பதிவர் விழாப்படங்கள் (4) கவிதை-ஓவியங்கள்

எடுத்த கவிதைகள் எல்லாம்
ஓவியமாக எழுதப்படவில்லை,
எழுதிய ஓவியங்களெல்லாம்
இங்கே இடப்படவும் இல்லை
-------------------------------------------------------------
பற்பல பணிகள்-இடர்ப்பாடுகளிடையே 
கவிதைகளைத் தொகுத்துத் தந்த
நமது விழாக்குழுவினர்
கவிஞர் மைதிலி கஸ்தூரிரெங்கன்,
கவிஞர் வைகறை, கவிஞர் மு.கீதா  இவர்களோடு,
இவற்றை வரைவதில் 
ஓவியர்களை ஒருங்கிணைத்த கவிஞர்.ஸ்டாலின் சரவணன், 
ஓவியர் எஸ்.ஏ.கருப்பையா
சு.மதியழகன், ஆர்.நீலா ஆகிய நம்
விழாக்குழுவினர்க்கு நன்றி.
வரைந்தளித்த ஓவியர்கள் 
செல்வநாயகம், கருப்பையா, கண்ணன்,  ராமன், அன்புராஜ், சேரன்,
விஜய், நாகராஜ், ரவி  மற்றும்
எஸ்.ஏ.கருப்பையா 
ஆகியோரின் கலைக் கைகளுக்கு 
நன்றி! நன்றி!!  நன்றி!!!
--------------------------------------------------------------- 
(இவர்களில் விழாவில் இருந்தோரை அழைத்து மேடையிலேயே மரியாதை செய்தோம்)




  விழாக்குழுவிலிருந்து  எங்கள் அய்யா
முனைவர் நா.அருள்முருகன் அவர்களது 
ஒரு கவிதை -மேலே-ஓவியமாகியுள்ளது.
-------------------------------------- 
















அடுத்த கவிதை ஓவியம்
உண(ர்)வுக்குழுத் தலைவர்
இரா.ஜெயலட்சுமியுடையது
ஆக, இந்த 22இல் இரண்டுதான் 
விழாக்குழுக் கவிஞருடையவை!
மற்றவை நமது பதிவர்களின் கவிதைகள்தாம்.
(இந்த விகிதத்தை விஞ்சிவிடவில்லை
ஏனைய ஓவியங்களும்)
இவையும் இன்னும் வரும்...
------------------------------------------------------- 
ஏற்கெனவே சொன்ன பதிவர் சுயஅறிமுகம்
பரிசுபெற்ற படைப்பாளிகளின் படங்கள்
அடுத்தடுத்து... தொடரும்...
(இடையில் ஒரு மாற்றத்திற்காக இது)



16 கருத்துகள்:

  1. எழுவதிலும் விழுவதிலும் கம்பீரம்

    சொல்லும் சித்திரமும் என்னைச்
    சிலிர்க்க வைத்தது

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  2. படங்கள் புதுக்கோட்டை நினைவு ஏடுகளை மீண்டும் புரட்டுகின்றன. கவிதை/ஓவியப் படங்கள் நன்றாக உள்ளன. சில கவிதைகளை விடவும் அவற்றிற்கு வரையப்பட்ட ஓவியங்களில் கவிதை தெரிகிறது. இவற்றை பதிவர் சந்திப்புக் காலையில் பார்த்தபோது மகிழ்ந்தேன். கவிஞன் யாரோ என்கிற கேள்வியை விடவும் வரைந்த ஓவியன் யாரோ என நினைத்திருந்தேன். இப்போது பெயர்களை வெளியிட்டுள்ளீர்கள். நன்றி. அந்த அழகு ஓவியர்களை அரங்கத்தில் அறிமுகப்படுத்தியிருக்கலாம். தகுதியானவர்கள் அவர்கள்.
    பதிவர்களின் அறிமுகப்படுத்தும் படங்களை வெளியிடுகையில் கீழே பதிவரின் பெயரையும் குறிப்பிடுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல அய்யா, அவர்களுக்கு நம் அய்யா அவரகளைக் கொண்டு சால்வை அணிவித்து நூல்பரிசும் தந்தோம். (தாங்கள் அந்நேரம் கண்ணயர்ந்துவிட்டது தெரிகிறது)

      நீக்கு
  3. அஹா என் கவிதையும்.. !!! முதலிலேயே ப்ரகாஷ் சகோ முகநூலில் பகிர்ந்திருந்தாலும் இங்கே மற்ற கவிதைகளுடன் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு.

