விசு விழா தந்த மகிழ்வும் பதிவர் சந்திப்பில் நெகிழ்வும்.


மதுரைத்தமிழன் யாரு? கண்டுபிடிங்க பாப்பம்..   சரி சரி க டைசியில் சொல்றேன்
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப்பதிவர் விசு (விசுAWESOME) அவர்களின் விசுவாசமின் சகவாசம்நூல்வெளியீட்டு விழா ஜூன்-6இல் வேலூரில் நடக்கவிருப்பதாகவும், விழாவில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைத்த சகோதரி கீதா (துளசி) பிற்பகலில் வலைப்பதிவர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்வதாகச் சொன்னவுடன் எனக்கும் ஆவல் பிறந்தது... 


நண்பர்களைச் சந்தித்து அளவளாவுவதை விட மகிழ்ச்சி வேறேது? அதுவும் வலைவழித் தொடர்பிலேயே மரியாதை வளர்த்துக் கொண்டு நேரில் காணும் ஆவலுடன் இருக்கும் பலநண்பர்ளைச் சந்திக்கும் வாய்ப்பைத் தவறவிடலாமா என்ன?
நம் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் திருச்சி வந்துவிட , நம் ஊமைக்கனவுகள்விஜூவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு மூவருமாக வேலூர் செல்வதாகத் திட்டம் ஆனால், விஜூ வர இயலவில்லை என்று தெரிவித்ததும், வலைச்சித்தரும் நானும் மாத்திரம் 05-06-15 (நள்ளிரவு 1மணி!) திருச்சியில் சந்தித்து, மறுநாள் அதிகாலை 6மணிக்கு வேலூர் சென்றடைந்தோம். அங்கு எங்களுக்கு முன்னதாக வந்துவிட்ட மதுரையைச் சேர்ந்த மூத்த வலைப்பதிவர் தருமி அய்யா, அறையைத்திறந்து எங்களை வரவேற்றதும் வியந்துபோனோம்!

நாங்க போய்ச் சேர்ந்து ஒருமணிநேரம் கழித்து, “எங்க நம்மை அழைத்த கீதாவைக் காணவில்லையே! என்று தொலைபேசித் தொடர்பில் கீதாவை அழைத்தால்... அவர் சொல்கிறார்...
இங்க நானும் மதுரைத் தமிழனும் சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்

எனக்கு என் காதுகளையே நம்ப முடியவில்லை!
மதுரைத் தமிழனா? அவர் எங்கே இங்கு வந்தார்...?!! அப்புறம் நினைவுக்கு வந்தது, “அவரும் அமெரிக்காவில் இருக்கிறார் இன்று நூல்வெளியிடும் விசுவும் அங்குதான் இருக்கிறார்..ஆக நண்பர்கள் இருவரும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார்களோ?

ஆனால், பிறகுதான் தெரிந்தது, மதுரைத் தமிழன் வருவது அவருக்கே தெரியாதாம்...!  http://avargal-unmaigal.blogspot.com/ அதாவது நெருங்கிய உறவினரின் திருமணத்திற்காக சென்னை வந்தவர், சென்னையில் அன்று மாலை நடக்கவிருக்கும் வரவேற்புக்கு வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு மனிதர் காலையில் கிளம்பி வந்திருக்கிறார்...!

அவரோடு... அன்று சந்தித்த வலைப்பதிவர் பட்டியல் சிறிதுதான் என்றாலும் மகிழ்வும் நெகிழ்வுமான பட்டியல்! பார்வையுள்ள பலரும் பார்க்க மறப்பதையும் மறக்காமல் பார்க்கும் ஆற்றல் வாய்ந்த பதிவர் திருப்பதி மகேஷ், தனது தம்பியுன் வந்திருந்தது நெகிழ்வுக்குக் காரணமானது! தம்பி உதவியுடன் பதிவுகள் போடுவதாகச் சொன்னார். (இந்தச் சந்திப்பு குறித்து இவர் எழுதியதையும் பார்க்க -http://tirupatimahesh.blogspot.com/2015/06/blog-post.html)

நீண்டநாளாக நான் சந்திக்க  விரும்பிய பாலக்காடு ஆசிரியர் துளசிதரன் - http://thillaiakathuchronicles.blogspot.com/ 
தமிழ்மணத்தில் நீண்ட நாளாக முதலிடத்தில் இருக்கும்- வேலூர்த் தோழர் ராமன்-http://ramaniecuvellore.blogspot.in/
சென்னையில் சந்திக்க வருவதாகச் சொல்லிவிட்டு டிமிக்கி கொடுத்த பாலகணேஷ் -
வேலூர் அருகிலுள்ள ஊரைச் சேர்ந்த நமது மூத்த பதிவர் ராய.செல்லப்பா- 
ஏற்கெனவே சென்னை, மதுரை, புதுக்கோட்டை எனப் பலமுறை சந்தித்திருந்தாலும், மீண்டும் மீண்டும் சந்திக்கத் தூண்டும் நண்பர், எனது வலைப்பக்க முன்னோடியான ஏஇஇஓ தி.ந.முரளிதரன் - http://www.tnmurali.com/
குறும்படப் புகழ் கோவைஆவி-
விழா முடிவானதிலிருந்து தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த வேலூர் அன்பேசிவம் சிவா-
இவர்களுடன் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தந்தவர்
அவர்கள் உண்மைகள்வலைப்பதிவர் மதுரைத் தமிழன்! இதுவரை தனது முகத்தையே காட்டிக்கொள்ளாமல் எல்லாரையும் சகட்டு மேனிக்குப் போட்டுவாங்கி லட்சக்கணக்கில் உறிட்டு (அவர்பாணியில் சொன்னால் குட்டு அல்லது பூரிக்கட்டை அடி) வாங்கிய மனிதர் நேரில் அமைதியாகத் தெரிந்தார்! பேசினால் பேசுகிறார்! கேட்டால் பதில் சொல்கிறார்! ஆனால், சிறந்த பண்பாளர் என்பது பேசும் போதே தெரிந்தது!  பேர்தான் மதுரைத் தமிழனாம்! இப்போது சொந்தக்காரர் எல்லாருமே சென்னையில்தானாம்! (எனவே இவரை இனி சென்னைத் தமிழர் என்றே அழைக்கலாமோ?!!?)

விழா காலை 11மணிக்கு மேல்தான் தொடங்கியது-
தான்படித்த ஊரிஸ் கல்லூரியில் இப்போது பேராசிரியராகப் பணியாற்றும நண்பர்களை அறிமுகம் செய்தார் விசு.

வேலூரின் புகழ்பெற்ற -125ஆண்டுகளாம்!- ஊரிஸ் கல்லூரி முதல்வர் திரு அருளப்பன் அவர்கள் தலைமையேற்றார்.

வேலூரின் அடையாளமாகத் திகழும் உலகப் புகழ்பெற்ற விஐடி பல்கலைக்கழக வேந்தர் திரு விஸ்வநாதன் அவர்கள் நூலை வெளியிட்டுப் பேசினார்கள். தமிழ்நாட்டின் இலவசங்களைக் கிண்டலடித்து அவர் நகைச்சுவையாகப் பேசியது அந்த இடத்தில் வியப்பாகத்தான் இருந்தது!

வாழ்த்துரை தொடங்கிச் சிலர்பேசியதும் எனக்கு முன்னால் பேசியவர் பேச்சு அலுப்பூட்டியதாலோ என்னவோ விஐடி வேந்தரும் கல்லூரி முதல்வரும் கிளம்பி விட்டார்கள் (படத்தில் பாருங்கள் நாற்காலி காலியாயிருக்கும்)
பிறகு வழக்கம்போல நான் சிறிதுநேரமே- பேசி முடித்தேன்.

விசுவின் பேச்சு அவரது எழுத்தைப் போலவே நகைச்சுவை மிக்கதாக இருந்தது. அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கல்லூரியில் அவருடன் படித்த நண்பர் பலரும் வந்திருந்தது விசு அவர்தம் நட்பின் விழுமியத்தைக் காட்டியது!

