வலைப்பதிவர் திருவிழா நடப்பது பற்றிய எனது நேர்காணல் www.ippodhu.com இல்.

’தமிழின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்பவர்கள் வலைப்பதிவர்கள்’
எழுதியவர் நாகா அதியன்-


August 20, 2015
‘‘என்னோட பத்தாவது ரிசல்ட்ட அடுத்தநாள் பேப்பர்ல வந்தபிறகு தான் தெரிஞ்சிட்டேன்” இது 20 வருடங்களுக்கு முன்பு. ஆனால் இன்று ப்ளே ஸ்கூல் போகிற குட்டீஸ் கூட டேப்லட், ஐபேட் கேட்கிற அளவிற்கு காலம் வெகு விரைவாய் பயணிப்பதை நாம் பார்க்க முடிகின்றது, கேட்கவும் முடிகின்றது.
இந்த அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் நிறைந்து இருக்கின்ற இக்காலகட்டத்தில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாய் உயர்ந்திருக்கின்றது. இதில் தங்களுக்கே உரிய தனித்த அடையாளத்தோடு பயணிப்பவர்கள் வலைப்பதிவர்கள்.
முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த கோஷ்டி மோதல் முதல் மோடியின் வெளிநாட்டுப் பயணம் வரை சரியான புள்ளி விவரத்தோடு உண்மைகளை சுடச் சுட எழுதுவதில் கில்லாடிகள் வலைப்பதிவர்கள். இவ்வலைப்பதிவாளர்களை ஒருங்கிணைத்து புதுக்கோட்டையில் ‘‘வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா” நடத்த மும்முரமாய் இயங்கிகொண்டிருக்கும் கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர் என பன்முகத்தோடு இலக்கிய உலகில் பயணிக்கும் நா.முத்துநிலவன் அவர்களிடம் பேசினோம்.
பட்டிமன்றம், கலை இலக்கிய இரவு என பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்த நீங்கள் வலைத்தளத்தில் தீவிரமாய் இயங்கக் காரணம் என்ன?
2011 இல் ‘‘வளரும் கவிதை” எனும் பெயரில் வலைப்பக்கம் தொடங்கி எழுத ஆரம்பிச்சேன். என்னைப் பொறுத்தமட்டில் தமிழை அறிவியல் பூர்வமாக கொண்டு செல்வதற்கான முயற்சி தான் வலைப்பக்கம். உலகம் முழுவதும் எழுதக்கூடியவர்களோடு நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கும், நம்மை நாமே அப்டேட் செய்துகொள்வதற்கான ஆரோக்கியமான களம் இதுதான். அதனடிப்படையில் தான் புதுக்கோட்டையில் ‘‘கணினித் தமிழ்ச்சங்கம்” எனும் அமைப்பை உருவாக்கி வலைப்பக்கத்தில் எழுதக்கூடியவர்களை, எழுத முயற்சிப்பவர்களை ஒருங்கிணைத்து இலக்கியப் பயிற்சிப் பட்டறை ஒன்று நடத்தினோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில், நம் மண்ணில் இளையவர்கள் புத்தம் புதிய சிந்தனைகளுடன் எழுதுகிறார்கள் என்பதை நினைக்கும் போது எங்களுக்கு பெருமையாக இருக்கின்றது......

To continue reading- http://ippodhu.com/தமிழின்-வளர்ச்சியை-அடுத/

16 கருத்துகள்:

  1. உண்மைதான் ஐயா
    தமிழின் வளர்ச்சியை வலைப் பூ
    நிச்சயம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திற் செல்லும்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  2. தமிழ் வாழ அந்தத் தமிழோடு நாமும் வாழ...
    வாழ்க வளமுடன்

    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. அய் அருமை....நல்லா நடத்தனுமே என்ற கவலையும் கூட வருதே

    பதிலளிநீக்கு
  4. அருமை அண்ணா , மகிழ்ச்சியாக இருக்கிறது . பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. பேட்டிக்கு - மகிழ்ச்சி!

    விழா சிறப்புற - வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  6. //ippodhu.com/ இல் தங்களின் பேட்டி படித்தேன் . வலைப்பதிவர் திருவிழாவின் சிறப்பையும் தேவையையும் அழுத்தமாக சொல்ல்விட்டீர்கள். ஐயா.
    ஒரு பிரம்மாண்ட சந்திப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது வலை உலகம்
    கலக்குவோம்

    பதிலளிநீக்கு
  7. அருமையான பேட்டி அய்யா! பதுக்கோட்டை கணினி தமிழ்ச் சங்கம் பற்றியும் தெரிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
    த ம 3

    பதிலளிநீக்கு
  8. பன்முக நோக்கிலான தங்களது நேர்காணல் அருமை.

    பதிலளிநீக்கு
  9. கேள்வியும் அதற்கு தாங்கள் தந்த பதிலும் வெகு சிறப்புங்க அண்ணா.
    அசத்தப்போவது யாரு?
    புதுகைப்பதிவர்கள் அல்லவா?
    வாழ்த்துகள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  10. தாங்கள் கொடுத்த சுட்டியின் வழியே ‘இப்போது’ என்ற இணைய இதழுக்கு சென்று, தங்களது முழு பேட்டியையும் படித்தேன். ’தமிழின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்பவர்கள் வலைப்பதிவர்கள்’ என்ற தலைப்பில், வலைத்தளம், பேஸ்புக், வாட்ஸ் அப்’ பற்றி நல்ல விரிவான விளக்கம் தந்தீர்கள்.

    புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் பற்றிய முழு விவரம் கொண்ட ஒரு வலைப்பதிவை நீங்களோ அல்லது மற்றவர்களோ ஒரு பதிவை எழுதவும். அதற்கென்று தனியே வலைத்தளம் ( BLOG ) தொடங்கி விட்டீர்களா?

    பதிலளிநீக்கு
  11. தமிழின் வளர்ச்சியை கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம் ஐயா...
    தங்கள் பதிகள் அருமை...

    பதிலளிநீக்கு
  12. இப்போது.காமில் பேட்டி சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  13. நேர்காணலில் தங்களின் பதிலில் மொழி சார்ந்த சமூக நோக்கு பளிச்சிடுகிறது.

    பதிலளிநீக்கு