தமிழ்மணம் தரவரிசை சரிதானா?

தமிழ் வலைப்பூக்களை உலகத்தமிழர்களிடம் உடனுக்குடன் கொண்டுசேர்க்கும் “தமிழ்மணம்“ திரட்டியின் பணிக்குத் தலைவணங்குகிறேன். ஆனால், அவர்களின் தரவரிசை (BLOG TRAFFIC RANK) சரியானது தானான்னு என எனக்குத் தெரியல... மூத்த பதிவர்கள்தான் சொல்லணும்.

தொடர்ந்து சிறப்பாக எழுதிவருவதோடு, லட்சக்கணக்கான வாசகரோடு, ஆயிரக்கணக்கில் தொடர்நட்பும்(ஃபாலோயர்) வைத்திருக்கும் நமது பிரபல வலை நண்பர்களான மூங்கில்காற்று தி.ந.முரளிதரன் (தமிழ்மணத் தரவரிசை எண்-378),  திண்டுக்கல் தனபாலன் (தமிழ்மணத் தரவரிசை எண்-95),  மதுரைத் தமிழன் (தமிழ்மணத்தரவரிசை எண்-24) ஆகியோரின் தரவரிசை எண் சரிதானா? 


இவர்களின் வலைப் பிரபலத்திற்குத் தரவரிசை இன்னும் உயர்ந்திருக்க வேண்டுமே? (வலையின் தொழில் நுட்பக் கட்டுரையைத் தொடர்ந்து எழுதிவரும் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் தரவரிசையைக் காணவில்லை) எனும் எனது சந்தேகத்தை அந்த நண்பர்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்.

அதோடு, தொடர்ந்து பலமாதங்களாக முதலிடத்தில் இருந்த நண்பர் ஜோக்காளியும், தற்போது “நம்பர் ஒன்“ ஆகியிருக்கும் நண்பர் நம்பள்கியும், தொடர்ந்து மூன்றாம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் நண்பர் வெங்கட்.நாகராஜ் அவர்களும், தொடர்ந்து நான்காம் இடத்தில் இருந்து வரும் வலைச்சரம் ஆசிரியர் அய்யா சீனா அவர்களும், முதல் பத்து இடங்களில் நிலைத்து நின்றிருக்கும் துளசிதரன் அய்யா, மதுரை ரமணி,  திருச்சி தமிழ்இளங்கோ, புதுக்கோட்டை தங்கை மைதிலி கூட இதுபற்றிய தங்கள் கருத்துகளைச் சொன்னால் கூடுதல் தெளிவு கிடைக்கும் என்று தோன்றுகிறது.

தமிழ் வலைப்பக்கங்களில் தொடர்ந்து ஏதேனும் எழுதிக் கொண்டிருக்கும்  நண்பர்கள் சிலரைப் போல, பக்தியை மட்டும்(உ-ம்-அம்பாளடியாள்), சினிமாவை மட்டும்(உ-ம்-ஆரூரான்), காதல்கவிதை மட்டும்(உ-ம்-பாரதிதாசன்), மரபுக் கவிதை மட்டும்(உ-ம்-புலவர்இராமாநுசம்), இலக்கிய ஆய்வுகள் மட்டும்(உ-ம்-ஊமைக்கனவுகள்), அரசியல் மட்டும்(உ-ம்-வேலூர் ராமன், சமூகம் மட்டும் (உ-ம்-ஓவியா) என இல்லாமல், தமிழர் தொடர்புடைய எல்லாவற்றையும் எழுதுவதாய் நினைத்துக் கொண்டு என்னத்தையாவது அவ்வப்போதும் எழுதிக்கொண்டு கிடக்கும் எனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும் என்பதற்காகவே இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்.

சரியான பதிலைத் தந்து தெளிவுபடுத்துவோர்க்கு ஆயிரம் பொற்காசுகள் தரத்தான் ஆசை... ஆனா.. நமக்கு அம்பூட்டு வசதி இல்லாத நிலையில், (திருவிளையாடல் புராணமே கற்பனை என்பதால், அதைத் தன்கலையால் உண்மைபோல் ஆக்கிவிட்ட ஏ.பி.நாகராஜன் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு) எனது நன்றியை மட்டும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பின்வரும் தமிழ்மணத் தரவரிசையைப் பாருங்கள்...
இதில் நியாயம் இருந்தால் கருத்தும் தாருங்கள்...

கடந்த 3மாதமாகப் பத்தாம் இடத்தில் இருக்கும் எனது நிலையும் உண்மையானது தானா என்பதும் தெரியவில்லை.  அன்புத் தங்கை மைதிலி அவ்வப்போது முதல் 5இடத்திற்குள் வருகிறார்.. பிறகு பின்வாங்குகிறார். இதுவும் ஏனென்று தெரிந்தால் சொல்ல வேண்டுகிறேன்.

இளைய பதிவர்களுக்கு இந்த நமது மூத்த பதிவர்களின் ஆலோசனைகள் பெரிதும் பயன்படும் என்பதால் மட்டுமல்ல.. தொடர்ந்து என்னத்தையாவது அவ்வப்போதும் எழுதிக்கொண்டு கிடக்கும் எனக்கும் ஒரு தெளிவு கிடைக்கும் என்பதற்காகவுமே இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன்...
------------------------------------------------------
தமிழ்மணம் தரவரிசைப் பட்டியல்
(BLOG TRAFFIC RANK) 03-02-15பி.ப.5மணி)
1.       http://www.nambalki.com/
2.       http://www.jokkaali.in/
24.    http://avargal-unmaigal.blogspot.com/      --------?

93, http://thulasidhalam.blogspot.in/                            ---------?
95. http://dindiguldhanabalan.blogspot.in/                 ----------?
378. http://www.tnmurali.com/                                     -----------?
-----------------------------------------------

34 கருத்துகள்:

  1. நீங்க செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்தி உங்கள் ஆக்கபூர்வமான சிந்தனைகளை வீணடிக்க வேண்டாம் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோதிஜி கருத்துதான் எனது கருத்தும். அதுமட்டுமல்லாமல் தமிழ்மணம் ஒரு இலவச திரட்டி அதில் நம் பதிவை இணைத்தோமா வந்தோமா என்று இருக்க வேண்டும் அதைவிட்டு அதில் ஆராய்ச்சி செய்து தங்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒவ்வொருத்துவருக்கும் ஒவ்வோரு பாணி அதில் உங்களுக்கு பிடித்த பாணியில் நல்லதை எழுதி மக்களின் மனதில் இடம் பிடிக்கவும். நெக்ஸ்ட் டைம் உங்களிடம் இருந்து இது மாதிரி பதிவு வந்தால் மைதில் சகோவின் குழந்தைகளிடம் சொல்லி அடிக்கஸ் சொல்ல போறேன் ஆமாம் ஸ்டிரிக்ட்டா சொல்லி புட்டேன்

      நீக்கு
  2. அய்யா,

    தமிழ்மணம் பற்றிய பலருடைய ( என்னையும் சேர்த்து ) சந்தேக கேள்வியை பதிவாக பதிந்துள்ளீர்கள்...

    முதலில் தமிழ்மணத்தின் தரவரிசை அதன் நிர்வாகிகளால் அன்றாடம் கண்காணிக்கப்பட்டு சரிப்படுத்தப்படுகிறதா என்பது தெளிவாக வேண்டும். அப்படி இல்லை என்பதே என் கணிப்பு ! அவரவர் இடும் " ரேட்டிங் " மூலம் கணித்து, " புரொக்ராம் " மூலமே இந்த தரவரிசை அமைகிறது என்பது உண்மையானால்...

    கணினி அறிவு பெற்றவர் யாராலும் ஒரு வலைப்பூவினை முன்னுக்கு கொண்டுவர முடியும். அதேபோல எந்த ஒரு வலைப்பூவினையும் கண்ணுக்கு தெரியாமல் பின்னுக்கு தள்ளவும் முடியும் !!

    இதை பற்றி பலர் எழுதியும் அந்த தளத்தின் நிர்வாகிகள் யாரும் இதுவரையில் உரிய விளக்கம் தரவில்லை என்பது எனது ஐயப்பாட்டை இன்னும் உறுதியாக்குகிறது !

    கணினி நுட்பம் தெரிந்தவர்கள் பதில் கூறுவார்கள் என எதிர்பார்க்கிறேன் !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  3. திரு டி.என் முரளிதரனின் ஒரு பதிவுக்குப் பின்னர், அவர் கேட்டுக்கொண்டபடி நீண்ட நாட்களாய் இணைப்புக்குக் காத்திருந்த புதிய பதிவர்களை தமிழ்மணம் நிர்வாகம் இணைத்துக் கொண்டது. அதனாலும் தரவரிசைப் பட்டியல் மாறி இருக்கலாம். தளத்துக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையைப் பொறுத்துதானே ரேங்கிங் அமைகிறது?

