எனக்குப் பிடித்த நடிகர் விஜய் எங்கே?

கதாநாயகனாக 22ஆண்டுகளைக் கடந்திருக்கிறார் விஜய்.
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'வெற்றி', 'நான் சிவப்பு மனிதன்', 'சட்டம் ஒரு விளையாட்டு' ஆகிய மூன்று படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.   
1984ல் 'வெற்றி' படம் வந்தது. அதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது ஒட்டுமொத்தமாக விஜய் சினிமாவுக்கு நடிக்கவந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.
1992ல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 'நாளைய தீர்ப்பு' படத்தின் மூலம் விஜய் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகும் தொடர்ந்து அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய படங்களிலேயே நடித்தார்.
தனது “சட்டம் ஒரு இருட்டறை“ படம் விஜய்காந்துக்கு வெற்றிப்பட மாக அமைந்ததை மனதில் கொண்டு தன் மகனை அறிமுகப் படுத்திய இரண்டாவது படத்திற்கு “சட்டம் ஒரு விளையாட்டு“ என்று பெயரிட்டார் தந்தை!
1996ல் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த படம் 'பூவே உனக்காக'. இந்தப் படம் விஜய்யை பட்டி தொட்டியெங்கும் நன்கு அடையாளப்படுத்தியது. அதனால், தொடர்ந்து காதல் படங்களிலேயே விஜய் நடித்தார்.
'லவ் டுடே', 'காதலுக்கு மரியாதை', 'நினைத்தேன் வந்தாய்', 'துள்ளாத மனமும் துள்ளும்' ஆகிய படங்கள் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிகளைக் குவித்தன.
'குஷி', 'பிரியமானவளே', 'ப்ரெண்ட்ஸ்', 'ஷாஹகான்', 'யூத்' என்று நடித்துக்கொண்டிருந்த விஜய் திடீரென ஆக்‌ஷன் பாதைக்கு மாறினார். 'பகவதி' , 'திருமலை', 'கில்லி', 'திருப்பாச்சி' ஆகிய படங்கள் விஜய்க்கு ஆக்‌ஷன் ஹீரோ அடையாளத்தைக் கொடுத்தன.
'செந்தூரப்பாண்டி' படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடித்தார்.  'ராஜாவின் பார்வையிலே' படத்தில் விஜய்யுடன் இணைந்து அஜித் நடித்தார். 'நேருக்கு நேர்', 'ஃப்ரெண்ட்ஸ்' படங்களில் விஜய்யும், சூர்யாவும் இணைந்து நடித்தனர். 'ஒன்ஸ்மோர்' படத்தில் சிவாஜியும், விஜய்யும் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ---தகவலுக்கு நன்றி – சினிமா விகடன்
---------------------------------------- 
எனக்குப் பிடித்த நடிகர் விஜய் எங்கே?
(துள்ளாத மனமும் துள்ளும் பார்த்த ஆதங்கம்) 

     இன்று -04-01-2015 – மதியம் கே.டி.வியில் “துள்ளாத மனமும் துள்ளும்“ படம் ஓடிக்கொண்டிருந்தது... அப்போது என் மனைவி கேட்டார் “என்ன விஜய் படத்தை இப்படி உட்காந்து பாக்கிறீங்க.. ஆச்சர்யமாருக்கு?உண்மைதான். இப்போதெல்லாம் வில்லு, குருவி.. துப்பாக்கி, பத்ரி, சச்சின் என இவரது படங்களை நான் பார்க்கவே இல்லை.. பார்க்க விரும்பியதும் இல்லை. ஏனெனில்.. நான் விரும்பிய –நம் பக்கத்து வீட்டு இளைஞனைப் போலும் தோற்றமுள்ள- விஜய் என்னும் அழகான நடிகரை இப்போது காணவில்லை. இப்போது நடிப்பது “இளைய தளபதி விஜய்“ என்கிறார்கள்...
     நான் பார்த்து ரசித்த –
பூவே உனக்காக விஜய்,
காதலுக்கு மரியாதை விஜய்,
துள்ளாத மனமும் துள்ளும் விஜய்,
முதலான படங்களின் நாயகன் விஜய்யை 
இப்போது காணவில்லை!



இப்போதெல்லாம் –
இளைய தளபதி விஜய்,
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்,
ஆக்ஷன் ஸ்டார் விஜய்,
சூப்பர் டான்ஸர் விஜய்,
அடுத்த சி.எம்.விஜய்  
கோடிகளில் புழங்கும் விஜய்
--ஆகிய எல்லாரையும் பார்க்க முடிகிறது...  

குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்த இளம் கதாநாயகன் என்று பெயரெடுத்தவர் படங்களில்தான் தவறாமல் ஒரு குத்தாட்டப் பாட்டு (திமுசுக்கட்டை அய்அய் திமுசுக்கட்ட) தவறாமல் இடம்பெறும்! குழந்தைகளும் ஆடுவார்கள்...! பள்ளிவிழாக்களில் பெற்றோர் உதவியுடன் ஆடுவார்கள்.
ஒத்த -குச்சி-ஆளு, பத்து இருபது -குண்டு-ரவுடிகளைப் பந்தாடுவார் (எம்ஜிஆர் கூட இப்படி அடிச்சதில்ல)
  
ஆமாம்... என் மனம் கவர்ந்த அந்த விஜய் எங்கே? 

--------------------------------------------------------------------------- 

12 கருத்துகள்:

  1. சரியான கேள்வி தான் அண்ணா. ஆமா அந்த விஜய் எங்கே??

    பதிலளிநீக்கு
  2. இனியும் கிடைப்பது சந்தேகம் தான்...

    பதிலளிநீக்கு
  3. உண்மைதான்
    அவர்மட்டுமல்ல அஜீத்கூட அவரது ஆரம்பகால படங்களை போலில்லாமல் தலயாக மாறியபிறகு இருவர் படங்களையும் என்னால் பொறுமையாக உட்கார்ந்து பார்க்க முடிவதில்லை. ஆனால் என்ன நம்மை போன்றவர்களை எதிர்பார்த்து இவர்கள் படம் எடுப்பதில்லையே. அவர்களுக்கு வாதாட நாம் வீட்டிலேயே அடுத்த தலைமுறை தயாராகிவிட்டது என்பதும் கசக்கும் உண்மை அய்யா.

    பதிலளிநீக்கு
  4. எனது மகளுக்கு விஜய் படம் என்றால் ரொம்ப பிடிக்கும் ஆனால் இப்பவெல்லாம் விஜய்படம் என்றால் வேண்டவே வேண்டாம் என்கிறாள் குழந்தைகளின் மனம் கவர்ந்த விஜய் இப்ப பெரியவர்களிடம் மாட்டி கேலிக்குரியவராக ஆகி விட்டார்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா.
    ஆதங்கம் புரிகிறது.. மிக விரைவில் நல்ல படத்துடன் வருவர்.. அதுவரை காத்திருப்போம் பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. ஆம்! உண்மையே! ஐயா! ஃப்ரென்ட்ஸ் படத்திலும் கூட மிக அழகாகச் செய்திருப்பார். அந்த விஜய் இப்போது வேறு ஒரு தளத்தில் பயணிப்பதால் தொலைந்துவிட்டார். கேட்டால் மக்கள் இதைத்தான் விரும்புகின்றார்கள் என்றும் சொல்லப்படும். இந்த மக்கள் யார் ஐயா?!!
    தொலைந்து போன விஜய் அவர் வருவாரா?!! (அவரது பாடலே!!!!!)

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா
    பூவே உனக்காக படத்தின் இறுதிக் காட்சி நம்ம வீட்டு பையனுக்கு காதல் தோல்வி என்பது போலவே வருந்த வைக்கும். ஆனால் இப்ப எல்லாம் பஞ்ச் டயலாக் பேசி தடம் மாறி போய் விட்டார். தொடர்ந்து 10 படங்கள் வரை ப்ளாப் படங்கள் கொடுத்து துப்பாக்கி தான் தூக்கி விட்டது. இனி மேலும் மக்களின் ரசனை அறிந்து நல்ல கதைகளில் நடித்தால் மக்கள் மனங்களில் இருப்பார். படத்தின் பெயர்களைத் தொகுத்து வெளியிட்டது அழகு ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் பழைய விஜய் இப்போது காணாமல் போய்விட்டார்!

    பதிலளிநீக்கு
  9. ஐயா...
    தங்கள் ஆதங்கம் புரிகிறது...
    அந்த விஜய் போயி ரொம்ப நாளாச்சு... இப்ப அவரோட குறியெல்லாம் சூப்பர் ஸ்டார் நாற்காலியும் முதல்வர் நாற்காலியும்தான்...

    அதற்காக மட்டுமே படங்களில் நடிக்கிறார்...

    குத்துப்பாட்டையும் பஞ்ச் டயலாக்கையுமே நம்பி நடிக்கும் நடிகனாகிவிட்டார்....

    பதிலளிநீக்கு
  10. ஆமாம் ஐயா.பூவே உனக்காக விஜயைக் காண்பது இனி இயலாது போலவே.அவர் மாஸ் ஹீரோ என்ற வட்டத்தைப் போட்டுக் கொண்டார்.

    பதிலளிநீக்கு