கடத்தல் நாடகமாடிய பத்துவயதுச் சிறுவன்!

(கடைசியில் முக்கியமான செய்தி இரண்டு உண்டு.
மறந்துவிடாமல் படிக்க வேண்டுகிறேன்)


வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த மடவாளம் அகரம் பகுதியில், 5-ம் வகுப்பு மாணவன் ஒருவன், நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, பள்ளிக்கு சைக்கிளில் புறப்பட்டுச் சென்றான். 9:45 மணியளவில், யாரோ ஒருவருடைய, மொபைல் போனில் இருந்து, தன் தந்தைக்கு தொடர்பு கொண்டு பேசினான்.'யாரோ இருவர், என்னை பைக்கில் கடத்திச் சென்றுவிட்டனர்; காப்பாற்றுங்கள்...' என்று சொல்லி, இணைப்பை துண்டித்து விட்டான். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவனின் தந்தை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார், உடனடியாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஏரிக்கரையில் மாணவன் இருப்பது தெரியவந்தது.

போலீசார் மீட்புபிற்பகல், 1:00 மணியளவில், மாணவனை மீட்ட போலீசார், அவனிடம், 'யார்? எப்படி கடத்தினார்கள் என்பதை நடித்துக் காண்பிக்க வேண்டும்' என, கேட்டனர். அதற்கு, அந்த மாணவன் கூறியதாவது:ஏரிக்கரை அருகே, என்னை பைக்கில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் இருவர், என்னிடம் பேச்சு கொடுத்து, கட்டாயப்படுத்தி பைக்கில் ஏற்றிக் கொண்டனர். பைக் பின்னால் அமர்ந்திருந்தவர், என் சைக்கிளை துாக்கி கொண்டு பயணம் செய்தார்.  சிறிது துாரம் சென்றபோது, பைக் ஓட்டியவருக்கு, மொபைல் போனில் அழைப்பு வந்தது. உடனடியாக, என்னை கீழே இறக்கி விட்டனர். தவறாக உன்னை கடத்தி விட்டோம் என்று கூறி விட்டுச் சென்றனர். பின், அந்த வழியாக சென்ற ஒருவரிடம், மொபைல் போன் வாங்கி, என் தந்தையை தொடர்பு கொண்டேன்.இவ்வாறு பாவனைகளோடு, மாணவன் நடித்து காட்டினான். வாகன பதிவு எண்கடத்தல் பைக் பதிவு எண்ணையும் கூறினான். மாணவன் சொன்ன வாகன பதிவு எண்ணை சோதனை செய்தபோது, அந்த வாகனம் மாணவனின் உறவினருக்கு சொந்தமானது என்று  தெரியவந்தது. 

இதையடுத்து, அந்த வாகன உரிமையாளரை தொடர்பு கொண்ட போது,
'வெளியூருக்கு சென்று இரண்டு நாட்கள் ஆகிறது' என்று கூறியிருக்கிறார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், மாணவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதற்கு அந்த மாணவன், 'கடந்த சில நாட்களாக அரையாண்டு விடுமுறையில், வீட்டு பாடங்கள் எதையும் செய்யாமல் இருந்து விட்டேன். பள்ளிக்கு சென்றால் ஆசிரியர் திட்டுவார் என்பதால், அவருக்கு பயந்து இதுபோல் செய்து விட்டேன். சாரி பார் த டிஸ்டர்பன்ஸ், உங்க டைமை நான் ரொம்ப வேஸ்ட் பண்ணிட்டேன்...' என, பயப்படாமல் சொல்லியிருக்கிறான். 

மாணவனின் இந்த பதிலைக் கேட்ட போலீசாருக்கு, தலை கிறுகிறுத்தது. சிறுவன் என்பதால், சமாளித்தபடி, அறிவுரை சொல்லி தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.

தகவலுக்கு நன்றி - 
பாடசாலை -http://www.padasalai.net/2016/01/5.html
------------------------------------------------------------------- 
ஐந்தாம் வகுப்புச் சிறுவனின் செயலா இது?
எதிர்காலச் சமூகம் விஷமாகி வருகிறது என்பதன்
சிறு துளியல்லவா இது!

