ரஜினிக்கு பத்மவிபூஷண் விருது! சரிதான்!


ஒருதுளி வியர்வைக்கு ஒருபவுன் தங்கக் காசு பெற்றுவரும், 
தமிழ்நடிகர் ரஜினிகாந்த் இன்று பத்ம பூஷண் விருது பெற்றார்
சிகரெட்டை எப்படித் தூக்கிப்போட்டு வாயில் சரியாக விழவைப்பது, நெருப்புக்குச்சியை நெருப்பெட்டி இல்லாமலே, கால் சட்டை அல்லது கைச்சட்டைத் துணியில் சரக்குன்னு தேய்த்தே பற்றவைப்பது என்பது போலும் அதிசயங்களை தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்திய தமிழ் நடிகர் ரஜினிகாந்த் இன்று விருதுபெற்றுள்ளார்.
இனி செய்தி வருமாறு -
புது தில்லி: குடியரசு தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட 56 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் நடிகர் ரஜினிகாந்த்புற்றுநோய் சிகிச்சை நிபுணரும் சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருதுகளும், நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
நன்றி – தினமணி இணையத்தளம் – 12-04-2016
“இது ரொம்ப லேட்டுங்க…முந்தியே குடுத்திருக்கணும்” தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
“தஜினிக்கு இந்த விருது தரப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். (“எங்கப்பன் குதிருக்குள் இல்லிங்க, அதுவும் எட்டாம் நம்பர் குதிருக்குள் இல்லவே இல்லிங்க”)

என் கேள்வி –
ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் என விரல்விட்டு எண்ணக்கூடிய சில படங்களில்தான் ரஜினி என்னும் கலைஞனை நான் பார்த்ததாக நினைவு. பிறகு மற்றவை எல்லாம் ச்சும்மா பஞ்ச் டயலாக் பேசி பறந்து பறந்து பத்துப்பேரை ஒத்த ஆளா அடிக்கிற படங்களில்தான் நடித்தார் ரஜனி. பிறகு நடிப்பது போல நடிக்கிறார்!

அது என்ன படம்... ஒரு பாட்டில் சாராயத்தை ஒருமூச்சில ஏத்திக்கிட்டு ஒரு பெரிய சுருட்டை ஒரே தம் ல அடிச்சுட்டு கிளம்பினா.. “இப்ப ராமசாமி”கள் தப்ப முடியாதில்ல... இது மாதிரி எத்தன..எத்தன?

தலையில் போடும் தொப்பி, இடுப்பில் போடுகிற பெல்ட் வரை அந்த நேரத்துப் படங்களில் வரும் காட்சியமைப்பிற்கான பொருள்கள் வரை ப்ராண்ட் போட்டு விற்றுக் காசாக்குவதில் அவருக்கு நிகர் அவரே அல்லது அவரது மனைவியார் இதில் பங்கேற்றிருக்கலாம்.
மற்றபடி
விருதுகள் என்னும் உயர்ந்த விஷயங்களை இப்படி மலிவாக்கி, புற்றுநோய் நிபுணர் சாந்தா அம்மாவை இவருக்குப் பின்னால் அறிவித்துச் செய்திபோடும் ஊடகங்களோடு இவருக்கு விருது தந்திருப்பது –- பிரதமர் ஆகும் சீனியாரிடியை எங்கே கேட்டு விடுவாரோ தன் பிள்ளைக்கு சிக்கலாகுமோ என்ற அச்சத்தில் -- சோனியா அம்மையாரால் ஜனாதிபதி ஆக்கப்பட்ட நம்ம பிரணாப் முகர்ஜி என்பதால் சரிதான். . .

“செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க  
செய்யாமை யானும் கெடும்“ என்ற வள்ளுவர் நம்மை மன்னிக்கவே மாட்டார் (செய்யத் தகாததைச் செய்வதும், செய்யத் தக்கதைச் செய்யாமல் விடுவதும் நல்லதல்ல)

வாழ்க பாரதம்! வெல்க கலைத்தாயின் தவப்புதல்வன்!

இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது-
இந்த ரஜினியும் கமலும் உச்சத்தில் இருந்தபோது இவர்களின் தேதிகள் கிடைக்காத படக்குழுவினர்தான் இவர்களுக்கு மாற்றாக முறையே விஜயகாந்த்தையும், மைக் மோகனையும் திரைப்படத் துறைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் இவர்கள் தனியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டனர் என்பது தமிழ்த்திரைப்பட வரலாறு அறிந்தவர் அறிந்த செய்திகள்தான்..

அந்த வகையில் அவ்வப்போது தனது படம் வருமுன் பரபரப்பாக ஏதாவது பேசுவாரே தவிர அரசியலுக்கு வரமாட்டார் என்று இப்பத்தான் உறுதியாகத் தெரிகிறது. அதுக்குள்ள பின்னவர் முன்னவர் ஆயிட்டார்.. அந்த வகையில் ரஜினியைப் பாராட்டலாம்.

ஒன்னும் புரியலயோ…
அது சரி…
நா ஒரு தடவ சொன்னா…!
(புரியலன்னு சொன்னாலும் திரும்பச் சொல்லமாட்டேன்)

8 கருத்துகள்:

  1. ஏமாந்த சோளகிரிகள் நாம் இவனை குறை சொல்லி என்ன செய்வது புற்றுநோய் நிபுணர் சாந்தா அம்மா அவர்களை பின்னுக்கு தள்ளியதற்கு கொடுக்காமலே இருந்திருக்கலாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தக் கேவலமோ....

    பதிலளிநீக்கு
  2. கடைசி போட்டிங்களே ஒரு பஞ்ச்
    நான் ஒரு தடவ சொன்னா...!
    (புரியலைனு சொன்னாலும் திரும்ப சொல்ல மாட்டேன்)
    இதான் நண்பரே உங்ளை எங்கேயோ
    கொண்டு போய் விடும்....


    பதிவு அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
  3. will be in alphabetical order

    பதிலளிநீக்கு
  4. குறுகிய எதிர்பார்ப்பு மனப்பான்மையோடு அரசாங்கங்கங்கள் ”உருப்படி”கள் மாதிரி நாட்டின் உயரிய விருதுகளை தகுதியற்றவர்களுக்கு அறிவித்து வருவதால் அவைகள் அதற்கான தனித்துவத்தையே இழந்து விட்டன. விருது பெற்றவரால் பெருமை கொண்ட காலம் போய் இப்பொழுதெல்லாம் அதைப் பெறுபவரால் அவை சிறுமைப் பட்டு நிற்கின்றன. அன்றாட நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. அதிர்ச்சியாக கவனிக்க வேண்டிய விசயமில்லை என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. Mgr kae bharat Ratna kudukum bothu atha Vida kuraivaa akkiramam Panna Rajni kum kodukka vaendiyathu thaan.

    பதிலளிநீக்கு