்!

சித்திரை முதல்நாளா? தை முதல்நாளா?
எது தமிழ்ப்புத்தாண்டு என்பது பற்றிய அலசல்

தி.மு.க. தை முதல்நாள் என்கிறது,
அ.தி.மு.க. சித்திரை முதல்நாள் என்கிறது.
இரண்டையும் தவிர வேறொன்றும் இருக்கிறதா?
இவற்றில் எது சரி? 

தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர்களில் ஒருவரும், புதுதில்லியின் அறிவியல் அறிஞருமான 
த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய 
“எது தமிழ்ப்புத்தாண்டு” எனும் அரிய கட்டுரை ஒன்றை “விழுது” மாத இதழில் படித்தேன்.

இதனை அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக அந்த இதழின் கோப்பு முழுவதையுமே இங்குத் தருகிறேன்.
படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்-

இணைப்பில் செல்லுங்கள்..
விழுது- ஜன.பிப்.2016

படித்துவிட்டுச் சொல்லுங்கள்...
நன்றி த.வி.வி., “விழுது” இருமாதக் கல்வி இதழ்.

7 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி, நேற்று(12/4/2016) மதுரையில் அறிவியலாளர் த.வி. வெங்கடேஸ்வரன் நம்பிக்கை, மூடநம்பிக்கை, அறிவியல் எனும் தலைப்பில் அருமையானதொரு உரையை அளித்தார். பின்னர் வாசகர்களின் கேள்விக்கும் பதிலளித்தார். பின்னர் ஆர்வமுள்ள சிலருடன்(நானும் உண்டு) தனியாகவும் உரையாடினார். இவர் அறிவியலாளரும்,விஞ்ஞானியும் மட்டுமல்ல பழகுவதற்கும் இனிமையான மனிதர்.

    பதிலளிநீக்கு
  2. கட்டுரையைப் படித்துவிட்டேன் அண்ணா..அருமையாக அறிவியல் சார்ந்து விளக்கும் கட்டுரை. ஆக, இதுவும் இல்லை, அதுவும் இல்லை - தேர்தல் என்ன சொல்லப் போகிறது பார்ப்போம்.
    நிலவின் பயணம் பற்றி இங்கு ஒன்றாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்..நம்மூரிலும் சொல்லிக் கொடுக்கவேண்டும். ஹ்ம்ம் இது மட்டுமா..இன்னும் எவ்ளோ இருக்கு!!
    பகிர்விற்கு நன்றி அண்ணா
    வசந்தம் தானே புதுவருடமாக இருக்கவேண்டும் என்று நினைப்பேன்...மார்ச் அதற்குச் சரியாக வருகிறது என்று நினைக்கிறேன்..
    ஆனால் இன்று எல்லாம் வணிகமயம்!!

    பதிலளிநீக்கு
  3. இக்கட்டுரை அறிவியலைக் குழப்பிக் கொண்டு எழுதியதாகத் தெரிகிறது. அயன சலனத்தால் நாட்காட்டி தவறாக இருக்கிறது என்றால் கிரிகோரியன் நாட்காட்டியில் நாட்கள் முன்னே நகர்த்தப் பட்டதே அது போல தமிழிலும் முன்னே தானே நகர்த்த வேண்டும். எப்படி டிசம்பர் 21 என்று பின்னே போகமுடியும்?

    பதிலளிநீக்கு
  4. நிறைய தகவல்களை உள்ளடக்கி சிறப்பாக எழுதப் பட்டிருக்கிறது.
    டிசம்பர் 22 உலகம் முழுமைக்கும் பொருத்தமாக இருக்கும். இன்னொரு நாளான ஜூன் 22 ம் பொருத்தமாக இருக்கும். ஆனால் கட்டுரையில் இந்த நாளை மே 21/22என்று குறிப்பிடப் பட்டுள்ளது. உண்மையில் சூரியன் வடதிசைப் பக்கம் சாய்வு அதிகமாக தோற்றமளிக்கும் நாள் ஜூன் 21/22 இல்தான்.
    இந்த தகவல்கள் எல்லாம் நில நடுக்கோட்டுப் பகுதிகளுக்கு மட்டுமே முழுமையாக பொருந்தும். மற்ற இடங்களில் நிலா நடுக்கோட்டிலிருந்து எவ்வளவு விலகி இருக்கிறதோ அதற்கேற்றபடி மாறுபடும். தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் மத்தியில்தான் சூரியன் தலைக்கு மேல் செங்குத்தாக பயணத்தை மேற்கொள்ளும். அதனால் தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்குவதாக தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இது பொருத்தமாக இருக்கும். இது தொடர்பாக சென்னையில் சூரியனின் நிழலை புகைப்படம் எடுத்து சம இரவு பகல் நாள் தொடர்பாக
    <a href="http://www.tnmurali.com/2013/09/equal-day-night-equinox-astronomy.html>மார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள்!</a> என்ற கட்டுரை ஒன்று எழுதி இருக்கிறேன்.(புத்தாண்டு தொடர்பாக அல்ல)நேரம் கிடைக்கும்போது வாசிக்க வேண்டுகிறேன். சுவையான வவ்வாலின் விவாதங்கள் அடங்கியவை. அதன் தொடர்ச்சியாக புத்தாண்டுக்கான தொடக்கம் பற்றியும் எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  5. "ஒரு பத்தாம்பசலி பழக்கத்திலிருந்து மற்றொரு மூடநம்பிக்கைக்கு மாறுவது மாற்றம் இல்லை" உண்மையான கருத்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு