எனக்குப் பிடித்த கவிதைகள் – 3/100, 'நாமெல்லாம் குருடர்கள்'

எனக்குப் பிடித்த கவிதைகள் – 3/100

நாமெல்லாம் குருடர்கள்!
 மார்ச்-17, 2015 செய்தித்தாள் படம்

கண் என்பதே இரக்கத்தின் அடையாளம்தான், இரக்கமே இல்லாதவர்க்கு எதற்காகக் கண்கள் இருக்கின்றன? என்று கேட்பார் திருவள்ளுவர். ஆனால், இரண்டு கண்களிலும் பார்வை நன்றாக உள்ளவர்கள்தான் அநேக நேரங்களில் குருடர்களாக இருக்கிறோம்.
கண் தெரியாதவர்களுக்கு இருக்கும் சரியான “பார்வை“ நமக்கு இருப்பதில்லையே ஏன்? என்று நம் உச்சிமுடியைப் பிடித்து உலுக்கிக் கேட்கும் இந்தக் கவிதை எனக்குப் பிடித்த கவிதைகளில் ஒன்று. 
இதோ அந்தக் கவிதை-
கண்ணில்லாதவர்கள்
கையேந்துகிற போது,
நாமெல்லாம் குருடர்கள்
எழுதியவர் -கவிஞர் தங்கம் மூர்த்தி
(“முதலில் பூத்த ரோஜா“)
இந்தக் கவிதையை அவர் எழுதிப் பல்லாண்டுகள் ஆகின்றன. ஆனால், நாம்தான் இந்தக் கவிதையை இன்று நினைத்துக் கொள்வது போலும் நிகழ்வுகளைப் “பார்த்து”க் கொண்டிருக்கிறோம்.
------------------------------------------------

18 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    கவிதையின் வரிகள் மனதை ஏதோ செய்கிறது படித்த போது... ஒரு சம்பவம்
    சென்ற வாராம் இந்தியாவில் வழிப்புலன் அற்றோர் ஏதோ சாலை மறியல் செய்த போது கண் இல்லை என்பதை அறிந்தும் கூட அவர்களுக்கு நடந்த கொடுமை சொல்ல முடியாது ஐயா..
    மக்க தொலைக்காட்சியில் செய்தியாக வலம் வந்தது...
    பகிர்வுக்கு நன்றி ஐயா.த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்வையற்ற பட்டதாரிகள் வேலைகேட்டு மறியல் செய்ய, அவர்களைக் குற்றவாளிகள் போல் கைதுசெய்து கூண்டில் ஏற்றிய செய்தியைப் படத்துடன் பார்த்தபோது இந்தக் கவிதை நினைவுக்கு வந்ததைத்தான் பதிவிட்டேன் ரூபன், நன்றி

      நீக்கு
  2. நல்ல அறிமுகமும் தொடக்கமும்

    பதிலளிநீக்கு
  3. கவிதை வரிகளின் கனம் அதிகம்! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் ஐயா
    கண்ணிருந்தும் குருடர்கள்தான்
    தம ’1

    பதிலளிநீக்கு
  5. அவர்கள் உலகில் நாம்தான் பார்வை அற்றவர்கள்...
    நம் (இல்லாத) பார்வையில்தான் அவர்கள் குருடர்கள்.
    அவர்கள் பார்க்கும் பலவற்றை நம்மால் பார்க்க முடியாது.
    தவறானது என்று தெரிந்தும் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல.
    அதை நியாயப்படுத்த முனையும் கர்த்து குருடர்களே நாம்.
    பின் குறிப்பு .. வடிவேலு பாணியில் படிங்க..
    நான் என்ன சொன்னேன்.
    தம +3

    பதிலளிநீக்கு
  6. அடியாத்தீ!!!
    அய்யா முநி சாமி பக்கத்துல ஒரு பின்னூட்டம் போட்ட அடுத்த நிமிசமே வெளிவருதே என்ன ஆச்சி. ஒரு வேளை விலையில்லா பின்னூட்டம் ஆயிடிச்சோ .

    பதிலளிநீக்கு
  7. கவிஞர்கள் பேசும்போது
    காலம் ஊமையாகிவிடும்
    கவிஞர்கள் இறந்தபோது
    கவிதைகள் பேசத் தொடங்கும்
    காலம் மீண்டும் ஊமையாகிவிடும் !

    அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    தம 4

    பதிலளிநீக்கு
  8. தக்க நேரத்தில் தகுந்த பகிர்வுங்க அண்ணா.

    பதிலளிநீக்கு
  9. மனதைப் பிசையும் கவிதை ஐந்து சொற்கள்தான்.ஆனால் 5000 வார்த்தைகள் விவரிக்க முடியாததை இவை சொல்லி விட்டன.

    பதிலளிநீக்கு
  10. பார்வையற்றவர்களில் பெரும்பாலோர் உழைத்தே பிழைக்கிறார்கள்.
    கைக்குட்டை ஊதுவத்திகள்,சீசன் டிக்கட் கவர்கள்,விளையாட்டுப் பொருட்கள, போன்றவற்றை விற்று பொருளீட்டி வாழ்க்கை நடத்துகிறார்கள்.எனக்கு பார்வை கிடையாது இவற்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவர்கள் கூறுவது கிடையாது.அவர்களது தன்னம்பிக்கையும் உழைப்பும் ஆச்சர்யப் படுத்தக் கூடியவை.அவர்களை கையேந்தும் நிலையை கொடுக்கக் கூடாது

    பதிலளிநீக்கு
  11. முந்தைய பின்னூட்டத்தில் சொற்பிழை உள்ளது திருத்தி வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. நல்ல கவிதை..........நிஜத்தின் பிரதிபலிப்பு
    அதைப் பதிவிட்ட தங்களுக்கு நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  13. கவிதை வரிகள் நறுக் னு அந்தச் செய்திக்கு ஏற்றதாக உள்ளதோ! மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பது போல் அந்தக் கவிதை சிறியதாக இருந்தாலும் அர்த்தம் ஆழமானது! செய்தி மிகவும் மனதை வேதனை அடையச் செய்கின்றது....உரிமைகளைக் கூடக் கேட்கக் கூடாது என்றால் என்னய்யா அர்த்தம்....

    பதிலளிநீக்கு