செவ்வாய், 14 ஏப்ரல், 2015


சிங்கப்பூரில் செயல்படும் பட்டுக்கோட்டையார் இலக்கியப் பேரவை நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து அவர்கள் பேசிய உணர்ச்சிகரமான பேச்சை மிகவும் ரசித்தேன். 

பார்க்கச் சொடுக்குக - 
http://www.pattukkottaiyar.com/site/?p=985  

பட்டுக்கோட்டையாரின் முதல்திரைப்பாடல் பதிவு (பாசவலை) பற்றியும், வைரமுத்துவின் முதல்பாடல்பதிவு (தண்ணீர் தண்ணீர்)பற்றியும் பல நல்ல செய்திகளுடன் கவிஞரின் பேச்சு, 72நிமிட ஒளிப்பதிவு இது. 

கவிஞர் வைரமுத்து சென்றுவந்த பட்டுக்கோட்டையார் நிகழ்வுக்கு அடுத்த ஆண்டு, நாங்கள் போயிருந்தோம்.. 
நமக்குத்தான் இதுபோலும் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும் ஞானம் கிடையாதே!அவர்கள் வைத்திருந்தால்தான் உண்டு!
சரி.. வைரமுத்துவின் பேச்சைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
அதுமட்டுமல்ல, 
பட்டுக்கோட்டையார் பற்றிய அதிகாரபூர்வ இணையதளத்தின் இணைப்பு இது.
மங்காப் புகழ்பெற்ற அந்த மக்கள் கவிஞரின் மகன் நடத்துகிறார்... பாருங்கள்...
பட்டுக்கோட்டையார் புகழ் ஓங்குக!
------------------------------------------------------ 

11 கருத்துகள்:

 1. பார்த்து விட்டு மீண்டு(ம்) வருகிறேன் நண்பரே...
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 2. காணொளி இல்லை பேச்சொலி கேட்டேன் நண்பரே அருமையாக பேசினார் அழகுத் தமிழின் உச்சரிப்பை ரசித்தேன் எல்லோருமே தமிழைக் கையில் எடுத்துக்கொண்டு பிழைக்கத் தெரிந்தவர்கள் வரிசையில் இவரும் ஒருவர் வழக்கம் போல அரசியல் ஜால்ரா முடிவில் கண்ணீர் வருவது போன்ற நடிப்பையும் கண்டேன் இரு முகம் உள்ளவர்கள்தான் இந்த சமூகத்தில் நிறையப்பேர் வாழ்கிறார்கள் நான் என்றுமே வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு ‘’மட்டுமே’’ ரசிகன் ஒரு கல்லூரி விழாவில் கலந்து பேசுவதற்க்கு இவரிடம் மாணவர்கள் பட்ட கஷ்டத்தை விவரிக்கிறேன் அதன் இணைப்பைத் தேடிக்கொண்டு இருக்கிறேன் ஒரு பதிவு தயார் செய்து விட்டு தங்களிடம் தெரிவிப்பேன். நிறைய விடயங்கள் இந்த பேச்சொலியில் தெரிந்து கொண்டேன் இதற்காக தங்களுக்கு சிறப்பான நன்றி.

  வைரமுத்து எனக்கு நண்பரோ, எதிரியோ அல்ல 80தையும் பதிகின்றேன்.
  உண்மை என்றும் வாழும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் எழுதுங்கள். நானும் அவரது கவிதைகளை ரசிக்கும் அளவிற்குப் பாடல்களை ரசிக்க முடிவதில்லை. எதிலுமே விமர்சனமில்லாத ரசனை தேவையில்லை என்பதும் என்கருத்து

   நீக்கு
 3. மிக்க நன்றி அய்யா..
  இந்த பகிர்வுக்கு

  பதிலளிநீக்கு
 4. பரவசத்தில் இணைப்பை தேடினேன்... காணாம்...!

  இணைப்பு கொடுக்க மறந்து விட்டர்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வைரமுத்துவின் படத்தின் கீழ் இருக்கிறது பார்க்க வேண்டுகிறேன்

   நீக்கு
 5. Pattimandram 2015 Tamil New Year Special 14-04-2015 பார்த்து ரசித்தேன்.

  வாழ்ந்த பழமையே என்று அணியில் சிறப்பாக பேசிய நண்பர் நா. முத்து நிலவன், சகோதரி சுல்தானா பர்வீன் மற்றும் கவிஞர் வல்லபராசு அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.
  கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 6. தங்களின் சித்திரைப் புது நாள் பட்டிமன்றப் பேச்சு மிகமிகச் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...