மதிய உணவின்பின் வலைநட்புச் சந்திப்புக்கு நானும் தனபாலும் விரட்டி விரட்டி அழைத்தும் விழா ஏற்பாட்டாளர்- கீதா புத்தக விற்பனையில் உட்கார்ந்து, தாமதமாக வந்தார்! (அன்றைய புத்தக விற்பனை வரவு அனைத்தும், தமது தாயார் நடத்தும் ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளிகளுக்கே வழங்கப் போவதாக நண்பர் விசு அறிவித்ததாலும், மேடையில் இருந்த என்னைத் தவிர(?)அனைவருக்கும் புத்தகத்தை அவரே வழங்கியதாலும் நான் கீதாவிடம் தொகை கொடுத்து ஒரு நூலை வாங்கிக்கொண்டேன்.)

வந்திருந்த நண்பர்கள் 15பேரும் படம்பிடித்துக் கொண்டோம்.
(இதில் அவர்கள் உண்மைகள் மதுரைத்தமிழன்யாரென்று கண்டுபிடித்துச் சொல்பவர்க்கு அவரிடமிருந்து ஒரு பூரியை பரிசாகப் பெற்றுத்தர சிபாரிசு செய்கிறேன்..)

கோவை ஆவி நடித்த குறும்படத்தில் ஆழ்வார்க்கடியான் போல- இருந்த படத்தைக் காட்டினார்! அச்சு அசலாக ஆனால் தொப்பையில்லாத ஆழ்வார்க்கடியானாக இருந்தார் மனிதர்!

விசு வெளியிட்ட நூலை அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை அழகாகச் செய்திருந்த பாலகணேஷ் பாராட்டுக்குரியவர். நூல் இடையிடையே இடம்பெற்றிருந்த படங்களை வரைந்திருந்த நண்பர் தமிழ் (குமுதம், கல்கி யில் வரையும் தமிழ்தான்) மிக அருமையான ஓவியராக மட்டுமின்றி நல்ல மனிதராகவும் இருந்தார், வலைப்பக்கம் இன்னும் உருவாக்கவில்லை என்று சொன்ன உடனே நம் திண்டுக்கல் தனபாலன் அவருக்கென்று ஒரு பக்கத்தை உருவாக்கித் தருவதாகச் சொல்லிப் பேரைக் கேட்க, நான் தமிழோவியன்.ப்ளாக்ஸ்பாட்.காம்என்று வலைப்பக்கத்திற்கு ஒரு பேரைச் சொல்ல விரைவில் உருவாக்குவதாக மகிழ்ச்சியுடன் உறுதிகூறினார் தமிழ்!

மதுரைத் தமிழன் மாலையில் சென்னையில் இருக்க வேண்டிய காரணத்தால் விரைந்து கிளம்ப, அவருடன் முரளிதரனும் சில நண்பர்களும் கிளம்ப, நாங்களும் கிளம்பத் தயாரானதும்தான் மாலைச் சிற்றுண்டி எனதுஎன்று முன்பே வேலூர் நண்பர் அன்புசிவம் சொல்லியிருந்தது நினைவுக்கு வர, தனபாலன் நினைவு படுத்திக் கேட்க இனிப்பு சமோசா காஃபியை அன்புடன் அனைவர்க்கும் வழங்கினார் அன்புசிவம். 

அப்போது பார்த்து
, விசுவுக்கு தொலைபேசி வாழ்த்துச் சொன்னார் -லண்டனிலிருந்து-வலைநண்பர் கோவில்பிள்ளை. யாருக்கு கோவில்பிள்ளையைத் தெரியும் என விசு கேட்க, “எனக்குஎன்று சட்டென்று கைதூக்கி தனபாலன் பேச, பிறகு சின்னப்பிள்ளைகள் போல அனைவரும் நான் நீ என்று போட்டிபோட்டு வாங்கி வாங்கிப் பேசினோம். (பில் கட்டப் போறது அவர்தானே? பாவம்! அவரும் அனைவரிடமும் பேசினார் - http://koilpillaiyin.blogspot.in/)

