செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

காலம் - ஆகஸ்டு16 ஞாயிறு, மாலை 5 மணி
களம் -பி.வி.ஆர். மண்டபம்,  புதுக்கோட்டைதனிநபர் முயற்சியினால் விளைந்த நூலகம்
அதிலும் பெரும்பான்மை மூலவடிவிலான முதல்பதிப்பு நூல்களை தன்னகத்தே கொண்டிருக்கும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இந்த முயற்சி 
கடந்த 60 ஆண்டுகால சேமிப்பாகும்..

அவரது 75 வது வயதினை ஒட்டி பவளவிழா கொண்டாட்டம் நிகழ இருக்கின்றது. அப்போது விழாமலர் வெளியீடு மற்றும் நூல்கள் வெளியீடு , கூடுதலாக தனது வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் நூலகத்திற்கு விருப்பத்துடன் இன்றும் செலவிட்டுக்கொண்டிருக்கின்ற அவரைப் பாராட்டும்விதமாக நூலகவளர்ச்சி நிதி வழங்கல் என சிறப்பாக விழா நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு நடக்கவிருக்கின்றன.

வாசிப்பில் ஆர்வமுடையோர் அனைவரோடும் இந்த தகவலை பகிர்ந்து கொள்வதோடு ஆகஸ்டு 16, 2015 அன்று மாலை இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

தங்களின் பார்வைக்கு, கீழே அழைப்பிதழ்
தொடர்பிற்கு –
ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி
ஞானாலயா ஆய்வு நூலகம்,
6,
பழனியப்பா நகர்,
திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002
தமிழ்நாடு, இந்தியா.
தொ.பே. எண்: 04322-221059
மொபைல்: (0) 9965633140

-------------------------------------------------------- 
ஞானாலயா இணைய அழைப்பு - இணைப்பிற்கு - 
http://www.gnanalaya-tamil.com/2015/08/16.html
----------------------------------------  
(வழித்தடம் - பி.வி.ஆர்.திருமண மண்டபம்,  திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் அருகில் 
புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலை, திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் பேருந்து நிறுத்தம் அருகில்)

19 கருத்துகள்:

 1. விழா சிறக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்து மட்டும் போதாது, அங்குள்ள தமிழ் நண்பர்களுக்கும் முகநூல் வாட்ஸப் பில் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும்.

   நீக்கு
 2. பகிர்வுக்கு மகிழ்ச்சி முத்துநிலவன் அவர்களே..இனிவரும் காலங்களில் வலைதள முகவரியை முழுமையாகப் பயன்படுத்த ஆவண செய்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சிவா. “ஞானாலயா“ விவரத்தை, விக்கிப்பீடியாவில் ஏற்றிய நம் நண்பர் தஞ்சை முனைவர் ஜம்புலிங்கம் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பியமைக்கு நன்றி.

   நீக்கு
 3. எத்தகைய அரும்பணி! வணங்குகிறோம். கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களை. அவரை சிறப்பிக்கும் நல்லுள்ளங்களுக்கு பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 4. இன்றைய அஞ்சலில் அழைப்பிதழ் பெற்றேன். முடிந்தவரை விழாவில கலந்துகொள்ள முயற்சிக்கிறேன். விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தவரை வந்து என்ன செய்ய? விழா முடியும் முன்னே வந்துவிடுங்கள் அய்யா! (சும்மா..ஒரு இது.. வாருங்கள் அய்யா, கரந்தை ஜெயக்குமார் அய்யாவுடன் சேர்ந்தே கலந்து கொள்ளலாம்)

   நீக்கு
 5. பதில்கள்
  1. 15ஆம் தேதி திண்டுக்கல் வழியாகத்தான் -யானைச் சவாரிக்காக- கம்பம் போகிறேன். திரும்பும்போது நீங்களும் வந்தால் மகிழ்ச்சி.

   நீக்கு
  2. அவசியம் தனபாலனை அழைத்து வந்து விடவும். உங்களை விழாவில் சந்திக்கின்றேன். நன்றி.

   நீக்கு
 6. வணக்கம் கவிஞரே நலம்தானே.....
  விழா சிறக்க எமது வாழ்த்துகள்
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கொலைகாரரே! நலமாக அபுதாபி சென்றடைந்தீர்களா? புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, சென்னை என்று ஒரு ரவுண்டு வந்துவிட்டுப் பறந்திருக்கிறீர்கள்... ஒவ்வொரு வெளிநாட்டுப் பதிவரும் இப்படிச் செய்தால் நம் பதிவுலகம் இன்னும் பயனடையும்.. இல்ல..?

   நீக்கு


 7. ஐயா வணக்கம்!

  இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_5.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றியும் வணக்கமும் அய்யா. நான் சிறிதுநாள் வலைப்பக்கம் வரஇயலாதிருந்தேன். தங்கள் அன்பிற்கு நன்றி. பார்த்து மகிழ்வேன்.

   நீக்கு
 8. முக நூலில் பகிர்ந்துள்ளேன் ஐயா
  விழா சிறக்க வாழ்த்துக்கள்
  விழாவிற்கு அவசியம் வருகின்றோம் ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி அய்யா.
   விழாவில் நாம் இணைந்தே கலந்து கொள்வோம். காத்திருப்பேன்.

   நீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...