செருப்பைக் கழுவுங்கள்


                    உங்கள் செருப்பைக் கழுவுங்கள்

                                      மாதம் ஒருமுறை.

                                      வயதாக ஆக,

                                      வாரம் ஒருமுறையாவது.


                                      ஆள்வைத்துக் கழுவினால்

                                      அழுக்கும் சிரிக்கும்

                                      அவரவரே கழுவுவது அவசியம்.


                                      அப்புறம்...

                                      மறுபுறம் கழுவுவது

                                      மகத்துவமாகும்.



                                      சும்மா துடைத்து

                                      பளபளப்பாக்கினால்,

                                      உள்ளழுக்குச் சேரும்.

                                      குளிக்காதவர்

                                      முகப்பூச்சுப் போல.


                                      இது நன்றிக்கடன் அல்ல,

                                      ஆயினும்,

                                      சொன்னாலும் தவறில்லை


                                      கழுவும்போது கவனம்!

                                      கை சுத்தமா?

                                      முன்னும் பின்னும்?

                                      சரி கழுவுங்கள்.


                                      என்ன மௌனம்?

                                             ‘நானே எப்படி எனும்

                                      நாகரிகத் தடையோ?

                                      இல்லையேல்,

                                      உங்கள் உறுப்புகளை-

                                      காசுக்குச் சிலரும்,

                                      உடம்பை

                                      கடனுக்குச் சிலரும்

                                      விரைவில் கழுவ நேரும்.


                            ஆகா.. அடடே!

                            செருப்பு என்றா சொன்னேன்?

                            செருக்கு என்பதே சரி.

                            ஆனால்...

                            இரண்டும் சரிதான்.


-------------------------------- 

15 கருத்துகள்:

  1. //உங்கள் உறுப்புகளை காசுக்குச் சிலரும்//

    இதுக்கும் ஆட்கள் இருக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம்.
      உடம்பைக் கழுவிவிட மருத்துவ(ர்)- செவிலியர் இருக்கிறார்களே?
      ஆனால் நீங்கள்...என்னைவிட அனுபவம் மிக்கவர் என்பதால் இது “அறிவினா“ என்று நினைக்கிறேன். சரிதானே அய்யா?

      நீக்கு
  2. கழுவுதல் பற்றிய கவிதை...அடடா அய்யா...
    இயல்பாய் நகரும் அழகில் லயித்துப்போனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுய அனுபவத்தைப் பொது அனுபவமாக மாற்றுவதுதானே கவிதை? ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு கவிதை.. தானாக வந்தது. நன்றிசெல்வா.

      நீக்கு
  3. இரண்டையும் அவ்வப்போது கழுவுவதே சரி. பதிவைப் பார்த்ததும் ஜெயகாந்தனின் புது செருப்பு கடிக்கும் நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம். நலமா? இது பழைய செருப்பைப் பற்றிய புதிய அனுபவமய்யா.. நன்றி

      நீக்கு
  4. கழுவினாலும் செருப்பையும் காலில் தான் அணியவேண்டும். செருக்கையும்?

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலில் தொடர்ந்து அணியத்தானே கழுவுவதே? (இரண்டும் அதனதன் பணிகளைத் தொடர நினைத்தால்..) செருக்கை அப்படியே கழுவி விட்டுவிட்டால் நல்லது..

      நீக்கு
  5. தாத்தாவின் கவிதை நிரம்ப நாள்கள் கழித்து ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  6. முதலில் எதைக் கழுவுதல் அவசியம்?
    1) செருப்பு
    2) செருக்கு

    பதிலளிநீக்கு
  7. செருக்கு மிகுந்தோர் என எண்ண வைத்தோர்க்கு செருப்பைக் கொண்டு பாடம் புகட்டிஇருக்கிறீர்கள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  8. "சும்மா துடைத்து பளபளப்பாக்கினால் உள்ளழுக்கு சேரும், குளிக்காதவர் முகப்பூச்சு போல" செருக்குக்குச் செருப்பைக் கொண்டு நன்றாய்ச் சொன்னீர்கள். பாராட்டுக்கள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  9. கழுவப்பட வேண்டிய ஒன்று...ஆனால் அதனை சிந்தைக்குள் அல்லவா இருத்தி வைத்திருக்கிறார்கள்....இல்லை, பொருத்தி வைத்திருக்கிறார்கள்

    பதிலளிநீக்கு