இப்படி இருக்கணும் புத்தாண்டு வாழ்த்து

(முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்)
வாழ்த்துவதில் கூட இத்தனை பொருள் இருக்க முடியுமா என்று என்னை வியந்து மகிழ்ந்து சிந்திக்க வைத்த வாழ்த்து ஒன்றை நம் வலைப்பக்க நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
ஆண்டுதோறும் புத்தாண்டின்போது -நல்ல மனசோடுதான் என்றாலும்- வாழ்த்துவதற்கு ஒரு வரைமுறை இல்லாமல் போய்விட்டது.
வாழ்த்துவோரும் வாழ்த்தப்படுவோரும் அதன்படி வாழ்ந்துவிடுவதும் இல்லை என்று தெரிந்துதான் வாழ்த்துகள் எல்லாம் வாரி வழங்கப்படுகின்றன. எனினும் அன்பைத் தெரிவிக்கும் ஒரு வழியாகவே அனைவருமே வாழ்த்துகிறோம், வாழ்த்தை ஏற்கிறோம்.
ஆனால் –
வாழ்த்துவதில் கூட இத்தனை பொருள் இருக்க முடியுமா என்று என்னை வியக்கவும் மகிழவும் வைத்த வாழ்த்து ஒன்றை நம் வலைப்பக்க நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் படைப்பு வெளிவந்த இதழ்- “காக்கைச் சிறகினிலே“ (2015 சனவரி)
இணைப்புக்குச் சென்று படித்துவிட்டு 
அதன்பின் மேலே படியுங்கள்
http://nadainamathu.blogspot.com/

படித்துவிட்டீர்களா?  
வாழ்த்துச் சொன்னவர் யார் தெரியுமோ? 
  புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் புகழ்சேர்த்த 
எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் 
திருமிகு முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
(தற்போது கோவை மாவட்ட மு.க.அ.) 
இந்த வாழ்த்து கடிதத்தை எழுதியிருக்கிறார்கள். 
அரிய அழகியல் பார்வையோடு அலுவலைப் பார்ப்பவர்,
அலுவலக கறார்த் தன்மையில் இலக்கியம் படைப்பவர். (எந்தச் சொல்லும் வீணாக இடம்பெறாத எழுத்துகள்!)
வாழ்த்துவதற்கு அவருக்கு மிகுந்த தகுதி உண்டு.
வாழ்த்தப் பெறுவோரும் அவரது இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றினால் அவர் மட்டுமல்ல தொடர்புடைய அனைவருமே மகிழ்வோம்.
இந்த அருமையான வாழ்த்து “காக்கைச் சிறகினிலே” சனவரி-2015 இதழில் வெளியானது. ரொம்பநாளாகவே அருமையாக வெளிவந்துகொண்டிருக்கும் இவ்விதழுக்கு ஐந்தாண்டுச் சந்தாக் கட்டவேண்டும் என்று நினைத்தும் அவ்வப்போது மறந்தும் வந்தேன். இந்தப் படைப்பு அந்த நினைப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த என்னைத் தூண்டியது. ரூ.1,250கட்டிவிட்டேன். அப்ப நீங்க..?

எடுத்துக் காட்டான இவ்வாழ்த்தை எழுதிய முனைவர் நா.அருள்முருகன் அவர்களுக்கும், இதனை வெளியிட்ட “காக்கைச் சிறகினிலே“ சமூக-இலக்கிய மாதஇதழ் ஆசிரியர் குழுவிற்கும் என் பாராட்டுகளும் நன்றியும்.
--------------------------------

13 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ.நானும் படித்தேன்...சிறந்த நிர்வாகத்திறமையும் மனித நேயமும்,தட்டிக்கொடுக்கும் பாங்கும் வெளிப்படும் கட்டுரை..

    பதிலளிநீக்கு
  2. வாசித்தேன் ஐயா...
    அருமையான வாழ்த்து...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    புத்தகம் பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் சென்னைபுத்தக கண்காட்சியில் தங்களின் புத்தகம் முதலாவது விற்பனையில் உள்ளது என்ற தகவலை மூங்கில்காற்று முரளி அண்ணா பதிவாக எழுதியுள்ளார் பாருங்கள் ஐயா.... வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. நானும் ஐயாவின் வலையில் புத்தாண்டு வாழ்த்தினைப் படித்தேன் ஐயா
    அருமை அருமை

    பதிலளிநீக்கு
  5. இவ்வாறான நிகழ்வுகளை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு கடைபிடிக்க ஆரம்பிக்கலாம். மிகவும் ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மிக்க நன்றி சகோ பதிவை அறிமுகம் செய்தமைக்கு வாசித்தேன் மிகச் சிறந்த பதிவே. அவர் பேருக்கு தகுந்தாற் போல் அனைத்தும் அமைத்துள்ளது. தொடர வாழ்த்துக்கள் சகோ ...!

    பதிலளிநீக்கு
  7. கடமையைச் செய்வதில் கருணையுடன் கூடிய மென்மையும் மறுப்பதில் நளினத்துடன் கூடிய உறுதியும் பிறக்கட்டும். இதுவே நடப்புக் கோப்பின் குறிப்பாகட்டும்.//
    அழகான மென்மையான இதமான வார்த்தைகளால் வாழ்த்து.
    பகிர்வுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  8. சற்று முன் தான் வாசித்தேன்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஐயா!

    இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா!
    மிக அருமையான நல்ல பகிர்வு! சென்று கருத்திட்டு வந்தேன்!

    அறிமுகத்திற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  10. ** அரிய அழகியல் பார்வையோடு அலுவலைப் பார்ப்பவர்,
    அலுவலக கறார்த் தன்மையில் இலக்கியம் படைப்பவர்.**
    சூப்பர் அண்ணா!
    ஒவ்வொரு ஆண்டு புத்தாண்டு அன்று ஏதேனும் வெகு சிறப்பாய் செய்துவிடுவது நம் c.e.o வின் வழக்கம் போல! சென்ற முறை புத்தாண்டு பயணக்கட்டுரையும் இதுபோல ஒரு அருமையான பதிவு. அவர் தமிழ் பணி மேலும் வளரும் என்பதில் ஐயமில்லை. அவர் சொன்னதை பின்பற்றுவோம்:)

    பதிலளிநீக்கு
  11. பகிர்விற்கு நன்றி அண்ணா..படித்துவிட்டேன்

    பதிலளிநீக்கு