அன்புள்ள அனாமதேயர்களுக்கு...

இந்தியக் கிரிக்கெட் பற்றிய எனது பதிவு பார்த்து, இதற்குமுன் இல்லாத அளவிற்கு அனாமதேய” பின்னூட்டங்கள் எனக்கு வந்தன. ஏற்கெனவே எனது சில பதிவுகளுக்கு, இப்படிச் சில அனாமதேயக் கருத்துகள் வந்ததுண்டு. உண்மை போலத் தோன்றினால், என்கருத்திற்கு மாறுபட்ட பின்னூட்டங்களையும் வெளியிட்டிருக்கிறேன்.அப்படி இருந்தும் ஏன் இப்படி...?

அன்புள்ள அனாமதேயர்களே!
இந்தப் பதிவு உங்களுக்குத்தான்
நான்காவது முறையாக
உலகக் கபடிப் போட்டியில் தங்கம் வென்ற
இந்தியப் பெண்கள் அணியினர்.
இவர்களில் யார் பெயராவது  உங்களுக்குத் தெரிந்தால்
நீங்கள் கபடிப் பிரியராகத்தான் இருப்பீர்கள்.
(அல்லது Group I தேர்வுக்குத் தயாராகிறவராக..)
---------------------------------------------------------------------
ஆனால், கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி  நல்லதுதான்! எனும் எனது மார்ச்-26,2015  பதிவை ஏராளமானோர் பார்த்துள்ளனர். தமிழ்மணத்தில் ஒருநாள் முழுவதும் முதல்பத்தில் முதலாக இருந்தது.  http://valarumkavithai.blogspot.com/2015/03/blog-post_5.html   
தமிழ்மணத்திற்கும் என் இனிய வாசகர்க்கும் நன்றி.
ஆனால் இந்தப் பதிவுக்குத்தான்,
இதுவரை இல்லாத அளவிற்கு வசவுகள், “தேசத்துரோகக் குற்றவாளியாக என்னைச் சித்தரிக்கும் சொல்லாடல்கள்!  பத்துக்குமேல் அனாமதேயப் பின்னூட்டங்கள் வந்துவிட்டன!

எனது கட்டுரையின் மையமாக நான் வைத்தது, கிரிக்கெட் விளையாட்டின் மீதான குற்றச்சாட்டோ வீரர்கள் மீதான குற்றச்சாட்டோ அல்ல! நமது இளைஞர்களை -மற்ற விளையாட்டின் பக்கம் திரும்பிவிடாமல்- திசைதிருப்பிவரும் வியாபாரிகளின் தந்திரத்தைத்தான்!

இந்தியர்களை கிரிக்கெட் வெறியர்களாக ஆக்கியது பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரத் தந்திரத்தையே நான் சுட்டிக்காட்டினேன். விளையாட்டை அல்லவே?

நம்நாட்டைப் பொறுத்தவரை- 

இது 11 இளைஞர்களின் விளையாட்டல்ல,  வியாபாரிகளின் பல்லாயிரம் கோடி விளையாட்டு!   ன்றதில் என்ன தவறு இருக்கிறது?

நான் சொன்னது- 

“இந்தியாவிற்கே உரிய மல்யுத்தம், கபடி முதலான போட்டி வீரர்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்காத நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா நிற்க முடியாத காரணம் இந்தக் கிரிக்கெட்டிற்குத் தரும் முக்கியத்துவத்தை நமது அரசோ, தனியார் நிறுவனங்களோ வேறு எந்த விளையாட்டு வீரர்களுக்கும் தராததுதான்“ 

எனும் கருத்தில் இப்போதும் தெளிவாகவே இருக்கிறேன்.

கபடிப்போட்டிக்கான உலகக்கோப்பையை, இந்தியப் வீராங்கனைகள் நான்காவது முறையாகவும், இந்திய வீரர்கள் ஐந்தாவது முறையாகவும் வென்று கொண்டு வந்துள்ளனர்! இதை நாம் எப்படிக் கொண்டாடியிருக்க வேண்டும்? தமிழ் ஊடகங்களில் பத்தோடு பதினொன்றாகவே இந்தச் செய்தி இடம்பெற்றது! 

கிரிக்கெட் தோல்வியில் துவண்டுகிடந்த இளைஞர்களில் ஒருவர் தனது நாக்கை அறுத்துக் கொண்டார், இன்னொருவர் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார் எனும் முட்டாள் தனமான - செய்திக்குத் தந்த முக்கியத்துவம் கூட இந்த வெற்றிச் செய்திகளுக்குத் தரப்படவில்லையே எனும் எனது ஆதங்கம் சரியானது தானே அனாமதேய நண்பரே?

நாக்கை அறுத்துக் கொண்டவர்க்கோ, மாடியில் இருந்து குதித்தவர்க்கோ இந்த வீராங்கனைகளில் ஒருவர் பெயராவது தெரிந்திருக்குமா? தெரியாதெனில் அது அவர் குற்றமா? 

அன்புகூர்ந்து யோசியுங்கள்!

நான் யாரையும் புண்படுத்தவோ, வேண்டுமென்றே இழிவு படுத்தவோ நினைத்து எழுதவில்லை! மாறாக நமது நாட்டு இளைஞர்களை உண்மைக்கு மாறாகத் திசைதிருப்பி விடும் வியாபாரத் தந்திரத்தைத்தான் எடுத்துச் சொன்னேன். 

இந்தச் செய்தியைப் படியுங்கள் 

'The Indian men's team continued their winning streak by clinching the fifth Kabaddi World Cup title, while the women's side bagged for the fourth consecutive time'  http://zeenews.india.com/sports/others/indian-men-women-win-world-cup-kabaddi-titles_1517982.html 


--------------------------------------------------------------------------------------------------------------------------- 

17 கருத்துகள்:

  1. விட்டுத்தள்ளுங்கள் நண்பரே அறியாமைவாதிகளுக்காக நீங்கள் ஏன் உணர்ச்சி வசப்படவேண்டும் புரிந்தவன் புவி ஆள்வான்.

    பதிலளிநீக்கு
  2. \\\இந்தியா தோற்கட்டும் என்று சொன்னால் நம்மை தேச துரோகியாக்கி ஆக்கிவிடுவார்கள் ///

    கிரிக்கெட் பதிவுக்கு நான் இட்ட பின்னுடம் இது. நான் சொன்னது சரியாகப்போய்விட்டது இதுதான் நமது மக்களின் மனநிலை. எந்த அளவுக்கு இந்த கிரிக்கெட் வியாபாரிகள் மக்களின் மனதை மாற்றியுள்ளார்கள். ஊதுற சங்கை ஊத்தி வைப்போம் என்றாவது ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையில்.

    த.ம + 1
    M. செய்யது
    Dubai.

    பதிலளிநீக்கு
  3. கிரிக்கெட்டுக்கு எப்படி இவ்வளவு மவுசு வந்தது என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஐயா
    உலகம் ஆயிரம் கதைக்கும் அதை எல்லாம் எடுக்க வேண்டாம் ஐயா. நீங்கள் சொன்னது சரிதானே.

    இது 11 இளைஞர்களின் விளையாட்டல்ல, வியாபாரிகளின் பல்லாயிரம் கோடி விளையாட்டு! என்றதில் என்ன தவறு இருக்கிறது?இல்லை இல்லை உண்மை.. உண்மை..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு ஐயா! ஆம் விளையாட்டைக் குறை கூற அவசியமில்லை. ஆனால் உங்கள் கருத்துக்கள் மிகவும் நியாயமானதே. மட்டுமல்ல நமது ஊடகங்களும் அப்படித்தானே இருக்கின்றன ஐயா!
    பெரும்பாலும் இந்தப் போட்டிகள் பள்ளிக் குழந்தைகளின் தேர்வு அதுவும் பொதுத்தேர்வு சம்யங்களில் தான்.

    பதிலளிநீக்கு
  6. கிரிக்கெட்டுக்கு எப்படி இவ்வளவு மவுசு வந்தது என்று என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

    சீனு மாமா யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? இந்த விளையாட்டிற்குப் பின்னால் பில்லியன் டாலர் கணக்காக சம்பாரித்துக் கொண்டிருக்கும் பல தனிப்பட்ட மனிதர்களைப் பற்றி புரிந்து கொண்டால் உங்களுக்கு பல விசயங்கள் புரியக்கூடும்.

    (தளம் குதித்துக் கொண்டே யிருக்கின்றது. சற்று கவனிக்கவும்)

    பதிலளிநீக்கு
  7. கிரிகெட்டுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு மவுசு என்று தெரியவில்லை. நான் சிறுவனாக இருக்கும் போதே கிரிகெட் வர்ணனையை ரேடியோவில் நாள் முழுவதும் ஒலிபரப்புவார்கள். வேறு எந்த விளையாட்டுக்கும் இப்படி செய்ததாக எனக்கு நினைவில்லை. இன்றைக்கு கூட நிறுவனங்களை காரணம் சொல்லலாம். அன்றைக்கு அரசு வானொலிகளில் கிரிக்கெட்டுக்கு மட்டும் எப்படி இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
    த ம +1

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் அண்ணா. முந்தையப் பதிவையும் படித்தேன், கிரிக்கெட் மற்ற விளையாட்டுகளைப் பின்தள்ளி அர்த்தமற்ற மோகம் உண்டுபண்ணுகிறது என்பது உண்மைதான். கபடி, கில்லி, கோகோ, ஹாக்கி என்று எந்த விளையாட்டையும் தெருக்களில் பார்க்க முடிவதில்லை..எங்கும் கிரிக்கெட்!! :( பல ஆயிரங்கள் செலவழித்து கிரிக்கெட்டிற்கு சம்மர் கேம்ப் வேறு...மக்கள் விழித்துக் கொண்டால் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன செய்ய முடியும்? ஆனால் விழிப்பு?!! எதற்குத் தான் வருகிறது போங்கள் ...

    பதிலளிநீக்கு
  9. அய்யா, தங்கள் மீது அன்பையும் தங்களின் கருத்துக்களின் மீது கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதைத்தான் இது காட்டுகிறது. ஒரு வேளை இந்த முனகல் மு.. சாமிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் அது தங்களின் வளர்ச்சியை குறிப்பதாகவே கொள்ள வேண்டும்.


    இதுக்கு போயி அலட்டிக்கலாமா?

    பதிலளிநீக்கு
  10. அனாமதேயங்களின் பிதற்றல்களுக்காக நமது கருத்துக்கு பங்கம் ஏதும் வந்துவிடப் போவதில்லை. உண்மைகள் பல நேரங்களில் கசப்பாகவேதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லாசனி, ஏப்ரல் 04, 2015

    இது முத்து நிலவன் சொன்னது....

    ஏற்கெனவே எனது சில பதிவுகளுக்கு, இப்படிச் சில அனாமதேயக் கருத்துகள் வந்ததுண்டு. உண்மை போலத் தோன்றினால், என்கருத்திற்கு மாறுபட்ட பின்னூட்டங்களையும் வெளியிட்டிருக்கிறேன்

    முத்துநிலவன் அது உண்மை என்று வெளியீட்டு உள்ளார். இதில் தப்பேது? வருணுக்கு எல்லா தலத்திலேயும் பொய் வாந்தி எடுப்பது (அதுவும் பிச்சைக்கரன் வாந்தி வேற) வழமை. அதை நிறுத்தியே ஆகவேண்டும்
    /////வாஙக தனபாலன்.
    கண்ட அனானி நாய்கள் பின்னூட்டங்களை வெளியிட்டு அவர் தரத்தைக் குறைத்து கொள்கிறார். என் பின்னூட்டம் தரமற்றதென்றால் அதை வெளியிடாமல் இருக்க வேண்டியதுதானே? இதுகூடத் தெரியாதா இந்தப்பெரிய மனுஷனுக்கு?? கண்ட நாய்களையும் குரைக்க விட்டுக்கொண்டு இருப்பதுதான் இவர் தளம் நடத்தும் லட்சணம்!! இன்னொரு பக்கம் "ஒப்பாரி" வேற வச்சுக்கிட்டு திரிகிறாரு ..அன்புள்ள அனாமதேய நண்பர்களே, வருணைப்பார்த்து குரைங்க,என்னைக் கொஞ்சுங்க! னு??

    பதிலளிநீக்கு
  12. இவர்களுக்காக நீங்கள் உங்களது நல்ல நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  13. தங்களுக்கு முன்னமே....பலப்பல வசவுகளை கண்டவுடன்....நான்..அதற்க்காக கவலைப்படவில்லை. ஒரு மாற்றம் செய்தேன். கருத்துரையில்“ திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.”...........!!!! முகவரி. valipokken@gmail.com இப்படி மாற்றிவிட்டேன் அய்யா.....

    பதிலளிநீக்கு
  14. தோல்விகள் நல்லவை..
    அதுவும் கிரிகேட்டுக்கு அது மிக அவசியம் ...

    பதிலளிநீக்கு