    'எங்கள்ப்ளாக்' கூட 10 ஆம் இடத்திலிருந்து கடந்த மூன்று மாதங்களில் 25 ஆம் இடத்துக்குப் பின்னேறி இருக்கிறது!!!

    பதிலளிநீக்கு
  4. நம் தரத்தைப் பற்றி... அதாவது பதிவின் தரத்தைப் பற்றி யோசிப்போமே... அது தான் நல்லது... மற்ற சிந்தனை வீண்...

    இந்தப் பதிவிலேயே தமிழ்மணம் இல்லை... அதனால் பத்தாம் இடம் மாற்ற வாய்ப்புள்ளது...

    வரும் சந்திப்பில் நிறைய பேசுவோம் ஐயா...

    பதிலளிநீக்கு
  5. நாளதோறும் பதிவுகளை எழுதி , தொடர் வாக்குகளைப் பெற்றால் மட்டுமே முன்னிலை வகிக்க இயலும் என எண்ணுகின்றேன்.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் கரந்தையாரின் கருத்து கணிப்பு 100க்கு100 சரி நானும் இதையேதான் கடந்த ஒரு மாதமாக கவனித்து வந்தேன்.

      நீக்கு
  6. அண்மையில்தான் தமிழ் மணத்தில் நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் துணையோடு இணைந்துள்ளேன். தாங்கள் விவாதிக்கும் பொருண்மை தொடர்பாக கருத்து கூற இயலா நிலையில் உள்ளேன். இருப்பினும் தங்களது உணர்வுகளை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் தளத்தை தொடரும் பலரில் நானும் உள்ளேன். சில செயல்கள் மட்டும் மூட நம்பிக்கை என சொல்லிவிட முடியாது.
    1 , 2 , என்பதே மாறக்கூடியதுதான்.
    அதன் பின் செல்வதும் மூட நம்பிக்கைதானே.
    இது தங்களை குத்தக்கூடாது என்கிற அன்பினால்
    கொஞ்சம் தயங்கி பின் .... முன் வந்து .. எழுதும் பி. X மு .X . இல்லையில்லை வெறும் குறிப்பு

    பதிலளிநீக்கு
  8. அய்யா வணக்கம்.
    நானும் உங்களைப் போலத்தான். இப்படி ஒன்று இருப்பதே நீங்கள் சொல்லித்தான் தெரியும்.
    என் வலை நிச்சயம் ஏதேனும் தவறுதலாய் வந்திருக்கலாம் என்றே எண்ணுகிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. நேரம் கிடைக்கும்போது வலைப்பதிவில் எழுதுவது, அதற்கு வந்த கருத்துரைகளுக்கு மறுமொழிகள் எழுதுவது, மற்ற பதிவர்களின் தளங்களுக்கு சென்று படித்து விட்டு கருத்துரைகள் தருவது மற்றும் தமிழ்மணத்தில் கட்டாயமாக வாக்களிப்பது என்பது தவிர வேறொன்றும் அறியேன். கடந்த சில நாட்களாக தொடர்ந்து வலைப் பக்கம் நான் வராததால், எனது பதிவு தமிழ் மணம் ரேங்க் பட்டியலில் 5 இலிருந்து 8 இற்கு கீழிறங்கி விட்டது.

    என்றபோதும் உங்கள் பதிவில் நீங்கள் கேட்ட வினாவிற்கு பதிலாக, ஒரு பதிவையே எழுதலாம்.

    (உங்கள் பதிவினில் இருந்த தமிழ்மணம் ஓட்டுப்பட்டை என்ன ஆயிற்று?)

    பதிலளிநீக்கு
  10. தமிழ்மணம் ரேங்க்! அலேக்சா ரேங்க் என்பதெல்லாம் மாயை! அதைக் கடந்துவர சில காலம் பிடிக்கும்! தற்போது அந்த நிலையை நான் கடந்து வந்தாகிவிட்டது!

