நிறைவான மகிழ்வு எப்போது?

“பரிட்சையில பிட் அடிச்சி
பசங்க பிடிபட்டது பழசு!
வாட்ஸ்-அப்ல கொஸ்டின அனுப்பி
வாத்தியாருக பிடிபடுறது புதுசு!!”
-இது, ஏப்ரல்-14 (சித்திரை-1) காலை 9மணிக்கு
கலைஞர் தொலைக்காட்சியில் 
ஒளிபரப்பாகவுள்ள 
பட்டிமன்றத்தில் 
நான் பேசியதன் ஒரு தெறிப்பு..

-பட்டிமன்ற ஒளிப்பதிவின் நிழற்பதிவு-

வழக்கம்போல,
நடுவர் முன்னுரைக்குப் பின்,
பட்டிமன்றத்தின் 
முதல் பேச்சாளராக
நான் பேசியிருக்கிறேன்.
-தலைப்பு-
நிறைவான மகிழ்வைத் தருவது
வாழ்ந்த பழமையா?   
வரும் புதுமையா?
-நடுவர்-
நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் ஐ.லியோனி
வாழ்ந்த பழமையே!
புதுக்கோட்டைநா.முத்துநிலவன்,
விழுப்புரம்  வல்லபராசு
சுல்தானா பர்வீன் நெல்லை
---------------- 
வரும் புதுமையே!
சென்னை விஜயகுமார்
கோவை தனபால்,
லின்சி ஃப்ளோரா கோவை
------------------ 
முழுமையாகப் பார்த்துவிட்டு 
கருத்துச் சொல்லுமாறு
நண்பர்களை 
அன்புடன் அழைக்கிறேன்.
---------------- - - --------------- 

22 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் நண்பரே காணொளி எப்போது வரும்
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளியில் -யூட்பில்- நாம் ஏற்றினால்தானே வரும்?
      எனக்குத்தான் அந்த நுட்பம் தெரியாதே???!!!

      நீக்கு
  2. நகைச்சுவை உணர்வோடு செய்தியை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பாங்கினை நான் அதிகம் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. கண்ணீர் மல்க பதவி ஏற்கும் முன்னோட்டம் கண்டேன். வாழ்த்துகள்.
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் கலைஞரின் டீவி!
      என்னைத் தவிர மற்ற அனைவருமே அரசியல் கலப்படம்தான்..

      நீக்கு
  4. சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக நான் ஏற்பதில்லை. அரங்கப் பின்புலத்திலும், அறிவிப்பிலும் தமிழ்ப்புத்தாண்டு என்றில்லாதிருப்பதில் மகிழ்ச்சி. தாங்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் பார்க்கத் தவறுவதில்லை. பார்த்துவிட்டு கருத்து பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு லியோனியும் ஏற்பதில்லை. கண்ணீர்மல்க பதவியேற்ற சிறுமி (ஒன்பதாம் வகுப்பு மாணவி) தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துச் சொன்னவுடன் நடுவர் மேடையிலேயே மறுப்புச் சொன்னார்.

      நீக்கு
  5. இணையத்தில் வந்தவுடன் பார்க்கிறேன் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரலையில் -ஆன் லைனில்- பார்க்கலாம் என்கிறார்கள்.
      எனக்குத்தான் அதைப் பிடித்து யுட்யூபில் அடைக்கத் தெரியலயேப்பா..

      நீக்கு
  6. ஐயா...
    பார்க்க
    ஆவலாக
    உள்ளேன்....
    இறை
    நாட்டம்...

    பதிலளிநீக்கு
  7. தலைப்பையும் பேசுபவர்களையும் வைத்துப் பார்க்கும்போது உங்கள் பக்கமே வெல்லும்.
    வாட்ஸ் அப் ஜோக் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் இல்லை. இளைய தலைமுறை வெல்வதுதானே சரி?
      “தம்மில்தம் மக்கள் அறிவுடைமை, மாநிலத்து
      மன்னுயிர்க் கெல்லாம் இனிது“ அல்லவா முரளி? புதுமை என கோவை தனபால் அருமையாகப் பேசியிருக்கிறார். பார்க்க.

      நீக்கு
    2. விளம்பரத்தில் வரும் சட்டை சமாச்சாரம் மட்டுமே பழசு.. மற்றவை -நமது வலைப்பக்கத்தில் போட்டுள்ள- நகைச்சுவை அனைத்தும் எனது சரக்கு அய்யா.. ஆனால் காப்பிரைட்? பட்டிமன்ற உலகில் இது ஒரு சாபக்கேடு!

      நீக்கு
  8. பல தெறிப்புகளை ரசிக்க காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி ரசியுங்கள் வலைச்சித்தரே!
      அப்படியே முடியுமெனில் -எனது பேச்சை மட்டுமாவது- யூட்யூபில் ஏற்றித்தாருங்களேன் அய்யா..
      ரொம்பப் புண்ணியமாப் போவும்..

      நீக்கு
    2. நேரம்...

      வந்துடுங்க : http://dindiguldhanabalan.blogspot.com/2015/04/Time.html

      நீக்கு
  9. நிறைவான மகிழ்வைத் தருவது வாழ்ந்த பழமையா? அணியில் தங்களது பழசு-புதுசு ஒப்பீடுகள் அருமை. பெர்னாட்சா விடம் பையன் கேட்ட கேள்விக்கு அவர் ” சேக்சுபியர் என் தாத்தா அவர் தோளில் அமர்ந்து கொண்டுதான் நான் எழுதுகிறேன்“ என்னும் பெர்னாட்சாவின் பதிலை எடுத்துக் காட்டி நடுவர் அளித்த தீர்ப்புக்கு கட்டியம் கூறியது அருமை.வேரை மறந்தால் விழுதுகள் இறங்காது பழமையின் பெருமைக்கு அருமையான சான்று.சிற்பம் சித்திரங்களை உருவாக்கிப் பாதுகாக்கும் பழமையையும் சித்தன்னவாயில் ஓவியங்களில் தங்கள் பெயர்களைப் பொறித்துச் சீர்கெடுக்கும் புதுமையினையும் சுட்டிக்காட்டியது அருமை.
    இந்தப் பட்டிமன்றத்தில் பழமைக்குப் பேசிய புதுமை ஒன்பதாம் வகுப்பு மாணவி சுல்தானா பர்வீன் தான் அருமை.பட்டிமன்றப் பேச்சாளர் “பதவி ஏற்பு உறுதிமொழி” அட்டகாசம். அம்மா ஊட்டும் சோறு பழமை அம்மாவையே பார்க்க முடியாதது புதுமை , களம்காணச் செல்பவர்கள் சர்க்கரை, பி.பி மாத்திரைகளை எடுத்துச் செல்லும் புதுமை போன்ற பல் இடைக்குத்துகள். நல்ல வளமான குரலும் வழங்குமுறையும் அந்த வளரும் பேச்சாளினியின் ஒளிமய எதிர் காலத்தை உணர்த்துகிறது.
    வல்லபராசு அவ்வையின் ஆத்திச்சூடியினை ஐக்கூவாகச் சொன்னது மகிழத்தக்க பழமை.புதுமையின் தற்காலிக இன்பத்தை நீர்க்குமிழிக்கும், முதுமையின் செயலால் விளையும் மகிழ்ச்சியினை நீரூற்றுக்கும் ஒப்பிட்டு பழமையின் சிறப்பை உணர்த்தினார்.
    “வரும் புதுமையே “என்னும் அணியில் பேசிய விசயகுமார் உ.வே.சா இன்றிருந்தால் பென்ட்ரைவ்தான் கைக்கொண்டிருப்பார் , பழமைக்கு கிணற்றுத்தவளை- புதுமைக்குக் கடல்தவளை ஒப்பீடு, இன்றைய பட்டிமன்றங்களில் இளஞர் பங்கேற்பே புதுமைக்குச் சான்று, சந்திராயனை அனுப்பிய புதுமை, என்றெல்லாம் கூறி தூர விலகுவது பழமை, காரிஉமிழ்வது புதுமை என்று ஆவேசப்பட்டதும் பழமையை எண்ணிப் பெருமைப்படலாம், மகிழமுடியாது என்றதும் மறைமுகமாக பழமை அணிக்கு வலு ஊட்டுவதாகவே இருந்தது.
    புதிய வரவாக இருந்தாலும் வின்சி புளோரா இன்றைய அறிவியல் மின்னணுக் கருவிகளின் பயன்பாடுகளே புதுமை எனச் சான்றுகாட்டித் தன்அணியினை வலுப்படுத்த முயன்றார். தப்பு செஞ்சுட்டு மன்னிப்பவன் மனிதன், தப்பே செய்யாம மன்னிப்புக் கேட்பவன் புருசன் என்ற பொருத்தமில்லாத எடுத்துக்காட்டுகளைத் தவிர்த்திருக்கலாம்.
    அந்த அணியின் நிறைவுப் பேச்சாளர் வல்லபராசு வழக்கமாக ஆவேசப் பாய்ச்சலில் புதுமைபற்றிக் கலக்கினார். ஏனோ அவரின் பாய்ச்சல் தங்களையே குறிவைத்திருந்தது? புதுமைக்கு ஒரு செல்பேசியில் எல்லா வசதிகள் இருப்பதையும் பட்டியல் போட்டதும் நடுவர் சொன்னதுபோல் அவர் செல்போன் வணிக நிறுவன முகவரோ என நினைக்க வைத்தது. யு.பி.எஸ் - ஓ.பி.எஸ் ரெண்டுமே வேலை செய்யலே - இருபொருள் கூற்று சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தது.
    செம்மொழியாம் தமிழ்மொழி பாடலோடு பட்டிமன்றத்தைத் தொடங்கிய
    நடுவர் தன் நகைச்சுவைத் துணுக்குகளோடு தமிழ் உயிரெழுத்துகளின் சிரிப்புகளோடு, அரசியல் நறுக் களையும் இணைத்து பட்டுக்கோட்டையாரின் வரிகளைச் சுட்டி இரத்தத்தால் ஒன்றுபடுவோம் என்றும் ஆசிரிய மாணவ உறவின் இற்றை நிலை பற்றியும், வடையினை வைத்து மாணவனின் திறமையைக் கணித்த அனுபவ ஆசிரியர் செயலையும் சுட்டி “பழமையைப் போற்றி வளரும் புதுமைகளே நிறைவான மகிழ்ச்சியினைத் தரும்” எனத் தீர்ப்பளித்தது அருமை. வாழ்த்துகள் பட்டிமன்றக் குழுவினர்க்கு.

    பதிலளிநீக்கு