தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

வியாழன், 21 மே, 2015

முதல்மதிப்பெண் எடுப்பவர் முதல்தர மாணவரா?பத்தாம்வகுப்புத் தேர்வுமுடிவு – மாநில முதலிடம் 41பேர்! மற்ற திறமை, பங்கேற்பையும் பார்த்து, “முதல்“ இடங்களைத் தீர்மானிக்கலாமே!

உதாரணமாக  மதிப்பெண் தவிரவும் இதர திறமைகள், ஈடுபாடுகளைக் கணக்கிடலாம் அவற்றையும் ஆண்டுமுழுவதும் பார்த்து தொடர் மதிப்பிட்டு “மாணவரதரத்தை“ நிர்ணயம் செய்யலாமே!


பள்ளி மாணவரிடையே பொதுச்சேவையில்  ஈடுபட்டிருக்கிறாரா? (Service Mind)

மரம்நடுதல், ஏழைமாணவர் உயர்கல்விக்கு உதவி.. மற்ற மாணவரோடு ஒருங்கிணைந்து.. தேசிய மாணவர் படை (NCC)அல்லது மாணவர் நாட்டுநலப் பணித்திட்டம் (NSS) பங்கேற்பு  Etc. “கம்யூனிடி“ ஈடுபாடு
மாணவர் ஒருங்கிணைப்பில் ஈடுபட்டிருக்கிறாரா? (Leadership Quality)
     பள்ளிவிழா, பிறபள்ளிகளில் நடக்கும் விழாக்களில் பங்கேற்பு, இதற்கு ஆசிரியர் – மாணவரிடையே “முன்னோடி மாணவர்“ எனும் பெயர் எனலாம்.
அறிவியல் (அ) விளையாட்டு (அ) நுண்கலை ஏதாவதொன்றில் ஆர்வம்..
பொது அறிவில் ஆர்வமுள்ளவரா? (General Knowledge)
பொதுஅறிவு என்பது “ஜி.கே.புக்“ படித்து வருவதல்லவே? தினமும் செய்திகளை அறிவது தானே? செய்தித்தாள் வாசிப்பது, தொலைக்காட்சி செய்திகளை அறிவது, வகுப்பில் அந்தச் செய்திகளை அனைவரும் அறியத் தருவது..போல
வெறும் புத்தகத்தை மேய்ந்து மதிப்பெண் எடுப்பதோடு, இவற்றையும் சிறந்த மாணவர்க்கான தகுதிகள் என எடுத்துக் கொண்டால், இவற்றிலும் மாணவர் ஈடுபாடு அதிகரிக்கும். உண்மையில் அதுதானே பள்ளிவாழ்க்கையில் மாணவர்க்கான கற்றலின் முழுமையாக இருக்க முடியும்!?
அதைநோக்கி நம் மாணவர்களைச் செலுத்த கல்வித்துறை திட்டமிடட்டும்.
 --------------------------------------------- 

இந்த ஆண்டு, இன்றைய செய்தியாக – 
பள்ளியிறுதி வகுப்பில் 499 மதிப்பெண் பெற்று 41 பேர் முதலிடமும்
192 மாணவ, மாணவிகள் 498உடன் இரண்டாமிடமும்,  
540 பேர்  மூன்றாமிடத்தில் 497பெற்று சாதனை படைத்துள்ளனர்

அறிவியலில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 853 பேர்
கணிதத்தில் 27 ஆயிரத்து 134 பேர்
சமூக அறிவியலில் 51 ஆயிரத்து 629 பேர் முழுமதிப்பெண் (100க்கு 100)!
பிற மொழிப்பாடங்களில் 500 க்கு 500 மதிப்பெண் பெற்று 5 மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்

இவ்வளவு பேர் முதலிடம் என்றால் உண்மையிலேயே “மதிப்பெண் எடுப்பது மட்டும்தான் மாணவர் தகுதியா?“ என்று யோசித்த போது எழுந்த சிந்தனையே இது.

ஆனாலும் ஒன்று இடிக்கிறதே!...
மதிப்பெண்ணுக்காகத்தான் இவ்வளவும் எனும் எண்ணம் மாணவர் மனத்தில் பதிந்துவிட்டால் எல்லாமே செயற்கையாகிவிடவும் பெரிய வாய்ப்பு உண்டு! இதுபற்றி இன்னும் யோசித்து, மாணவரின் இயற்கையான ஆர்வம், இயல்பான திறமை அதன் பள்ளிக்கால வளர்ச்சி பற்றி ஆய்வு செய்வதில் கல்வியாளர்கள் இன்னும் யோசிக்க வேண்டும் என்பதே இந்த “41பேர் மாநில முதலிடம்“ என்னும் செய்தி தந்திருக்கும் தூண்டுதல்! தொடர்ந்து யோசிப்போம்.. மாணவரின் இயல்புக்கேற்ற மதிப்பீடுகளைக் கண்டுபிடிப்போம் - இந்தப் பொருள் தொடர்பான நம் கட்டுரை படிக்கச் சொடுக்குக  -
http://valarumkavithai.blogspot.com/2013/06/blog-post_9.html

26 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. இல்லை நண்பரே, இப்போதிருக்கும் தவறான மதிப்பீடு பற்றிய எனது அதிருப்தியின் வெளிப்பாடுதான் இது. தெளிவை நோக்கி இனிமேல்தான் செல்லவேண்டும். செல்லவேண்டிய திசையும் தெரியவில்லை.. ஆனால் சென்றே ஆக வேண்டும் என்பது உறுதி

   நீக்கு
 2. நமது நாட்டில் மட்டும் தான் இந்த நிலை.
  பரிட்சையில் வாங்கும் மார்க் எண்ணிக்கையை வைத்து ஒரு
  மாணவன் முதல் தர மாணவனா என சொல்ல முடியாது என்பதே உண்மை.

  அதிக பட்சமாக, மாணவனின் திறமை எந்த அளவிற்கு படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என்னும் ஒன்றைத்தான் கணிக்க முடிகிறது.

  உண்மையிலே இது ஐ.க்யூ வின் ஒரு பகுதி மட்டுமே.

  அதைத் தவிர, ஒரு மாணவன் தனது வாழ்க்கையில் வெற்றி கானபானா இல்லையா என்பது ஐ.க்யூ வைத்தவிர , ஈ க்யூ எனச்சொல்லப்படும் ஒன்பது வேறு வித கணிப்புகள் வழியாகத்தான்.

  இந்த எமோஷனல் கோஷன்ட் எனப்படும் கணிப்பு ஒன்று ஐ.க்யூ வையும் உள்ளடிக்கியது.

  நோயல் கார்ட்னர் கல்வியாளர், இதைக்குறித்து பல ஆராய்ச்சிகள் செய்து இருக்கிறார்.

  இன்று 150 ஐ.க்யூ நபர்கள் பெரும்பாலும் ஐ.க்யூ. 90க்கும் கீழ் உள்ள வர்களிடம் வேலை பார்க்கிறார்கள்.

  ஆக, சிறந்த மாணவன் என்பது 1200 க்கு 1199 எடுத்த மாணவன் மட்டுமே எனச் சொல்லுதல் முடியாது என்பதே சரி.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா வணக்கம். கொஞ்சம் கூடுதலான வழிகாட்டுதலாகத் தெரிகிறது.. இன்னும் யோசித்தால் நல்ல வழிகள் தென்படலாம் தங்களின் பொறுப்பான நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி அய்யா

   நீக்கு
 3. பதில்கள்
  1. நாமெல்லாம் இன்னும் யோசிக்கணும் எட்வின். 6ஆம் வகுப்புப் பாடத்திட்டக் குழு விவாதத்தின் போது -2009இல்- நான் சொன்ன பாடமதிப்பெண் தவிர்த்த பிற திறன் மதிப்பீடுபற்றிய எனது இது போலும் சில யோசனைகளை அன்றைய பாடத்திட்டக்குழு இயக்குநர் திரு இளங்கோவன் அய்யா கவனமாகக் கேட்டு, தன் உதவியாளரை அழைத்துக் குறித்துக் கொள்ளச் சொன்னார்.. பின்னர் இன்றைய -6முதல் 9வகுப்பு- மதிப்பீட்டு முறையிலான மாற்றங்கள் வந்ததற்கு நானும் ஒரு தூண்டுதலாக இருந்தேன் என்றே நினைக்கிறேன். இதுபோலும் மாற்றுச் சிந்தனைகளை விதைத்துக் கொண்டே இருப்போம்.தரமானது வளருமல்லவா?

   நீக்கு
 4. வணக்கம்
  ஐயா.

  நல்ல தகவலை பகிர்ந்துள்ளீர்கள் யாவரும் அறிய வேண்டிய விடயம் பகிர்வுக்கு நன்றி ஐயா
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:
  வாருங்கள் ஐயா... வந்து பாருங்கள்.த.ம 3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ரூபன்
   பார்த்தேன் பகிர்ந்தேன்

   நீக்கு
 5. ஆகா...
  புதியதோர் சித்தனை!!!

  //192 மாணவ, மாணவிகள் இரண்டாமிடமும், 540 பேர் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர், //

  540 பேர் மூன்றாமிடமும்
  - என்று வரவேண்டும்தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே!
   தப்புன்னு தெரிஞ்சது நீங்க சுட்டிக்காட்டியதும் புரிந்தது. திருத்திவிட்டேன் நன்றி (நாம குமாரசாமியா என்ன? திருத்தமுடியாதுன்னு சட்டம் பேச?)

   நீக்கு
 6. இப்படி சொன்னால், இவ்வகை அளவீடுகளை செய்யப் போவது யார்? செய்பவர் சரியாக செய்வாரா? என்று கேட்கிறார்கள்.

  இதற்கான அளவுகோள்களை வரையறுப்பது எப்படி?

  மதிப்பெண் வளர்ச்சி யை அறிந்து கொள்வது போல் சிந்தனை வளர்ச்சியை அறிந்து கொள்வது எப்படி? இதற்கான தேர்வு முறைகளை எப்படி செய்வது? அதுவும் +2 ப்ராக்டிகல்ஸ் போல ஆகிவிடுமா? என ஆயிரம கேள்விகள் இருக்கிறது பதில் கிடைத்தால் புரிய வைக்க முடியும்

  கண்டு பிடிக்க பலரின் உதவியும் முயற்சியும் தேவை. உதவ முடியுமா உங்களால்? தவறாகவோ அல்லது புரிந்து கொள்ளாமலோ கேட்டிருந்தால் மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதையெல்லாம் முயற்சி செய்யலாம் என்பது என் யோசனை. அரசு அல்லவா கல்வியாளர்களை அழைத்து, அனுபவமுள்ள எழுத்தாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். தேவை என்பதை வலியுறுத்துவதே இப்போதைய வேலை. எப்படிச் செய்வது என்பது அடுத்த கட்டும். தவறாக நீ ஒன்றும் கேட்கல அனு! பலரும் கேட்காமலே இருக்கிற போது, நீயும் நானும் போன்றவர் கேட்க வேண்டிய கேள்விகள் இன்னும் என்னென்ன இருக்ிறது என்பதைத்தான் யோசிக்க வேண்டும்

   நீக்கு
 7. நல்ல சிந்தனை, நல்ல பகிர்வு. தினசரி செய்தித்தாள் வாசிப்பு என்பதும் உங்களது இப்பட்டியலில் இடம்பெறவேண்டும் என்பது என் எண்ணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைத் தனியாக ஒரு கட்டுரையாகவே வெளியிட்டிருக்கிறேன் அய்யா. தினமணியிலும் வந்தது - “பாடத்திட்டத்தில் ஊடகம்“ என்பது அந்தக் கட்டுரையின் பெயர். நமது வலைப்பக்கத்திலும் உள்ளதே! பார்க்க -http://valarumkavithai.blogspot.com/2014/01/blog-post_21.html நன்றி

   நீக்கு
 8. அருமையான பதிவு...இந்த மதிப்பெண் விவகாரம் பற்றி என் கருதும் இதே தான். தாங்கள் அடியேனின் புத்தக வெளியீடிர்க்கும் மற்றும் பதிவர் சந்திப் பிர்க்கும் வருவதை அறிந்தேன் . மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் வருவேன். அழைப்பிதழை உங்கள் வலைப்பக்கத்தில் இட்டு அனைவரையும் அழைக்கலாம் அல்லவா? நன்றி

   நீக்கு
 9. இவ்வாறு (10th & +2) முதலிடம் பெற்றவர்களின் இன்றைய நிலையோ வேறு...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கயாவது டப்பாவில் அடைந்து பணத்தை எண்ணிக்கொண்டு கிடப்பார்கள்.. அல்லது பலகோடி புரளும் தொழிலதிபர்களிடம் சிலவட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு அடிமைத் தொழில் செய்வர் வேற என்ன பண்ணிடப் போறாங்க.. “தன்பெண்டு தன்பிள்ளை...“ பாரதிதாசன் பாட்டு நினைவிற்கு வருமே?

   நீக்கு
 10. இப்படி மார்க் எடுக்கமுடியாமல் நான் பட்ட அவமானம் எல்லாம் கொஞ்ச நஞ்சம் அல்ல:((( ஏதோ மகி, நிறை காலதிற்குள்ளாவது மாற்றம் வரவேண்டும் அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதிப்பெண்ணைத் துரத்தும் உலகில் அறிவாளிகள் அவஸ்தைதான் எதார்த்தம் மைதிலி.. இதிலிருந்து அடுத்த தலைமுறைக் குழந்தைகளையாவது காப்பது நம் கடமை

   நீக்கு
 11. பெரியவர்கள் சிந்தித்து செயல் வடிவம் கொடுத்தால் நலம். அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விதைப்போம் களைநீக்கி நீர்வார்த்து பயிரிட அழைப்போம்..

   நீக்கு
 12. ஐயா எனக்கொரு ஆசை,
  கடந்த பத்து ஆண்டுகளில், முதலிடம் பெற்றவர்களின் இன்றைய நிலை என்ன என்பதை அறிய வேண்டும் ஐயா
  மதிப்பெண்ணே உலகம் என்னும் போக்கு மாற வேண்டும் ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதுக்கய்யா? விசாரித்தால் தெரிந்து விடும்... நன்றி அய்யா

   நீக்கு
 13. தனியஞ்சலில் வந்த ஒரு கருத்து -
  from: Venugopalan SV
  to: Muthu Nilavan
  date: 24 May 2015 at 15:19

  அன்பின் தோழர் நா முத்துநிலவன் அவர்களுக்கு

  வணக்கம்....உங்களது வலைப்பூ பதிவினை அனுப்பி இருந்தீர்கள்...நன்றி..

  மதிப்பெண் ஒன்றை மட்டும் வைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்காக, முதல் மதிப்பெண் பெற்றுள்ள குழந்தைகளையும் புகைப்படத்தோடு வெளியிட்டு இவர்கள் எல்லாம் முதல் தர மாணவர்களா என்று கேட்பது உள்ளத்தை என்னவோ செய்கிறது....

  விவாதத்தை நடத்தும் விதம் இப்படி அல்ல என்று மட்டும் உடனே சொல்லத் தோன்றுகிறது...

  வழக்கம்போல் என்னை இப்போதும் நீங்கள் மன்னிக்க வேண்டும்...

  எஸ் வி வி -

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனியஞ்சலில் நான் அவருக்கு எழுதிய பதில் -
   from: Muthu Nilavan
   to: Venugopalan SV
   date: 27 May 2015 at 12:45
   நன்றி தோழரே!
   நானும் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
   நீங்கள் சொன்னபிறகுதான் அந்தக் குழந்தைகளின் படத்தை இந்தக் கட்டுரையில் போடுவது சரியல்ல என்பதை உணர்ந்தேன். உடனே எடுத்துவிட்டேன்.
   சரியாகச் சொன்னதற்கு நன்றி எஸ.வி.வி.
   ( படத்தை உடனே மாற்றிவிட்டாலும், இந்தத் தகவலைத் தாமதமாக எனது பின்னூட்டத்தில் ஏற்றுவதற்கும் வருந்துகிறேன்.)
   -நா.முத்துநிலவன்

   நீக்கு