    பதிலளிநீக்கு
  11. அண்ணா நான் தமிழ்மணதில் இணைய முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறேன்ஆனால் இன்னும் இணைந்தபாடில்லை.(தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறேன்)அண்ணா.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஐயா எனது வரிசை எண் 45 என்று இருக்கிறது அதாவது தாங்கள் இந்த லிஸ்ட் எடுத்தபோது தேதி 30.01.2015 இன்று 05.02.2015 எனது எண் 33 நான் கடந்த ஒரு மாதமாக கவனித்து வருகிறேன் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல எனது நண்பர்கள் தினமும் குத்தி, குத்தி இன்று 78 ல் இருந்த என்னை 33 ஆக்கி விட்டார்கள் எனது பதிவு தராமானதா ? இல்லையா ? 80 எனக்கு தெரியாது உங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை என்றே நினைக்கின்றேன் உங்களின் இந்த தேடலுக்கும், இந்த பட்டியல் இணைப்பிற்க்கும் எனது ராயல் சல்யூட் ஐயா.

    18.01.2015 78
    20.01.2015 69
    21.01.2015 68
    22.01.2015 67
    24.01.2015 60
    25.01.2015 55
    27.01.2015 52
    28.01.2015 50
    28.01.2015 51
    29.01.2015 49
    30.01.2015 45
    01.02.2015 43
    02.02.2015 41
    03.02.2015 39
    04.02.2015 37
    05.02.2015 33

    மேலே உள்ளது எனது கடந்த மாத லிஸ்ட். நன்றி

    கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  13. உங்க ஆதங்கம் புரியுது. :) வந்தோமா பதிவெழுதினோமானு போய்க்கொண்டிருந்தால் பதிவர்களுக்கு ரொம்பவே "போர்" அடிக்கும். ஒரு சில நேரங்களில் இதுபோல் பலரும் ஆராய்ச்சியில் இறங்குவதுண்டுதான். :)

    ஒரு சிலர் உங்களைப்போல் வெள்ளந்தியாக வெளியே சொல்வதுண்டு. ஒரு சிலர் அவர் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்வதுண்டு. ஒரு சிலர் இதென்ன புரியலையே, எப்படியோ இருந்துட்டுப் போகட்டும்னு போய் விடுவதுண்டு.

    இந்த தரவரிசையில் ஒரு சிலர் உயர்ந்த எண் ணுக்கு போவதற்கு காரணம், அவங்க பெரிய இடைவெளி விட்டு பதிவெழுதி இருப்பார்கள் என்பதே. டின் என் முரளிதரன் ஒரு ஆ று மாதமாக பதிவெழுதாமல் இருந்தார். அதனால் இப்போ "உயர் எண்"க்கு போய்விட்டார். அடிக்கடி பதிவெழுதுபவர்கள் குறைந்த எண்ணில் இருப்பார்கள். ஒரு முறை மேலே போய்விட்டால் மறுபடியும் கீழே வவருவதற்கு ரொம்ப நாள் ஆகும். இது பலருக்கும் நடப்பதுதான்.

    நான் #1 ஆகணும்ணு அடம் பிடித்தால், டெய்லி ஒரு பதிவெழுதணும், மேலும் உங்க பதிவை பலர் வாசிக்கணும், பின்னூட்டமிடணும், மேலும் உங்க பதிவுக்கு தமிழ்மண வாக்குகள் அதிகம் கிடைக்கணும். இதெல்லாம் ஒழுங்கா நடந்தா நீங்க #1 தரவரிசையைப் பிடிக்கலாம். அவ்வளவுதான். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகமிகச் சரியான விளக்கவுரை கொடுத்த திரு. வருண் அவர்களுக்கு நன்றி.

      நீக்கு
  14. அண்ணா,
    தமிழ்மனம் பட்டியலில் முதன்முதலில் பதினேழாவது இடம் எனும் ரேங்க் வாங்கி என்னை வியக்கச் செய்தவர் நம்ம பாண்டியன் சகோ தான். ஸ்கூல் days லையே ரேங்க் கார்டை பார்த்தால் டரியல் ஆகிற ஆள் நான். இப்படி ஒரு ரேங்க் எடுத்திருக்கிறேன் என எனக்கு முதன்முதலில் சொன்னதே தென்றல் கீதா அக்கா தான்(நம் மதுரை பயணத்தின் போது) பின்னர் அது பற்றி கொஞ்சம் தீவிரமாய் ஆராய்ந்து தெரிந்து கொண்டேன். தமிழ்மனம் ரேங்க் என்பது நம் பதிவுகளின் தர அளவுகோள் அல்ல. அப்படி இருந்தால் ஒருநாளும் ஊமைக்கனவுகளுக்கு முன்னோ,மூங்கில்காற்றுக்கு முன்னோ,தேவியர் இல்லத்துக்கு முன்னோ,வளரும் கவிதைக்கு முன்னோ, மலர்தருவுக்கு முன்னோ, வரிசையில் மகிழ்நிறை இருந்திருக்காது இல்லையா:) தமிழ்மனம் ரேங்க் என்பது கடந்த மூன்று மாதத்தில் நம் பதிவுகளை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு வழங்கபடுகிறது. என்ன பதிவு, என்ன கருத்து என்பது இரண்டாம் பட்சம் . எவ்வளோ பேர் மூன்று மாதத்தில் பார்க்கிறார்கள் என்பது தான் மேட்டர். வருண் சொன்னது போல தொடர்ந்து பதிவு எழுதுபவர்கள், பார்வையாளர்களை பெறுபவர்கள் தரவரிசையில்(!?) முன்னணியில் இருக்கிறார்கள். உங்கள்"பேனாவை காயவிடாதே தாயே" எனும் சொல் மட்டும் தான் என்னை போல் சோம்பேறியையும் இப்படி முதல் பத்து இடத்துக்குள் வைத்திருகிறது. சினிமாவில் மாஸ் படம், கிளாஸ் படம் என பிரிக்கபடுவது போல தமிழ்மனம் ரேங்க் என்பது காலம் கடந்து நிற்கும் கிளாஸ் பதிவுகளுக்கு வாங்க படுவதில்லை. வந்தவுடன் பொறிபறக்கும் மாஸ் பதிவுகளுக்கு வழங்கபடுவது. so, மேலே பெரியவர்கள் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன். அந்த திரட்டி மூலமாக நிறைய பேர் நம் தளத்திற்கு வருகிறார்கள் அதோடு என் ஆராய்ச்சியை முடித்துக்கொண்டேன்:)) தமிழ்மனதிற்கும், நிலவன் அண்ணாவிற்கும் நன்றி:)

    பதிலளிநீக்கு
  15. தமிழ்மணம் ஓட்டுப்பட்டை மீண்டும் உங்கள் வலைத்தளத்தில் வந்து விட்டது. நன்றி. - த.ம.2

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சார்...
    என்னுடைய தளம் டாட் காம் ஆக இருப்பதால் ஒட்டுப்பட்டைக்காக மட்டும் blogspot-இல் நிரலி கொடுத்து தமிழ்மணத்தில் இதுவரை உள்ளேன்.
    ஆகையால் எனது தளம் ரேங்க்-கில் வராது.
    யாரெல்லாம் டாட் காம் தளமாக இருக்கிறார்களோ அவர்களது தளம் தமிழ்மண ரேங்க்-கில் வராது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///யாரெல்லாம் டாட் காம் தளமாக இருக்கிறார்களோ அவர்களது தளம் தமிழ்மண ரேங்க்-கில் வரா/////

      I think your observation is wrong. I see some blogs with .com address! please check that from the list.

      நீக்கு
  17. தமிழ்மணம் ரேங்க் எப்படி தருகிறார்கள்?
    (அதிகாரப்பூர்வமாக இல்லாமல் என் பார்வையில்)
    1. உங்களது தளம் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்...
    2. வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று/ நான்கு பதிவுகள் போட்டு தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
    3. எல்லா பதிவுகளும் ஏழு ஓட்டுக்களுக்கு மேலே வாங்கியிருக்க வேண்டும். (பதிவிட்ட ஒரு நாளுக்குள்)
    4. தமிழ்மணத்தில் வாசகர் பரிந்துரை மற்றும் மறுமொழிகள் பகுதியில் உங்களது பதிவுகள் அடிக்கடி வந்திருக்க வேண்டும்.
    5. அங்கிருந்து மற்றவர்கள் உங்களது பதிவுகளை க்ளிக் செய்து வாசித்திருக்க வேண்டும்.
    6. மறுமொழிகள் மற்றும் பதில் மறுமொழிகள் மூலமாக உங்களது பதிவு தமிழ்மண திரட்டியில் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
    7. தமிழ்மணத்தின் மூலமாக உங்களது பதிவு அதிக பக்கப்பார்வைகளை பெற்றிருக்க வேண்டும்.
    8. வார இறுதியில் டாப் இருபது தர வரிசை வலைப்பதிவுகளில் உங்களது தளம் வர வேண்டும். தொடர்ந்து வர வேண்டும்.

    இதில் சொல்லப்படாத காரணங்கள் இருப்பின் நண்பர்கள் தெரிவிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவையெல்லாம்தான் காரணங்கள் எனில், என் வலைப்பூவெல்லாம் முதல் பத்து இடத்துக்குள் வரவே முடியாது.

      நீக்கு
  18. ஐயா! தங்களின் இந்தப் பதிவைக் கண்டு வியப்பு! ஹஹஹ் எதனால் என்று கேட்கின்றீர்களா? "முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே" என்று அழகான புத்தகம் எழுதியவர் எங்கள் கவிஞர் முத்து நிலவன் ஐயா! அதனால் தான்...நண்பர் ஜோதிஜி சொல்லுவதை வழிமொழிகின்றோம். நாங்களும் இந்த ரேங்க் பட்டியல் பார்ப்பது இல்லை...கவலைப் படுவது இல்லை. இளங்கோ ஐயா சொல்லுவது போலத்தான் நாங்களும். அதே போன்று வருண் அவர்கள் சொல்லி இருப்பது போல// ஒரு சிலர் இதென்ன புரியலையே, எப்படியோ இருந்துட்டுப் போகட்டும்னு போய் விடுவதுண்டு.//

    எங்களுக்குத் தெரிந்ததை எழுதுகின்றோம் ஐயா அவ்வளவே! ரேங்கை விட எங்களுக்கு வரும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அவ்வளவே! பல நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கின்றார்கள் என்று மகிழ்வடைகின்றோம்.

    நாம் பதிவுகள் எழுத கணக்கெலாம் வைத்துக் கொள்வதில்லை. இடையில் எழுத முடியாமல் போனதும் உண்டு. எங்கள் ரேங்க் 4 போனதாக யாரோ சொன்னார்கள். நினைவில்லை. இப்போது உங்கள் பட்டியலில் அது 6 என்று சொல்லுகின்றது.

    சகோதரி மைதிலி அவர்கள் சொல்லுவது போலத்தான்....வேறு என்ன சொல்ல என்று தெரியவில்லை. அது ஒரு திரட்டி. இணைத்தால் வாசிப்போர் பலர். நாம் இதைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதுவோமே என்பதுதான் ....

    தங்களுக்கும், எங்களுக்குக் கருத்துச் சொல்பவர்களுக்கும், தமிழ்மணத்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  19. // ஐயா! தங்களின் இந்தப் பதிவைக் கண்டு வியப்பு! ஹஹஹ் எதனால் என்று கேட்கின்றீர்களா? "முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே" என்று அழகான புத்தகம் எழுதியவர் எங்கள் கவிஞர் முத்து நிலவன் ஐயா! அதனால் தான்...நண்பர் ஜோதிஜி சொல்லுவதை வழிமொழிகின்றோம்.// -
    மேலே சகோதரர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்கள் எழுதிய வரிகளை ரொம்ப, ரொம்பவே ரசித்தேன்.
    ஆசிரியர் முத்துநிலவன் அவர்களுக்கு, உங்களுக்கு இருக்கும் அலைச்சல், பல்வேறு பணிகளுக்கு இடையில் உங்கள் பதிவில் Comments Box இல் நீங்கள் வைத்திருக்கும் Comments Moderation என்பது ஒரு சுமையே. இதனை வெளியிட அடிக்கடி நேரம் செலவழிக்க வேண்டி வரும். மேலும் இதனால் அதிக கருத்துரைகளையும் எதிர்பார்க்க இயலாது. எனவே Comments Moderation ஐ நீக்கி விடுங்கள். ஒருவேளை வேண்டாத, விரும்பத்தகாத கருத்துரைகள் வந்தால் நீக்கி விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  20. //இதற்கு முன்னர் நீண்ட கருத்து எழுதி ஓகே பண்ணினேன்... ஆனால் அது எங்கே போனதென தெரியவில்லை... எனவே மீண்டும்...//

    முதலில் எழுத்தாளர்களுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்த தமிழ்மணத்துக்கு நன்றி.

    தமிழ்மண தரவரிசை என்பது...
    அதிகமான பகிர்வுகளை பதிய வேண்டும்...
    நமக்கு வரும் கருத்துக்களுக்கு பதில் போடுவதும் நாம் மற்றவர்களுக்கு கருத்து இடுவதும் கணக்கில் கொள்ளப்படும்...
    நமக்கு கிடைக்கும் வாக்குக்களும் கணக்கில் கொள்ளப்படும்...
    இதுதான் நான் அறிந்த வரையில்...

    எனக்கு தற்போது தரவரிசையில் 10-12க்குள் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஊருக்குச் செல்லும் மாதத்தில் எழுதுவதேயில்லை... அப்போது 120-130க்குள் இருப்பேன்... மீண்டும் வந்து எழுத ஆரம்பித்ததும் படிப்படியாக குறைந்து 12-ல் வந்து நிற்கும்... பத்துக்கு கீழ போகாது....

    ஐயா, ஜோதிஜி அண்ணா சொன்னது போல் தாங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. தரவரிசையில் வரவேண்டும் என்பதில்லை தரமான எழுத்துக்களை கொடுத்தால் போதும். தாங்கள் தரமான எழுத்துக்குச் சொந்தக்காரர்.... உங்கள் எழுத்தை வாசிப்பதற்ககென எங்களைப் போல் ஒரு கூட்டம் இருக்கிறது. அது தரவரிசைக்கு மேலான வரிசை.

    தனபாலன் அண்ணா தரவரிசையில் நூறுக்கு மேல் இருந்தாலும் தரமான எழுத்தாளர் வரிசையில் முன்னுக்கு இருப்பவர். அவருக்கு வரும் கருத்துக்கள் எவ்வளவு... இந்த வரிசையெல்லாம் எதற்கு அவருக்கு...

    தரவரிசைக்காக எழுதாமல் தரமான எழுத்துகளை எழுதுவோம்... அந்த வகையில் தரமான எழுத்துக்காரகள் எல்லாருமே பின்னால்தான் இருப்பார்கள். காரணம் சினிமா குறித்து எழுதினால் தமிழ்மணத்தில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் வாசிப்பவர்கள் அதிகம்.

    சினிமாவைப் பற்றி எழுதினால் தமிழ்மணத்திலும் முன்னணியில் வரலாம்.. உங்கள் எழுத்துக்கள் எங்களுக்கு எல்லாம் வரப்பிரசாதம்... நாங்கள் வாசிக்க காத்திருக்கிறோம்... துளசி சார் சொன்னது போல முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே என்று சொன்ன நீங்கள் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டாம்...

    உங்கள் கேள்வி நியாயமானதுதான்... நல்ல பகிர்வு...
    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  21. இது வீனான சிந்தனை ஐயா பதிவை எழுதினோமா இணைச்சா நம் பாட்டில் போனோமா என்று இருப்பதே என் கருத்து.

    பதிலளிநீக்கு
  22. ஏற்கனவே பலமுறை எழுதி விட்டதால் இதைப் பற்றி இப்போதைக்கு தனிப் பதிவு எழுத வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் புரிந்து கொண்டதை மட்டும் கூறுகிறேன்.தமிழ் மணத்தைப் பொறுத்தவரை முழுமையாக பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை பார்வையாளர்கள் ஒரு பதிவுக்கு 100-150 பார்வையாளர்கள் இருந்தால் போதுமானது. ஆனால் பதிவுகளின் எண்ணிக்கையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.பெற்ற ஓட்டுக்கள் வாசகர் பரிந்துரை உங்களுக்கு கிடைக்கும்பின்னூட்டங்கள் நீங்கள் மற்றவர்க்கு இடும் பின்னூட்டம் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்து நீங்கள் அதிகமாக யாருக்கும் பின்னூட்டம் இடாமலோ அல்லது உங்கள் பதிவர்க்கு பின்னோட்டம் குறைவாகவோ இருந்தால் தமிழ்மணம் தர வரிசையில் பின்னடைவு ஏற்படும் .( இது தானியங்கி தர வரிசைதான்)
    இந்த நுணுக்கங்களை தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றுபவர்கள் பல உண்டு .நமது டிடி பதிவு குறைவாக எழுதுவதால் அவர் பின்னிலையில் இருக்கிறார். ரமணி சார் நுணுக்கங்களை அறிந்தவர் அதனால் எப்போதும் தமிழ்மண தர வரிசையில்20 குள் இருப்பார், பகவான்ஜி கரந்தை ஜெயகுமார்,வெங்கட் நாகராஜ் ஆகியோரும் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள்
    மதுரைத் தமிழன் அதிக பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் பதிவர் .ஆனால் அவர் கிட்டத்தட்ட தினந்தோறும் பதிவுகள் எழுதினாலும் தேர்ந்தெடுக்கப் பட்ட வலை தளங்களுக்கு சென்று மட்டுமே பின்னூட்டம் விடுவார் . தமிழ் மண வாக்குகளும் அவருக்கு குறைவாகவே கிடைக்கிறது. காரணம். அடுத்தடுத்த தொடர் பதிவுகள் வாசகர்களின் எண்ணிக்கைய வைத்துப் பார்த்தால் அவர்தான் முதலிடம் பெறவேண்டும்.
    ஒன்றை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம். தமிழ் மண வரிசையில் பின்தங்கி இருப்பதற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கும் அதிக தொடர்பில்லை.
    நான் பின் தங்கி இருப்பதற்கான ஒரு காரணத்தை வருண் சரியாக சொல்லி விட்டார். இன்னொரு காரணமும் உண்டு. நான் எனது வலை தளமுகவரியை WWW.TNMURALI.COM என்ற முகவரி மாற்றம் செய்திருக்கிறேன். எனவே எனது வலைப் பதிவை புதிய வலைப்பதிவாகத்தான் தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன். எனவே முதலில் இருந்து தொடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
    சந்தர்ப்பம் வாய்க்கும்போது இன்னும் சொல்ல முயற்சிக்கிறேன்.

    உண்மையான நிலையை அறிய வேண்டும் எனில alexa தரவரிசையை பார்க்கலாம்( இதிலும் சில் சூட்சுமங்கள் உண்டு) www.alexa.com என்ற முகவரிக்கு செல்லுங்கள் அதில் உங்கள் முகவரியை இட்டு உங்கள் வலைப்பூவின் உலக அளவிலான தரத்தையும் இந்திய அளவிலான தரத்தையும் அறியமுடியும். alexa வரிசயில் 100000 க்குள் இடம் பெற்றுவிட்டால் உங்கள் வலைப் பதிவு உலக்க அளவில் பிரபலம் என்று அர்த்தம் .தமிழில் ஒரு சிலர் மட்டுமே ஒரு லட்சத்திற்கு கீழ் உள்ளனர் . தொடர்ந்து பதிவிடுல் தர வரிசையை முன்னேற்றும்
    அவர்கள் உண்மைகள் சொல்வது போல இவற்றைப் பரி கவலைப் படாமல் தொடர்ந்து பதிவிடுங்கள்
    தங்கள் அனுபவமும் அறிவும் எங்களுக்கும் தமிழுக்கும் பயன்படும் வகையில் தங்கள் பதிவுகள் தரமாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை

    பதிலளிநீக்கு
  23. நான் தமிழ்மணத்தில் இணைந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இணைந்த இரண்டாவது நாளில் ஒரு ஆர்வத்தில் எனது தர வரிசையை பார்த்தேன் 678 என்று காட்டியது. இப்போது 483 என்று காட்டுகிறது. கொஞ்சம் முன்னேறியிருக்கிறேனா...!

    ஆனாலும் தரவரிசையில் பெரிதாக நம்பிக்கை கிடையாது. மனதில் பட்டதை எழுதுகிறோம். கொண்டு சேர்க்க நல்ல திரட்டி இருக்கிறது என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  24. உங்கள் பதிவின் தரம் தமிழ்மணம் வரிசையில் அடங்கியது அல்ல ஐயா.

    தமிழ்மணம் வரிசையில் முதலிடத்தில் வர வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் பதிவுகள் எழுதுவதில்லை. எழுதிய பதிவுகளை இணைப்பதோடு சரி. தமிழ்மணத்தில் இணைப்பதன் மூலம் என்னைத் தொடரும் நண்பர்களைத் தவிர வேறும் சிலர் படிக்கலாம் என்ற எண்ணம் மட்டுமே உண்டு.

    இதெல்லாம் ஒரு மாயை. இதற்காக கவலைப்படத் தேவையில்லை.

    பதிலளிநீக்கு
  25. தமிழ்மணம் தரவரிசை சரியே! முழுவதும் சரியே!

    எந்த ஒரு பதிவும் எழுதாமல்....ஒரு ஒன்றை மாதமாக முதல் இடத்தில் இருந்த நம்பள்கியை இரண்டாவது இடத்திற்கு இறக்கிய காவேரி மைந்தன் அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  26. முத்து நிலவன் சார்

    எல்லோரும் தமிழ் மணத்தில் நுழைந்ததால் அதைப் பற்றி விமர்சனம் செய்கிறீர்கள் . நானும் பதிவு எழுதுபவன் .ஆனால் உள்ளுக்குள் சேர்க்க முடியவில்லை. சரி பார்க்கவும் என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது . எப்படி நுழைவது என்று சொல்கிறீர்களா?

    பதிலளிநீக்கு