    தேர்ந்தெடுத்த அன்பு நெஞ்சங்களுக்கும்., வரைந்த அழகான கைகளுக்கும் இங்கே பகிர்ந்த சகோ உங்களுக்கும் அன்பான வந்தனங்கள்.

    என்னுடைய கவிதையை வரைந்த ஓவியர் செல்வா அவர்களுக்கு சிறப்பு வணக்கங்கள். இதை எல்லாம் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டு வரலாமே. மொத்தம் 50 இருக்குமா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி (இப்போதுதான் நிம்மதி) மற்றொரு பதிவில் உங்கள் கருத்தும் பார்த்தேன்.

      நீக்கு
  4. சிறப்பான கவிதைகளை தொகுத்து ஓவியமாக்கிய குழுவினருக்கு பாராட்டுக்கள்! எனது கவிதையும் இடம்பெற்றது எனக்கொரு இன்ப அதிர்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கவிதை ஓவியமானது போல பலரது கவிதைகள் ஆகாதது எங்களுக்கே அதிர்ச்சிதான்! (பாவம் கள்ளம் கபடமற்ற ஓவியர்கள் அவர்களுக்குப் புரிய வைக்க நாங்கள் தவறினோம்)

      நீக்கு
  5. என் கவிதைக்கும் இடம் அளித்திருக்கிறீர்கள். தேர்வுக் குழுவினர்களுக்கும், ஓவியப் படைப்பாளிகளுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  6. கவிதை ஓவியங்கள் அத்துனையும் அருமை ஐயா
    ஒரு வேண்டுகோள்
    பதிவர்களின் கட்டுரைகளை மின்னூலாக வெளியிடுவதுபோல்,
    அன்று காட்சிக்கு வைக்கப் பெற்ற ஓவியங்களை அனைத்தையும் தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிடலாமே ஐயா.
    அத்துனை ஓவியங்களும் ஒரு நூலில்

    பதிலளிநீக்கு
  7. ஒவ்வொன்றும் ஒவ்வொரு களம்;
    வேறுபட்ட சுவைகள்...

    பதிலளிநீக்கு
  8. பாவரிகளை வெளிப்படுத்தும் ஓவியங்களா
    ஓவியங்களை வெளிப்படுத்தும் பாவரிகளா
    எலலாமே அருமை!
    தொடருங்கள்
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  9. நண்பர்களின் கவிதைகளை ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. வரைந்தவர்களுக்கும், பகிர்ந்த உங்களுக்கும் கலை ரசனை அதிகமே. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. கவிதைகளும் ஓவியங்களும் போட்டி போடுகின்றன.... சில கவிதைகள் பிடித்தது என்றால், சில கவிதைகளுக்கு வரைந்த ஓவியங்கள் மிகவும் பிடித்தன!

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இந்த வலைப்பதிவர் விழா உண்மையிலேயே பல அருமையான படைப்புகளை எங்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறது. பகிந்தமைக்கு நன்ற். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. நன்றி சுப்பு சார், ஏகாந்தன் சார், நாகேந்திர பாரதி சகோ, சுரேஷ் சகோ, கோபி சகோ, ஜெயக்குமார் சகோ, நிஜாம் சகோ, குமார் சகோ , யாழ் பாவண்ணன் சகோ, ஜம்பு சார், வெங்கட் சகோ, உமா சகோதரி :)

    நானும் நினைத்தேன் வெங்கட் சகோ எல்லாக் கவிதைக்கும் ஓவியம் மிகவும் பிடித்தது எனக்கு. :)

    வரையப்படாமல் விட்டுப் போனது நேரமின்மை காரணமாக இருக்கலாம். ஆகையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் கவிஞர்களுக்கும் ஓவியமாய் ஆகாவிட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் கவிதைகளுக்கு உரியவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ஸ்பெஷல் நன்றி - புதுகை வலைப்பதிவர் குழு., முத்துநிலவன் சகோ, டிடி சகோ, ப்ரகாஷ் சகோ, மற்றும் வலைப்பதிவ சகோதரிகள் & புதுகை வலைப்பதிவர் மாநாடு :)

    மற்றும் சிறப்பாக சிற்பம் போல் எங்கள் கவிதைகளை ஓவியமாய்ச் செதுக்கிய உயர்வான கரங்களுக்கும் அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு