இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்தவர் நம்மாழ்வார்

இயற்கை வேளாண் விஞ்ஞானி
கோ.நமமாழ்வார்

(உருவமே நமது தேசியக்கொடி!
காவித்  தலைப்பாகை,
வெள்ளைத்  தாடி,
பச்சைத்  துண்டு!
அவரது முகமே தர்மச்சக்கரம்!)
(நாளிதழ்களில் வெளிவந்த செய்தி - நா.மு.)

புதுக்கோட்டை, டிச.31. இயற்கையை நேசிக்கவும்,  சுவாசிக்கவும் நமக்குக் கற்றுக்  கொடுத்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் தான்  என்றார் கவிஞர் நா. முத்துநிலவன்.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் இயற்கை நலவாழ்வுச் சங்கத்தின் சார்பில் கோ. நம்மாழ்வார் நினைவு நாளை யொட்டி செவ்வாய்க் கிழமை நடந்த “இயற்கையோடு வாழ்வோம்“ என்னும் முழுநாள் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று தனது நிறைவுரையில் மேலும் அவர் பேசியது :

லிங்கா – பட விமர்சனம்



தாமதமாத்தான் பார்த்தேன். (சமீபத்திய ரஜினி  படங்களின் மீது அவ்வளவு பயம் எனக்கு... பயம் சில நேரம் நல்லதுதானே?)

LATE  IS  BETTER  THAN  NEVER  என்பது ஆங்கிலப் பழமொழி.
LATE  IS  WORST  THAN  FIRST என்பது இந்தப்படம் பார்த்தபின் எனக்குப் புரிந்தமொழி.

புத்தாண்டு அன்று காலை உங்கள் வீட்டுக்கு வருகிறேன்!


வரும் 01-01-2015 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல, 
காலை 9மணிக்கு, உங்கள் வீட்டுக்கு வருகிறேன்..

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள
“சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் தேவை...“
“கல்வி வளர்ச்சியா?“ “தொழில் வளர்ச்சியா?  
எனும் நகைச்சுவை - சிந்தனைப் பட்டிமன்றத்தில்,
நகைச்சுவைத் தென்றல், கலைமாமணி
திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் தீர்ப்பில்
வெற்றிபெற்றது எந்த அணி?

அவர் ஒரு தொடர்கதை! - கே.பி.க்கு அஞ்சலி.

அவர் ஒரு தொடர்கதை!
 
இயக்குநர் கே.பாலச்சந்தர் காலமான செய்தி தமிழ்த்திரை உலகில் எந்த அதிர்ச்சியையும் தரவில்லை! காரணம், ஒரு வாரம் முன்பே வதந்தியில் அவர் இறந்து விட்டதுதான்!

படிப்பாளியா? சிந்தனையாளரா?



புகழ்பெற்ற தெனாலிராமனின் 
“திலகாட்ட மகிடபந்தனம்“ கதை. 

தெரியாதவர்கள் மட்டும் படிக்கலாம்
மற்றவர்கள் கடைசிப் பத்திக்குப் போய்விடலாம்.

பொதிகைத் தொலைக்காட்சி - நா.முத்துநிலவன் நேர்காணல் - மறுஒளிபரப்பு

பொதிகைத் தொலைக்காட்சி
நா.முத்துநிலவன் நேர்காணல்
மறுஒளிபரப்பு- 

(அடப்பாவமே! எத்தன தடவை ஒளிபரப்பினாலும் அதுதானே வரப்போகுது? வருத்தம் தான் வருமே தவிர திருத்தம் எதும் வருமா என்ன?னு கேக்குறது யாருப்பா மதுரைத் தமிழனா?) 

நமது வலைப்பக்கத்தில் தெரிவித்திருந்தது போல பொதிகைத் தொலைக்காட்சியில்  நமது நேர்காணல், அந்த வாரம் ஒளிபரப்பாகவில்லை. அதற்கு அடுத்தவாரம் 20-12-2014, சனிக்கிழமை மாலைதான்  ஒளிபரப்பானது.

பொதிகைத்தொலைக்காட்சியில் நான்...



இன்று மாலை5.30 மணிக்கு பொதிகைத்தொலைக்காட்சியின்
“இலக்கியஏடு“ பகுதியில் எனது அரைமணி நெர்காணல் வருவதாகத் தகவல்

நான் இன்னமும் மலெசியாவில்தான் இருப்பதால்...முன்னதாகத் தகவல் தரமுடியாமைக்கு மன்னித்து நண்பர்கள் பார்த்துக் கருத்துத் தெரிவிக்க வேண்டுகிறேன்
------------------------------------
இந்த நிகழ்ச்சி நான் முன்னர்த் தெரிவித்திருந்தபடி
13-12-2014-க்குப் பதிலாக 20-12-2014  சனிக்கிழமை - மாலை 5.30 - 6.00..மணிக்கு ஒளிபரப்பானது.

விரைவில் நம் வலைப்பக்கதில் ஏற்றுவேன்.
நேர்காணல் பார்த்தவுடன் அன்று மாலையே என்னை செல்பேசியில் தொடர்பு கொண்ட நண்பர்கள் என்னை மன்னிக்க.  அந்தநேரம் 2015-ஆங்கிலப் புத்தாண்டுக்கான கலைஞர் தொலைக்காட்சிப் பட்டிமன்றப் பதிவில் இருந்ததால் அந்த நண்பர்களுடன் பேச முடியாமல் இருந்தேன் .
இரண்டையும் விரைவில் நம் வலையில் ஏற்றுவேன்.நன்றி
உங்கள் - நா.மு.21-12-2014 காலை 8மணி.

அமுதசுரபி இலக்கிய இதழில் நா.முத்துநிலவன்

அமுதசுரபி இதழில் நா.முத்துநிலவன் நேர்காணல்
MUTHU NILAVAN INTERVEW IN AMUDHA SURABI MONTHLY

http://amudhasurabi.in/december_2014/amudhasurabi_december2014.html#p=44

(நான் இப்போது மலெசியாவில் இருப்பதால் எனது மடிக்க ணினியொடு அதிகமான நேரம்செலவிட முடியாமல்... நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்)

சன் டி.வி.யின் பேய்க் காமெடிகள்!

சன் டி.வி.யின் பேய்க் காமெடிகள்!
இன்றிரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சியைப் பார்த்து பயந்தே போய்விட்டேன்... 

அதுவும் சன் தொலைக்காட்சியில்
ஞாயிறு விடுமுறையில்
வந்த பைரவீ...!
பாவிகளுக்குப் பிரியமானவள்! 
மன்னிக்கவும்
ஆவிகளுக்குப் பிரியமானவள்!

நான் பயந்தது 
பேயைப் பார்த்தல்ல.. 
பேயே பயந்து பேய்  
அடச்சே..
பேயே பயந்து போய்
பேய் அலறல் அலறியதைப் பார்த்துத்தான்!