கிளம்பிக்கொண்டிருந்த போதுதான் திண்டுக்கல் தனபாலன், “ஆகா..மறந்துட்டனேஎன்று பதற, அதை நினைத்தே அஞ்சிக் கொண்டிருந்த நான் ஆகா மனுஷர் முழிச்சிக்கிட்டாரேஎன முழிக்கத் தொடங்கினேன்... அட என்ன முத்துநிலவன் அய்யா எல்லாரும் கிளம்பிட்டாங்களே! நிறையப்பேர் போயிட்டாங்க?என்று வருத்தப்பட்டுக் கொண்டே நமது மலேசிய வலைநண்பர் ரூபன், நமது மூத்த வலைப்பதிவர் மதுரை ரமணி அய்யா அண்மையில் மலேசியா சென்றிருந்த போது தந்தனுப்பியிருந்த எனக்கான விருதை (?) வெளியில் எடுத்தார் வலைச்சித்தர்! (இதுபற்றிய ரூபன் பதிவு காண-  http://www.trtamilkkavithaikal.com/2015/05/2015.html )

அடடா.. அங்க போயிருந்தப்ப தர முயற்சி செய்தார்.. நான் அவரிடமிருந்து எப்படியோ தப்பிவந்துவிட்டேன்.. ஆனாலும் விடாதுவிருது மாதிரி கொடுத்தனுப்பிக் கொடுத்துவிட்ட ரூபனின் அன்பை உதாசீனப்படுத்த மனமின்றிப் பெற்றேன்.

பிறகு உடு ஜூட்... மாலை 6மணிக்கு வேலூரில் கிளம்பி வழிநெடுக எம்.ஜி.ஆர்., சிவாஜியின் பழைய பாடல்களைப் பார்த்து-கேட்டுக் கொண்டே திருச்சிக்கு வந்து சேர்ந்தோம்.
தனபாலன் அய்யா, தருமி அய்யாவைப் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட போது இரவு மணி10!

பொதிகையில் வந்த எனது நேர்காணலைப் பார்த்த தனபாலன், யூட்யூபில் ஏற்றித்தருவதாகச் சொல்ல, அவரிடம் தந்திருந்த டிவிடி அவர் போனபின் காரின் பின்சீட்டில் கிடந்தது! மனிதர் தூக்கத்தில் (அ) பாடல்களின் மயக்கத்தில் மறந்திட்டார்போல!

நண்பர் விசுவைப் பற்றிப் பேசிய அனைவரும் அவரது அம்மாவின் சேவைகளை மறக்காமல் பேசியது மனத்தை நெகிழச் செய்தது. தனியொரு மனுஷியாக பலபாடு பட்டு எட்டுப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்ததோடு வேலூரின் அருகில் இரண்டு மூன்று ஊர்களில் கண்-காது-வாய் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளிகளை நடத்தி இன்றுவரை தொடர்ந்து உதவிகள் செய்துவரும் அவரது சேவை உள்ளத்தைப் பாராட்டுவதில் தவறேது?!

என் விழாவில் பேசிய எல்லாரும் அம்மாவைப் பத்திப் பேசியிருக்காங்க.. இந்த விடியோவைப் போட்டுக் காட்டி விழாச்செலவை அம்மாகிட்ட கேட்டுறவேண்டியதுதான்என்று அதையும் நகைச்சுவையாகச் சொன்ன நண்பர் விசுவையும், இந்த நூல்வெளியீடு தொடர்பான வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டே பதிவர் சந்திப்புக்கும் பலபாடு பட்ட சகோதரி கீதா மற்றும் நண்பர் துளசியின் அருமைகளை நினைத்துக் கொண்டும் வீடுவந்து சேர்ந்தேன்.

                   ------------------------------------------------

54 கருத்துகள்:

  1. அங்கு வரமுடியவில்லையே
    என ஏக்கத்தைத் தந்தாலும்
    நேரடியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைப் போன்ற
    உணர்வினைத் தங்கள் பதிவு தந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம் நலம்தானே?
      நீங்கள் வரஇயலாவிட்டாலும் -ரூபன் வழி- தங்களைப் பற்றிய பேச்சு வந்துவிட்டது அய்யா. நன்றிகள் பல.

      நீக்கு
  2. ஒவ்வொரு நிகழ்வையும் மறக்காமல் சொல்லி உள்ளீர்கள் ஐயா... மீண்டும் ஒருமுறை அந்த நாளுக்கு சென்று வந்தது போல் மகிழ்ந்தேன்...

    கண்ணை சுழற்றி அடிக்கும் தூக்கத்தால் டிவிடி எடுத்துக் கொள்ள உண்மையில் மறந்து விட்டேன்... மன்னிக்கவும் ஐயா...

    தமிழ் அவர்களின் கைபேசி எண் எனக்கு அனுப்பவும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ அரை மயக்கத்தில் உ ங்களைத் திருச்சியில் விட்டுவந்தேனே? நானும் அசந்திருந்தால் புதுக்கோடடை வந்திருக்கும்... இங்கேயே பிடித்து உட்கார வைத்து வலைப்பக்க வளர்ச்சிபற்றி ஒரு வகுப்பை நடத்தியிருக்கலாம்..வடை போச்சே

      நீக்கு
  3. அய்யா இது (வெளியிட அல்ல) பார்வையற்ற என்று தாங்கள் குறிப்பிட்டுள்ளவர் பெயர் திருப்பதி மகேஷ். அவருடன் வந்திருந்தவர் அவரது தம்பி (நண்பறல்ல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா நன்றிய்யா... தங்கள் கருத்து சரியானதுதான் என்பதால் உடனே திருத்திவிட்டேன். மீண்டும் நன்றி SKCக்கும்!

      நீக்கு
  4. பதிவினைக் கண்டேன். நண்பர்கள் அனைவரையும் சந்தித்து தாங்கள் உரையாடியதைப் பகிர்ந்த விதம் நாங்கள் அங்கு வராத குறையை நீக்கியது. பகிர்ந்த தங்களுக்கு நன்றி. நூல் ஆசிரியர் விசுவிற்கும், அரிய சேவை செய்து வரும் அவரது தாயாருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதானே மகிழ்ச்சி! உண்மையாகவே மகிழ்ந்தோம் அய்யா.
      விரைவில் பதிவர் சந்திப்பு பற்றித் திடடமிடுவோம். நன்றி அய்யா

      நீக்கு
  5. அருமையான விழா ஐயா
    படிக்கப் படிக்க கலந்து கொள்ள இயலவில்லையே என்ற வருத்தம்தான் மேலிடுகிறது
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமே நடத்தப் போகிறோமல்லவா? அப்போது தீர்த்துக் கொண்டால் போச்சு! நன்றி அய்யா

      நீக்கு
  6. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!
    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
    http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
    மற்றும்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    t m 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்து பார்த்து கருத்திடுவேன். வாழ்த்துகள் நண்பரே.
      தங்களின் வலைக் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
      இன்று போல அல்ல இதைவிடவும் வளர்க வாழ்க!

      நீக்கு
  7. ஐயா! அருமையான தொகுப்பு. அப்படியே! அது சரி......எங்களையும் இப்படிப் போட்டுப் புகழ்ந்து தாக்கியிருக்கீங்களே ஐயா....இது அடுக்குமா..!!!ஹஹ்ஹஹ்ஹ்....விசு அவர்களின் தாயைப் பற்றி அவர் நிறைய எங்களிடம் பேசி இருக்கிறார் ஐயா. மிக உயர்ந்த பெண்மணி!!! அவர் அத்தனை செய்யும் போது எங்கள் பணி மிக மிகச் சிறியது...கடுகினும் சிறிது என்பதே எங்களது தாழ்மையான கருத்து.

    மதுரைத் தமிழன் அவர்கள் தனது புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் எங்களிடம். அதனால் தான் நாங்கள் பதிவு எழுதினாலும் அதை வெளியிடாமல் வேறு புகைப்படங்கள் வெளியிடலாம் என்று நினைத்திருந்தோம். எங்கள் பதிவு வர தாமதமாகும்....

    அழகாக சிறிது நகைச்சுவை இழையோட தொகுத்து அளித்திருக்கின்றீர்கள்...ஐயா!

    மிக்க நன்றி ஐயா மீண்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி கீதாவை சென்னைப் புத்தகத் திருவிழாவிலேயே பார்த்தேன். துளசி ஆசிரியரைத்தான் பார்க்க இயலாத ஏக்கமிருந்தது. அதுவும் விசுவிழாவல் தீர்ந்தது. தங்கள் துணைவியாரை சகோதரி கீதா அறிமுகப்படு்த்திய போது மிகவும் மகிழ்ந்தேன். அவர்களுக்குத் தமிழ் தெரியாத எனக்கு மலையாளம் தெரியாத நிலையில் அதிகம் பேச இயலாது போனது இருப்பினும் விரும்பி வந்திருந்த அவர்களின் அன்புக்கு மொழி ஏது? அவர்களுக்கும் என் வணக்கத்தைச் சொல்லுங்கள்.

      நீக்கு
  8. விசு (விசுAWESOME) அவர்களின் “விசுவாசமின் சகவாசம்“ நூல்வெளியீட்டு விழா பற்றிய மகிழ்ச்சியான பதிவினுக்கு நன்றி.

    // வந்திருந்த நண்பர்கள் 15பேரும் படம்பிடித்துக் கொண்டோம்.
    (இதில் அவர்கள் உண்மைகள் “மதுரைத்தமிழன்“ யாரென்று கண்டுபிடித்துச் சொல்பவர்க்கு அவரிடமிருந்து ஒரு பூரியை பரிசாகப் பெற்றுத்தர சிபாரிசு செய்கிறேன்..)//

    படத்தில் உள்ளவர்கள் பெயரினை, உங்கள் பதிவுகளில் பெரும்பாலும் குறிப்பிடும் நீங்கள், இப்போது மதுரைத் தமிழனுக்காக மற்றவர்கள் பெயரையும் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். மற்றவர்கள் பெயரை மட்டும் தெரிவித்து இருந்தால் மதுரைத் தமிழனை மட்டும் நாங்கள் தனியாகவே தெரிந்து கொண்டு இருப்போம். (பூனைக் குட்டி ஒருநாள் வெளியே வரத்தான் போகிறது)

    த.ம.8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரைத் தமிழனின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் இல்லையா? அதற்குத்தான் இந்த ஆட்டம்.. வேறொன்றுமில்லை. விரைவில் மற்றவர் பெயரைத் தெரிவிப்பேன்.. அய்யா பொறுத்தருள வேண்டுகிறேன்.

      நீக்கு
  9. விளக்கமான பதிவு! நேரில் கலந்து கொண்ட உணர்வு! நன்றி! தம்பி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கமும் நன்றியும் அய்யா.
      அம்மாவைப் பிரிந்து ஐந்துஆண்டுகளாயினவா?
      கவிதை பார்த்து நெகிழ்ந்தேன். உடல் நலம் பேணுங்கள். நன்றி

      நீக்கு
  10. வணக்கம்
    ஐயா.

    ஒவ்வொரு நிகழ்வையும் தங்களின் கருத்தில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஐயா... பதிவை படித்த போது அறிந்து கொண்டேன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது என்று...
    விருது என்பது தங்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி மகுடம் ஐயா... இருக்கும் காலத்தில் இன்னும் பல வெற்றிகள் வந்தடைய எனது வாழ்த்துக்கள் ஐயா த.ம 10

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பினால் நடந்தது, நடப்பது நல்லதாய் அமைந்தது, இனியும் அமையும். நன்றி ரூபன்.

      நீக்கு
  11. இனிய சந்திப்பு நிகழ்ந்தது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா வணக்கம். தாங்களும் வருவீர்கள் என்று எதிர்பார்த்தோம். தாழ்விலை. புதுகைப் பதிவர் சந்திப்புக்கு அவசியம் வந்துவிடுங்கள்

      நீக்கு
  12. பதில்கள்
    1. நாமும் ஒரு வேன் பிடித்திருக்கலாமோ? எனது தொடர் நிகழ்வுகளாலும் அய்யா மாறுதலாலும் இது தோன்றாமலே போய்விட்டது. சாந்தி சமாதானம் நிலவுக.

      நீக்கு
  13. விழா சிறப்பாக அமைந்தமைக்கு வாழ்த்துகள்
    பின்னால் நிற்கும் சிவப்பு சட்டைதானே மதுரைத்தமிழன் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஸ்கு புஸ்கு நீங்க என்ன சொன்னாலும் சிக்கமாடடம்ல..?

      நீக்கு
    2. ஐயா, அந்த சிவப்பு சட்டைக்காரர் நான்தான். ஆகவே ஆட்டத்திலிருந்து ஒருவர் காலி

      நீக்கு
    3. ஆமா இப்படியே காலி பண்ணிக்கிட்டு வந்தா ஒருவேளை கண்டுபிடிக்கலாமோ? பாக்கலாம் என் தங்கை மைதிலியாவது மதுரைத்தமிழனைக் கண்டுபிடிக்கிறாரா என்று... வெய்ட்டிங் மைதிலீ...உன்னை எத்தனை தடவை கலாய்ச்சிருக்காரு அந்த மதுரை கை! எங்க கண்டுபிடி பாக்கலாம்!

      நீக்கு
  14. தருமி ஐயாவுக்கு பின்புறம் நிற்பவர்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் அண்ணா.
    குட்டி பதிவர் சந்திப்பும் விசு அவர்களின் நூல் வெளியீடும் மகிழ்வு தருகிறது. உங்கள் விருதிற்கும் வாழ்த்துகள், கிடைக்க வேண்டியது நீங்கள் எங்கு ஒளிந்தாலும் வந்துவிடும் அண்ணா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமாம்மா..? இணையக் கல்வி நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு ஏன் அப்பப்ப இடைவேளை? நல்ல புதுப்புது செய்திகள் தொடர்க. (அப்பாவிடம் சொல்லி அடுத்து நான் போட இருக்கும் பதிவில் உள்ள முகவரிக்கு நூல்கள் அனுப்பவும்)

      நீக்கு
    2. நலம் அண்ணா.. இடைவெளி விடமால் எழுத முயல்கிறேன் அண்ணா..
      அப்படியா? பார்க்கிறேன் அண்ணா

      நீக்கு
  16. இப்படி செய்யலாமா நண்பரே? நாங்கள் புறப்பட்டபிறகு நீங்கள் சமோசாவும் இனிப்பும் காபியும் சாப்பிட்டதாகச் சொல்கிறீர்களே, இது தகுமா, இது முறையா, இது தரும்ம் தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தப்புத்தான் அய்யா. மன்னித்துக் கொண்டே இந்தச் செய்தியையும் கேட்டுக்கொள்ளுங்கள். நீங்களெல்லாம் போய்விட்டதாகச் சொல்லி அந்தப் பாவி கோவைஆவி ஒன்றிரண்டை-உங்கள் பங்காக- சேர்த்து வாங்கிக்கொண்டதாக ஒரு தகவல் கிடைத்தது...கவனிக்கவும்.

      நீக்கு
    2. அதானே! நானும் கிளம்பியதற்குப் பிறகே வந்தது போல...

      நீக்கு
    3. பிற்படுத்தப் பட்டவர்க்கே சமோசா சே! சலுகை னு பெரியார் சொல்லியிருக்கார். நீங்க ஏன் முற்பட்டவராக -கிளம்பி- போனீர்கள் நண்பரே? அதுதான் வடை போச்சு! (இருந்தாலும்
      உ ங்கள் ஊர்க்கார அன்புசிவம்தான் ஸ்பான்சர்...விடாதீங்க..)

      நீக்கு
  17. திருச்சி வரை இனிய புதுக்கார்ப் பயணம். ஒரு மணிக்கு மதுரை வந்து சேர்ந்த பின் ...தூக்கம் ...தூக்கம் ... அப்படி ஒரு தூக்கம்.

    இனிய விழா. அம்மாவுக்குப் புகழ் சேர்த்தார் விசு.

    மரத்தடி பதிவர் சந்திப்பும் நன்கிருந்தது.

    நீங்களும், டி டியும் என் 'room mate‘ ஆக இருந்தது மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அறை-நண்பரே! தங்கள் அனுபவங்களை முழுமையாகக் கேட்கவிடாமல் எம்.ஜிஆரும் சிவாஜியும் சதிசெய்துவிட்டார்கள். அப்பறம் அந்த தூக்கமயக்கம் நம்மை -இல்லை இல்லை உங்களை தூக்கிக்கொண்டு போய்விட்டது. (நான் எங்கே தூங்கினேன்.?) மீண்டும்தான் சந்திப்போமே? அப்ப உங்களை மட்டும் கடத்திக்கொண்டு போய்விடத் திட்டமுள்ளது.

      நீக்கு
  18. விசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்! அருமையாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விசுவுக்கும் ரொம்ப மகிழ்ச்சி.. பேசிக்கொண்டேஏஏஏஏ இருந்தார். நீங்கள் வருவீர்கள் என்றல்லவா எதிர்பார்த்தோம்? ஏன் அய்யா வரல?

      நீக்கு
    2. ஓ! நீங்கள் டெல்லியிலல்லவா இருக்கிறீர்கள்? சென்னைப் புதத்கக் காட்சியில் சந்தித்தது நிழலாடுகிறது. இந்தப்பக்கம் வரும்போது நண்பர்களையெல்லாம் சந்திக்கும் காலஅட்டவணையோடு வாருங்கள்..சந்திப்போம்.

      நீக்கு
  19. இத்தனை பேரையும் சந்தித்ததில் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த விசு அவர்களுக்கு நன்றி.
    எதிர்பாராத இன்ப அதிர்ச்சி மதுரைத் தமிழனை சந்தித்தது. அதிரடியாக பதிவுகள் தந்து பின்னிப் பெடல் எடுக்கும் மதுரைத் தமிழன் சாந்த சொரூபனாகவே காணப்பட்டார். தனது புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று பலரையும் கேட்டுக் கொண்டார் ம.த
    வேலூரின் எழுத்தாளரும் பதிவருமான உஷா அன்பரசு அவர்களை சந்திக்க முடியாமல் போனது மட்டும் சற்று ஏமாற்றமே.
    புதுக்கோட்டை சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் முரளி. அதுதானே நம் எதிர்பார்ப்பும்? மகிழ்ச்சிதான்.ஆனால்,
      நாம்தான் அதிகம் பேச முடியாமல் போய்விட்டது முரளி.
      சென்னை வரும்போது 20,21-06-2015 பேசுவோம். உண்மைதான் எதிர்பார்த்ததை விட மதுரைத் தமிழர் சாந்தியாகவே -சே! சாந்த சொரூபியாகவே (ஒரு வகையில் அப்பாவிமாதிரி?) இருந்தார்ல? உஷா அன்பரசு பத்திரிகைக் காரர். வருவது கடினம்தானே? நன்றி

      நீக்கு
  20. விழாவினை நேரில் பார்த்த உணர்வு.

    தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் நம் பதிவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது இப்படி எங்காவது சிலராவது சந்தித்து, அதுபற்றி எழுதினாலே எல்லாரும் அந்த அனுபவங்களைப் பெற்றது போலாகுமல்லவா?

      நீக்கு
  21. விழாவில் வந்து கலந்து கொண்ட மகிழ்ச்சியை தங்கள் பதிவு தந்து. மிக்க நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  22. தங்கள் பயணத்தையும் வலை பதிவர் சந்திப்பையும் அறிய செய்தற்கு நன்றி!! த.ம13

    பதிலளிநீக்கு
  23. மிகவும் அருமையான ஒரு விழா. பதிவர்கள் பலரைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. புதுக்கோட்டையில் சந்திப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம்.. விரைவில் திட்டமிட்டுத் தேதியை நம் வலையுலக முன்னோடிகளோடு கலந்து பேசி அறிவிப்போம்..

      நீக்கு
  24. விழாவிற்கு வரமுடியவில்லை என்கிற வருத்தம் இருந்தது ..
    நண்பர்கள் தொடர்ந்து கால் செய்து கொண்டே இருந்தார்கள் ..
    வருத்தம் தான்
    இருந்தாலும் உங்கள் பதிவு அந்தக் குறையை போக்கிவிட்டது
    தம +

    பதிலளிநீக்கு
  25. விழா அருமையாக, அதனின் அருமையாக பதிவர் சந்திப்பு, தங்கள் பதிவின் வழியாக கிடைத்தற்கு நன்றி அய்யா, வணக்கம்.

    பதிலளிநீக்கு