வீட்டுப் பாடத்தின் பாதிப்பு! 
“வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை மருந்துபோலத் தருகிறோம், கல்வி சுமையாகிறது, வாழ்க்கையைக் கெடுக்கும் திரைப்படங்களை விருந்து போலத் தருகிறோம், வாழ்க்கையே சுமையாகிறது” என்று நான் எனது “முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!” நூலில் எற்கெனவே  எழுதியதுதான்.. வேறென்ன சொல்ல?

தொந்தரவு செய்யும் கல்விமுறையின் பாதிப்பு!
தொடர்ந்து பார்க்கும் திரைப்படம், தொலைக்காட்சியின் பாதிப்பு!
தாய்தந்தையர் மட்டும் இவனைப் பாதிக்கவில்லை என்று தெரிகிறது!

இவனது பெற்றோரும் பள்ளிக்கூடம் நடத்துவோரும் 
பசங்க-2 படம் உடனடியாகப் பார்க்க வேண்டியதுதான் உடனடி மருந்து!
கெட்டழிந்த இந்தக் கல்விமுறையால்
வேறு என்னென்ன கேடெல்லாம் நடக்கப்போகிறதோ!
“விதியே விதியே தமிழச் சாதியை 
என்செய நினைத்தாய் எனக்குரையாயடா!” - பாரதி!----------- 
------------------------------------------------------------------------------------------
“வலைச்சித்தர்”
திண்டுக்கல் தனபாலன்
இன்று (ஜனவரி-06)
பிறந்த நாள் 
கொண்டாடும் 
நம் நண்பர் 
வலைச்சிததர் 
திண்டுக்கல்.தனபாலன் அவர்களுக்கு,
இனிய வாழ்த்துகள்! 
இன்னும் பல்லாண்டு வாழ்ந்து,
தன் வாழ்நாளில் 
“1000 வலை தொடங்கிய 
அபூர்வ சிகாமணி” 
என்ற விருதை 
விரைவில் பெற 
வாழ்த்துவோம்! 

வாழ்க வலைச்சித்தர்!
-அன்புடன்-
-நா.முத்துநிலவன்
06-01-2016

-----------------------------------------------
(ஆமா எத்தனையாவது பிறந்த நாள் டி.டி.? 

25 முடிஞ்சு 24 தொடங்குது தானே?)
------------------------------------

6 கருத்துகள்:

  1. அய்யா..இதைவிட அதிகமான சம்பவங்கள் காதுக்கு வருகிறது...அடிப்படையே மாற்றவேண்டியிருக்கிறது....உங்கள் ஆதங்கம் புரிகிறது...நல்ல கட்டுரை...டி.டி க்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி... நன்றி ஐயா...

    அப்புறம் பவுண்டரி அடித்தால் ஆப் செஞ்சுரி பக்கம்... சிக்ஸர் என்றால் ஆப் செஞ்சுரி தாண்டும்... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  3. இப்படியெல்லாம் கிரிமனலா யோசிக்க கத்துக் கொடுப்பது நமது டிவி சினிமாக்கள்தான்.
    ****************
    என்றுமே இளைஞர்தான் டிடி .

    பதிலளிநீக்கு
  4. இன்றைய மாணவர்கள் புத்திசாலிகள்! அதை நல்லவிதத்தில் பயன்படுத்த கல்வி உதவ வேண்டும். கல்வி கற்பித்தலில் மாற்றம் நிச்சயம் தேவை! நண்பர் திண்டுகல் தனபாலன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அண்ணா ..புத்தாண்டில் உங்கள் வலைத்தளம் புது மெருகுடன்..சூப்பர்...நான் பசங்களுக்கு வீட்டுப்பாடமே கொடுக்க மாட்டேங்குறேன்னு என் மீது புகார் வருது..
    டிடி சாருக்கு வயசு பின்னோக்கி போவது உண்மைதான்..வாழ்த்துகள் அவருக்கு..

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வு ஐயா..
    தனபாலன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு