தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

“அடிவானம் நோக்கிச் சில அடிகள்“ -முனைவர் பா.மதிவாணன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா.

திருச்சி - பாரதிதாசன் பல்கலைக்கழகத் 

தமிழ்த்துறைத் தலைவர் 

முனைவர் பா. மதிவாணன் அவர்கள் எழுதிய  “அடிவானம் நோக்கிச் சில அடிகள்”, ”தொல்காப்பியம் பால.பாடம்”

நூல்கள் வெளியீட்டு விழா

        தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் முனைவர் பா. மதிவாணன் எழுதிய அடிவானம் நோக்கிச் சில அடிகள் மற்றும் தொல்காப்பியம் பால. பாடம் நூல்கள் வெளியீட்டு விழா 01-08-2014வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ம. திருமலை நூல்களை வெளியிட, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழியல் துறைத் தலைவர் மா. இராமலிங்கம் (எழில்முதல்வன்) முதற்படியை பெற்றுக் கொண்டார்.
நூல்வெளியீட்டுவிழாவில் இடமிருந்து வலகமாக, அய்யா நிலையப் பதிப்பக  நிர்வாகி தங்க.செந்தில்குமார், பேராசிரியர் முனைவர் பா.மதிவாணன், நூல்களைப் பெற்றுக்கொண்ட -முனைவர் எழில்முதல்வன், நடுவில் முனைவர் அ.தெட்சிணாமூர்த்தி, நூல்களை வெளியிடும் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மா.திருமலை,
மற்றும் கவிஞர் நா.முத்துநிலவன் ஆகியோர் உள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------- 
விழாவில் கவிஞர் நா. முத்துநிலவன் பேசியது:  அடிவானம் நோக்கிச் சில அடிகள் மற்றும் தொல்காப்பியம் பால. பாடம் ஆகிய நூல்கள் எழுதிய முனைவர் பா. மதிவாணனின் தந்தை பாவலரேறு    ச.பாலசுந்தரம் அவர்களை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ச. பாலசுந்தரம் சங்கத் தமிழ் இலக்கியத்தை பின்பற்றியவர். அவரது மகன் மதிவாணன் நவீன தமிழ் இலக்கிய காலத்தில் உள்ளார். மதிவாணன் நூல்களில் சமூக பார்வை உள்ளதை பார்க்க முடிகிறது என்றார். 
விழாவில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம. திருமலை பேசியது:
        மதிவாணன் புத்தகத்தில் தேசிய பார்வை, பொதுவுடைமை சிந்தனை உள்ளது. அவரது கட்டுரைகளில் இலக்கியங்களை வரலாற்றுப் பார்வையில் பார்க்கும் முறை நடைபெற்றுள்ளது என்றார்.
        நூல்கள் வெளியீட்டு விழாவுக்கு மதுரை செந்தமிழ்க்கல்லூரி முன்னாள் முதல்வர் அ. தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் இலக்குமி குமாரன் ஞானதிரவியம், தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் இரா. காமராசு ஆகியோர் கருத்துரை வழங்கினர். நூல்களின் ஆசிரியர் பா. மதிவாணன் ஏற்புரை நிகழ்த்தினார்.இதில் சேக்கிழார் அடிபொடி டி.என். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
-நன்றி-தினமணி-03/08/2014 (திருச்சி,தஞ்சை,புதுகைப் பதிப்புகள்)
------------------------------------------------

அடிவானம் நோக்கிச் சில அடிகள்
அணிந்துரை -
கவிஞர் ஈரோடு தமிழன்பன், சென்னை.
உள்ளடக்கம் -
1.நாட்டியலும் பாட்டியலும்,
2.நாட்டுப்பாடல்கள் - ஒரு கண்ணோட்டம்,
3.கலாநிதி கைலாசபதி,
4.பழந்தமிழின் புத்தெழுச்சி,
5.வடிவநோக்கில் புதுக்கவிதை,
6.வ.உ.சி.யின் நாட்டொருமைச் சிந்தனைகள்,
7.பாரதிநோக்கில் பாட்டு-செய்யுள்-கவிதை,
8.பெரியபுராணம் -சுவடிவழி ஆய்வுப்பதிப்புகள்,
9.தெ.ச.சொக்கலிங்கத்தின் “காந்தி“ இதழ்கள் அறிமுகம்,
10.விதியே..விதியே..(எழுத்துச் சீர்மை),
11.புதுமைப்பித்தன் சிறுகதைகளில் மக்களாட்சிப்பண்புகள்,
12.நச்சினார்க்கினியர்,
13.அண்மைக்கால வரலாறு-ஆவணப்படுத்தல் பற்றி
14.பாரதியின் சொல்பதிவுகள்
15.தமிழ் இதழியல் நடையின் வரலாற்றுப்போக்குகள்,
16.திராவிட இலக்கியம் -உடைப்பு-கட்டமைப்பு-செழுமை,
17.மயிலையாரின் இலக்கிய வரலாற்றாய்வு
--------------என 17ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.
பக்கம் -168, விலை ரூ.125,
--------------------------------------

தொல்காப்பியம் பால.பாடம்
அணிந்துரை-
பேரா.சி.கு.வெ.பாலசுப்பிரமணியன்,
மேனாள் இலக்கியத்துறைத் தலைவர்,
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சை.
உள்ளடக்கம்-
பகுதி-1
1.இலக்கண அமைதி,
2.பொருள் தெளிவு,
3.கொள்கை நோக்கு,
4.காரணம் விளங்காமை
பகுதி-2.
1.தமிழ்மரபில் செவ்வியல் இலக்கிய உரைதிறன்
2.சங்க இலக்கியக் கால வரையறை
3.தொல்காப்பியத்தில் “பாடம்“இல்லை
4.குறுந்தொகைப் பதிப்புகள்,
5.ஞெண்டொன்று கண்டேன், நண்டங்கு இல்லை
6.நெய்தற்கலிப் பாடமீட்பு -இரு பாவேறுபாடுகள்..
7.தொல்காப்பிய அணுகுமுறையில் நவீன இலக்கியங்கள்,
8.கு.ப.ரா.கதைகளில் தமிழ்ச்செவ்வியல் இலக்கியச் சாயல்.
------------என 12 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
பக்கம்-128, விலை ரூ.125


-------------------------------
இருநூல்களின் வெளியீடு,
முனைவர் தங்க.செந்தில்குமார்.
அய்யா நிலையம்,
கதவு எண்-1603, 
ஆரோக்கிய நகர் 5ஆம் தெரு,
மின்வாரியக் காலனி,
நாஞ்சிக்கோட்டை சாலை,
தஞ்சாவூர்-613 006
அலைபேசி - 9443007623
--------------------------------
நன்றி - 
1) முனைவர் பா.மதிவாணன் அவர்களின் வலைப்பக்கம்-
http://inithuinithu.blogspot.in/2014/08/blog-post.html
(2) தினமணி வலைப்பக்கம் -
http://www.dinamani.com/edition_trichy/tanjore/2014/ 08/03/ 
----------------------------------------------------------------------------------

6 கருத்துகள்:

 1. தமிழகத்தில் அற்புதமான நிகழ்வு அரங்கேறி உள்ளது. பழந்தமிழ் நூல்கள் மறு பதிப்புப் பெற்றுத் தோலுரித்துக் கொண்ட நிகழ்வு. கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய நூல்கள். அறிமுகத்திற்கு நன்றிகள் ஐயா. தங்களின் சிறப்புரை நன்றாக அமைந்திருக்கும். நான் புதுக்கோட்டையை விட்டு வந்த பின்பு நிறைய கோட்டை விட்டு விட்டேன் ஐயா. வருத்தமாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா.

  நூல்பற்றிய விபரத்தைபதிவில் படித்தபோது படிக்கவேண்டும் என்ற ஆசை ஐயா. பகிர்வுக்கு நன்றி.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. தமிழன்னைக்கு மேலும் சில மகுடங்கள் ...வாழ்த்துகள் சார் மதிவாணன் அய்யாவிற்கும் அறிமுகம் செய்த உங்களுக்கும் ..

  பதிலளிநீக்கு
 4. அய்யா வணக்கம்,
  பாவலர் பாலசுந்தரனார் உரை “ தாய்க்கொலை“ பற்றிய ஐயம் ஒன்றினைத் தீர்க்க உதவியது.
  கவிஞர். பாரதிதாசன் அவர்களின் தாய்க்கொலை என்ற பதிவின்
  http://bharathidasanfrance.blogspot.in/2014/08/blog-post_4.html#comment-form
  பின்னூட்டம் காண வேண்டுகிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 5. சிறந்த நூல் அறிமுகம்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 6. நூல் வெளியீட்டு விழாவில் தங்களின் பேச்சு அருமை ஐயா
  கேட்கும் வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்கின்றேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு