நம் தமிழைத் தெரிந்து கொள்வோம்

   இன்று மாலை கஜகஸ்தானிலிருந்து நம் வலைநண்பர் திரு.சம்பத் பேசினார்...  அப்படியே தமிழின் இன்றைய நிலை குறித்த கவலையில் போய் நின்றது உரையாடல். பள்ளி கல்லூரித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுக்கிறவர்களே பின்னால் தமிழில் தடுமாறுவதையும், வரவர “தமிழ் தெரியாது அல்லது ஆங்கிலம் அளவுக்கு(?) தமிழ் வராது“ என்பதைப் பெருமையாகப் பேசும் நிலை எங்கே கொண்டுபோய் விடும்? இந்தக் கவலையோடு, கடந்த சில ஆண்டுகளாக அரசுப்பணியாளர் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகளில் நான் தயாரித்துத் தந்த வினாத்தாளில் முழு மதிப்பெண் எடுத்தவரும் இருந்ததை நினைத்துக்கொண்டேன்... அந்த வினாத்தாள் மாதிரிகளில் ஒரு மாதிரி இது... 

இது நம் வலை-நண்பர்களுக்கான 
போட்டித் தமிழ்த்தேர்வு!
யார் வேண்டுமானாலும் 
எழுதிப் பார்க்கலாம்
மதிப்பெண்களைச் சொல்ல வேண்டிய
அவசியமில்லை
(சும்மா நமக்குநாமேதெரிந்து கொள்ளத்தானே?)

அடடே!.. விடை எழுதத் தயாராகுங்க...  ஆங்....!

இதோ கேள்விகள் ... 

1.    குமரியில் உள்ள வள்ளுவர் சிலையின் உயரம் என்ன?
2.    சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் எது?
3.    “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்“ வரி இடம்பெற்ற நூல் எது?
4.    பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் எது?
5.    தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் பழந்தமிழ் நூல் எது?
6.    “ஒன்றே குலம் ஒருவனே தேவன்“ என்று கூறியவர் யார்?
7.    “சாதி இரண்டொழிய வேறில்லைஎன்ற வரிகள் யாருடையவை?
8.    பள்ளு நூல்களுல் சிறந்த நூல் எது?
9.    தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது?
10. கண்ணதாசன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் எது?
11. “தீ இனிது“ என்று பாடிய கவிஞர் யார்?
12. “புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்“ என்ற கவிஞர் யார்?
13. “முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளே“ என்ற கவிஞர் யார்?
14. ஜெயகாந்தனின் எந்தச் சிறுகதை பின்னர் நாவலாக வளர்ந்தது?
15. பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் படிக்கப்போறேன்“  என்றவர் யார்?
16. தன் மனைவியை இறைவனுக்காக விட்டுக்கொடுத்த நாயனார் யார்?
17. கடவுளும் கந்தசாமியும் – சிறுகதை ஆசிரியர் யார்?
18. கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்ட அண்ணாவின் நாவல் எது?
19. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் யார்?
20. கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலை வெளியிட்டவர் யார்?
21. வள்ளலாரின் கீர்த்தனைகள் அருட்பா அல்ல, மருட்பா என்றவர் யார்?
22. “இருபத்துநாலாயிரம் நபிகளில் ஒருபெண்நபிகூட இல்லையே? ஏன்வாப்பா–எனும் கவிதை வரிகளை எழுதியவர் யார்?
23. காவிய காலம் என்ற ஆய்வு நூலை எழுதியவர் யார்?
24. “புதுக்கவிதை –சொற்கள் கொண்டாடும் சுதந்திரதின விழா“ –என்றவர் யார்?
25.  “இரவில் வாங்கினோம், விடியவே இல்லை“ –என்ற கவிஞர் யார்?

இவற்றுக்கான விடைகளைத் தயாரித்துக் கொண்டு, திருச்சியில் வாழும் ஆங்கில ஆசிரியரும், தமிழில் புலமை மிகுந்தவருமான திரு ஜோசப் விஜூ, மதுரையில் தமிழ் படிக்கும்போதே மாநில முதல் மதிப்பெண் பெற்ற திரு கொ.சுப.கோபிநாத் ஆகியோரின் வலைப்பக்கம் சென்று, தமது விடைகளைச் சரிபார்த்துக் கொள்ளலாம். (அவர்கள் பதிலிடுவர் என்னும் நம்பிக்கையில் எழுதுகிறேன்... அய்யா, இந்த என் பதிவைக் கவனிக்காமல் காலை வாரிடாதீங்க....)

கொசுறுக் கேள்வி  (ஆடித்தள்ளுபடி காலம்ல..? அதுனால இதை போனஸ் கேள்வியா வச்சிக்கலாம்.. இதற்கு மட்டும் பதிலளித்து விட்டால் எல்லாக் கேள்விகளுக்குமான பதில் தந்த மதிப்பெண்ணில் 25க்கு 10மதிப்பெண் சேர்த்துக் கொள்ளலாம்)-

அது இது..எது? (சிவ.கார்த்திகேயன் மன்னிக்க..)

சாம்போதும் தமிழ்படித்துச் சாதல் வேண்டும் -என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேதல் வேண்டும்” எனும் கவிதையை எழுதியவர் யார்?

விடைகாண, பார்க்க வேண்டிய வலைப்பக்கங்கள் - 

திரு ஜோசப் விஜூ அவர்களின் தளம் - http://oomaikkanavugal.blogspot.in/
திரு கொ.சுப.கோபிநாத் அவர்களின் தளம் - http://ilakkanatheral.blogspot.in/ 
------------------------------------------------------------------- 

40 கருத்துகள்:

  1. ஐயா,

    " தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா ! " என்ற தலைப்பில் ஒரு பதிவை எனது வலைப்பூவில் பதிந்துவிட்டு இங்கு வந்தால் தமிழ் தேர்வு...

    மிகவும் மகிழ்ச்சி. ஆனால் எனக்கு எத்தனை கேள்விகளுக்கு சரியான விடையளிக்க முடியும் என தெரியவில்லை !

    ‍ஹிந்தி எதிர்ப்பு போராட்ட காலத்துக்கு பிறகு,வலைப்பூக்களின் மூலம் மிகப்பெரிய தமிழ் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை அடித்து சொல்வேன் நான் !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

    http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

    ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )





    பதிலளிநீக்கு
  2. 1. குமரியில் உள்ள வள்ளுவர் சிலையின் உயரம் என்ன?
    இந்தியாவிற்கு ஒரு டிக்கெட் எடுத்து தந்தா அளந்து சொல்லுறேன்

    2. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் எது?
    சிலப்பதிகாரம் கேள்வி பட்டு இருக்கிறேன் மனைவி அதிகாரம் தினம் கேள்விபட்டு இருக்க்கிறேன் ஆனால் நீங்க சொன்ன சிற்றதிகாரம் என்னவென்று தெரியலையே ஐயா

    3. “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்“ வரி இடம்பெற்ற நூல் எது?
    அதுக்கு அப்புறம் அவள் அண்ணனும் நோக்கினானன் என்பதை படித்து இருக்கிறேன் ஆனால் நூல் மறந்து போய்விட்டது

    4. பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் எது?
    காய்ச்சல் வந்தால் சின்ன பிள்ளையாக இருக்கும் போது வீட்டில வாங்கி தந்த பன்னுதான் ஞாபகம் இருக்கு

    5. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் பழந்தமிழ் நூல் எது?
    N/A

    6. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்“ என்று கூறியவர் யார்?
    எம்ஜியார் நான் சின்ன புள்ளையாய் இருக்கும் போது எம்ஜியார் படத்தில் பார்த்து இருக்கிறேன்

    7. “சாதி இரண்டொழிய வேறில்லை” என்ற வரிகள் யாருடையவை?
    எந்த சாதிக்காரபயலோ தை சொல்லி இருப்பான்

    8. பள்ளு நூல்களுல் சிறந்த நூல் எது?
    நூலுக்கும் பல் உண்டா?

    9. தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது?
    எழுதியது யார் என்று வந்திருக்க வேண்டுமோ?

    10. கண்ணதாசன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் எது?
    இது கூட தெரியவில்லையா அந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற கண்ணதாசன நாவல்தானுங்க

    11. “தீ இனிது“ என்று பாடிய கவிஞர் யார்?
    இப்படியெல்லாமா எழுதுனாங்க

    12. “புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்“ என்ற கவிஞர் யார்?
    தவம் தவமாய் இருந்து பிள்ளையை பெற்றவாரகத்தான் இருக்க முடியும்

    13. “முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளே“ என்ற கவிஞர் யார்?
    N/A
    14. ஜெயகாந்தனின் எந்தச் சிறுகதை பின்னர் நாவலாக வளர்ந்தது?
    N/A
    15. ‘பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் படிக்கப்போறேன்“ என்றவர் யார்?
    நல்ல நெட்வசதி கொண்ட புத்திசாலி பையந்தானுங்க
    16. தன் மனைவியை இறைவனுக்காக விட்டுக்கொடுத்த நாயனார் யார்?
    என்ன மனுசன்யா அந்த நாயனார் அதனால்தான் அவர் நாய் ஆனாராக மாறினாரோ
    17. கடவுளும் கந்தசாமியும் – சிறுகதை ஆசிரியர் யார்?
    கந்தசாமி அல்லது அவந்து நண்பனாகத்தான் இருக்க வேண்டும்
    18. கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்ட அண்ணாவின் நாவல் எது?
    N/A
    19. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் யார்?
    N/A
    20. கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலை வெளியிட்டவர் யார்?
    N/A
    21. வள்ளலாரின் கீர்த்தனைகள் அருட்பா அல்ல, மருட்பா என்றவர் யார்?
    N/A
    22. “இருபத்துநாலாயிரம் நபிகளில் ஒரு பெண்நபிகூட இல்லையே? ஏன் வாப்பா” – யார்?
    N/A
    23. காவிய காலம் என்ற ஆய்வு நூலை எழுதியவர் யார்?
    காவிய காலத்தில் வாழ்ந்தவனாகத்தான் இருக்க முடியும்

    24. “புதுக்கவிதை –சொற்கள் கொண்டாடும் சுதந்திரதின விழா“ –என்றவர் யார்?
    அந்த புதுக் கவிதையை எழுதியவர்தான் அது

    25. “இரவில் வாங்கினோம், விடியவே இல்லை“ –என்ற கவிஞர் யார்?
    இரவில் வாங்கினார்களா அல்லது இரவல் வாங்கினார்களா?

    எனக்கு தெரிந்த பதில் இதுதான் உங்களுக்கு சரியான விடைதான் வேண்டுமானால் கூகுலில் காப்பி அடித்துதான் சொல்ல வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “இந்தியாவிற்கு ஒரு டிக்கெட் எடுத்து தந்தா...“ - ஆகா... டிடி சார் மாதிரி நானும் டிக்கெட் வாங்கிடுறேன்... தங்களின் நகைச்சுவை கலந்த எதார்த்த பதில்களை ரசித்தேன் (அப்ப.. ஒருகேள்விக்குக் கூட பதில் தெரியலயாக்கும்.. நாங்க நம்பிட்டோம்..)

      நீக்கு
    2. ஹாஹாஹா.....ஐயாவின் கேள்விக்கணைகளைப் பார்த்து அறிவுக்கு விருந்தாச்சேனு, வந்தா, தமிழா.....தமிழா....உங்கள் பதில்கள் வாசித்து சிரித்து சிரித்து....வயிறு புண்ணாகி....அதிலிருந்து மீண்டு வந்துதான்... ஒவ்வொரு கேள்வியா யோசிச்சு பதில் சொல்லணும்.....

      நீக்கு
  3. பாதி மட்டும் தெரிந்தது
    மீதியைத் தெரிந்து கொள்ள ஆவல்
    அருமையான புதிய முயற்சி
    தொடர்ந்தால் மகிழ்வோம்
    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீதியை நம் நண்பர்கள் தொடர்கிறார்கள் அய்யா.. அந்தத் தமிழ் வளர்க்கும் தளங்களையும் தாங்கள் பார்க்க வேண்டும், அவர்களின் தமிழறிவை நம் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் நோக்கிலும்தான் இந்த வழி அய்யா. தவறென்று நினைத்தால் மன்னிக்க வேண்டும். அப்புறம் அய்யா வலைக்குடும்பச் சந்திப்பு -வலைப்பதிவர் திருவிழா-பணிகள் எவ்வாறு உள்ளன? வேலைகளைத் திட்டமிடும்போது ஒரு பதிவு இடுங்கள் நண்பர்களின் வலைகளில் எடுத்துப்போட்டு அனைவரும் அறியச் செய்து திருவிழாச் சிறக்கச் செய்வோம்.

      நீக்கு
  4. வணக்கம்
    ஐயா.

    உண்மைதன் ஐயா. நல்ல முயற்சி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர்கள் சொன்னால் 500 கேள்விகள் கைவசம் தயார்...
      போட்டுடவா.? (அட...அங்க “அய்யய்யோ“ ங்கறது யாருங்க.. டிடி மதுரைத்தமிழன் கூட்டணி மாதிரி இருக்கு..) சரி பொழச்சிப்போங்க

      நீக்கு
  5. நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுகிறேன். நீங்கள் தொகுத்துள்ள கேளவிகளில் இரண்டொன்றைத் தவிர மற்றவைகளுக்குப் பதில் தெரியவில்லை. பரீட்சை இவ்வளவு கடினமாக வைத்தால் நாங்கள் எப்படி வெற்றி பெறுவது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “வெட்கப்படுகிறேன்.“ - அதெல்லாம் ஒன்னுமில்ல அய்யா.. கொஞ்சம் கடினமான கேள்விகள்தாம்.. மாவட்ட அலுவலர் (இரண்டாம் நிலை) பதவிக்கான தேர்வுக் கேள்விகள் இவை.. நன்றி

      நீக்கு
  6. பதில்கள்
    1. உடு ஜூட்டா... எஸ்கேப்... (என்றாலும் -ஓட்டப்பந்தயம் போல- முதலில் வந்து கருத்திட்டமைக்கு நன்றி வலைச்சித்தர் டிடி அவர்களே! நண்பர் ரூபனின் பின்னூட்டத்தின் பின் உள்ள எனது பின்னூட்டம் பார்த்து என்னை மன்னிக்க..)

      நீக்கு
  7. நன்றி அய்யா. (பணிஓய்வு பெற்றபின் ஓய்வில்லாப் பயணங்கள்.. இடையில் நள்ளிரவில் வீடு திரும்பி மதியம் கிளம்பி.. தங்களின் முந்திய கேள்விக்கான பதிலை விரைவில் உங்கள் தளத்திலேயே இடுவேன் அய்யா மன்னியுங்கள்..)

    பதிலளிநீக்கு
  8. தமிழில் இப்படியெல்லாமா கேள்வி கேப்பீங்க? சில கேள்விகளுக்கு பதில் தெரியும். மற்ற கேள்விகளுக்கு ? - இருக்கவே இருக்கு அந்த இரண்டு தளங்கள்.
    மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா... பணியுமாம் என்றும் பெருமைன்னு வள்ளுவர் சும்மாவா சொன்னாரு ? நன்றி அய்யா

      நீக்கு
  9. 1. குமரியில் உள்ள வள்ளுவர் சிலையின் உயரம் என்ன?
    133 அடி
    2. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் எது?
    நன்னூல்
    3. “அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்“ வரி இடம்பெற்ற நூல் எது?
    கம்பராமாயணம்
    4. பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் எது?
    பரிபாடல் (தமிழ் பாடத்தில் படித்த நினைவு)
    5. தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் பழந்தமிழ் நூல் எது?
    புற நானூறு ((தமிழ் பாடத்தில் படித்த நினைவு)
    6. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்“ என்று கூறியவர் யார்?
    திருமூலர்
    7. “சாதி இரண்டொழிய வேறில்லை” என்ற வரிகள் யாருடையவை?
    ஔவையார்
    8. பள்ளு நூல்களுல் சிறந்த நூல் எது?
    முக்கூடற்பள்ளு (தமிழ் பாடம்)
    9. தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது?
    அரசமரம் சொன்ன கதை ...என்று பொதுஅறிவுக்காகப் படித்த நினைவு...
    10. கண்ணதாசன் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் எது?
    சேரமான் காதலி
    11. “தீ இனிது“ என்று பாடிய கவிஞர் யார்?
    பாரதியார்
    12. “புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்“ என்ற கவிஞர் யார்?
    கவிக்கோ அப்துல்ரஹ்மான்
    13. “முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளே“ என்ற கவிஞர் யார்?
    தெரிந்து கொள்ள வேண்டும்
    14. ஜெயகாந்தனின் எந்தச் சிறுகதை பின்னர் நாவலாக வளர்ந்தது?
    அக்கினிப்ப்ரவேசம் என்ற நினைவு
    15. ‘பள்ளிக்கூடம் இல்லாத ஊரில் படிக்கப்போறேன்“ என்றவர் யார்?
    தெரிந்து கொள்ள வேண்டும்
    16. தன் மனைவியை இறைவனுக்காக விட்டுக்கொடுத்த நாயனார் யார்?
    தெரிந்து கொள்ள வேண்டும்
    17. கடவுளும் கந்தசாமியும் – சிறுகதை ஆசிரியர் யார்?
    புதுமைப்பித்தன்
    18. கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்ட அண்ணாவின் நாவல் எது?
    தெரிந்து கொள்ள வேண்டும்
    19. திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் யார்?
    கோபாலக் கிருஷ்ணபாரதியார்
    20. கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலை வெளியிட்டவர் யார்?
    தெரிந்துகொள்ள வேண்டும்
    21. வள்ளலாரின் கீர்த்தனைகள் அருட்பா அல்ல, மருட்பா என்றவர் யார்?
    தெரிந்து கொள்ள வேண்டும்
    22. “இருபத்துநாலாயிரம் நபிகளில் ஒரு பெண்நபிகூட இல்லையே? ஏன் வாப்பா” – யார்?
    தெரிந்து கொள்ள வேண்டும்
    23. காவிய காலம் என்ற ஆய்வு நூலை எழுதியவர் யார்?
    வையாபுரி பிள்ளை?? (நினைவு.....)
    24. “புதுக்கவிதை –சொற்கள் கொண்டாடும் சுதந்திரதின விழா“ –என்றவர் யார்?
    மு.மேத்தா
    25. “இரவில் வாங்கினோம், விடியவே இல்லை“ –என்ற கவிஞர் யார்?
    தெரிந்து கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா... பெரும்பாலும் சரியாக பதிலளித்துவிட்டு மற்றவற்றிற்கும் “தெரிந்து கொள்ள வேண்டும்“ என்றீர்கள் பாருங்கள்.. அங்கே நிற்கிறீர்கள் அய்யா!... (முழுவதற்கும் சரியாக விடையளிப்பவர் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் தமிழார்வம் மிக்க இளைஞராகத்தான் இருக்க முடியும். அதனால் தாழ்வில்லை அய்யா.) நண்பர்களின தளத்தில் சென்று விடையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டுகிறேன். அதிலும் 15-பட்டுக்கோட்டையார், 18-குமரிக்கோட்டம், 24-வைரமுத்து என்று திருத்திக்கொள்க. தங்கள் தமிழறிவுக்கு என் தலைதாழ்ந்த வணக்கம் அ்யயா.

      நீக்கு
    2. மிக்க நன்றி ஐயா! விஜு ஐயா அவர்களின் தளம் சென்று பார்த்தோம் தெரிந்து கொண்டோம்! தாங்கள் திருத்திய விடைகளையிஉம் தெரிந்து கொண்டோம்! மிக்க நன்றி ஐயா! மிக மிக நல்ல ஒரு நமது அறிவை விரிவாக்கும் பதிவு!

      நீக்கு
  10. அய்யா வணக்கம்!
    தேர்வில் தேர்ச்சி பெற்றேனா எனத் தெரியவில்லை. Just Pass ஆயிருக்கலாம்.
    புலவர் கோபி அய்யாவிடம் இணையம் வீட்டில் இல்லாததால் நான் முந்திக் கொண்டு விட்டேன். அவராய் இருந்தால் தெரியவில்லை என்றிடவும் நீங்கள் தவறு திருத்திடவும் வாய்ப்பிருந்திருக்காது எனக் கருதுகிறேன்.
    வாய்ப்பிற்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  11. நல்ல வேளை மார்க்கை சொல்லவேண்டாம்னு சொல்லீடீங்க:)))
    உங்களுக்கே தெரியும் நான் ரொம்ப சோம்பேறினு. நீங்க குறிப்பிட்ட ரெண்டு தளங்களில் ஒரு தகவல் களஞ்சியம் (விஜூ அண்ணா) இப்போ இன்னொரு tab ல open ல தான் இருக்கு. இதோ போய் பார்த்திட்டு வந்துடுறேன் அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நான் ரொம்ப சோம்பேறி' - அட உலகின் மிகப்பெரிய அறிஞர்களில் பலர் ரொம்பச் சோம்பேறியாம் தெரியாதா உனக்கு. சரீ... போய்ப் பார்த்துட்டு வருவே“ல்ல..? பாக்கலாம்.

      நீக்கு
  12. அய்யா வணக்கம்!
    தங்களின் பம்பர் பரிசுக்கான கேள்வியை இப்போதுதான் காண்கிறேன். மிக எளிதான கேள்விகளாய் இருக்கும் போது அதிக நிதானத்தோடு அதை அணுக வேண்டும் என்பது போட்டித் தேர்வுகளுக்கான பாலபாடம்!
    எல்லோரும் புரட்சிக்கவி பாரதிதாசன் என்று கருதும் இவ்வரிகளின் சொந்தக்காரர் ஈழத்தின் மறக்கப்பட்ட ( மறைக்கப்பட்ட) மாகவிகளுள் ஒருவராகிய சச்சிதானந்தம் அவர்கள்.
    விடைசரியானால் எனக்கு் 'Above Average' ஆவது கிடைக்கும் தானே?
    உங்கள் பின்னூட்டத்திற்கான என் கருத்தைக் காண அழைக்கிறேன். http://oomaikkanavugal.blogspot.in/2014/07/blog-post_7.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் விஜூ! 'Above Average' ஆவதா? பல நேரம் நம் மாணவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக இருப்பார்கள். அந்த டெக்னிக் இப்ப வேணாம்னு நினைக்கிறேன். தமிழறிஞர் னு சொன்னா நீங்க அவசரமா மறுக்கிறீங்க.. வேறென்ன செய்ய?இனிய மகிழ்ச்சியை உங்களுடன் கைகுலுக்கிப் பகிர்ந்து கொள்கிறேன்.. 99விழுக்காட்டுத் தமிழர்கள் (தமிழாசிரியர் பலர் உள்ளிட்டு) பாரதிதாசன் என்றே நம்புகிறார்கள்.. நான் கலந்து கொண்ட மாநிலத் தமிழாசியர் பயிற்சி முகாமில் இந்த ஐயத்தை எழுப்பித் தீர்வு சொன்னேன் அங்கேயே பலரும் வியந்தார்கள் வேறென்ன சொல்ல? நன்றி விஜூ. தொடரட்டும் நம் நட்பின் வலைப்பயணம்..

      நீக்கு
    2. அய்யா,
      இன்னும் வாசிப்பின் அடிமையெனவே காலம் கழிக்க விரும்புகிறேன். அதன் தரும் போதை வேறெதிலும் வாய்க்காதது.
      பல கருத்துக்கள் இது போல பிறழ உணரப்படுவது உண்டு.
      தமிழின் ( தமிழரின் )தொன்மை காட்டுவதாய் எல்லோரும் கருதி எடுத்தாளும்,
      “ (பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
      ..வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்)
      ..கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
      ..முன்தோன்றி மூத்த குடி“
      என்பதும் அது போலவொன்று!
      தங்களின் அன்பினில் நெகிழுகிறேன்!
      நன்றி!

      நீக்கு
  13. 1. 133 அடிகள்
    3. கம்பராமாயணம்
    22. H G ரசூல்


    ஐயா இவை மூன்றே நானறிந்த பதில்கள் ! மற்ற அனைத்து பதில்களையும் சகோதரர் ஜோசப் விஜுவின் தளத்தில் தெரிந்துகொண்டேன். இந்த கேள்விகளின் மூலம் தமிழ் அறிவில் நான் இருக்கும் படியையும், இங்கிருந்து செல்ல வேண்டிய தூரத்தையும் உணர்ந்துகொண்டேன்.

    நன்றி
    சாமானியன்


    பதிலளிநீக்கு
  14. பல கேள்விகளுக்கு மறுமொழி தெரியவில்லை என நினைக்கும்போது ஒரு மாதிரியாகத்தான் உள்ளது. நாளடைவில் படித்து மென்மேலும் இவை போன்றவனவற்றைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பேன். இவ்வாறான சிந்தனையைத் தூண்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்வி கரையில, கற்பவர் நாள்சில...
      அறிதோறும் அறியாமை காண்பவர்தானே அறிவை வளர்க்கிறார்? எனவே தாழ்விலை அய்யா... தொடர்ந்து கற்போம். அறிவொளி இயக்கத்தில் கிராமத்து உழைப்பாளி மக்களுககுக் கற்றுத்தரப் போனோம்... எழுத்தறிவை அவர்களுக்குக் கற்றுத் தந்துவிட்டு ஏராளமான உலகஅறிவை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு வணங்கி வந்தோம்!

      நீக்கு
  15. பதில்கள்
    1. பார்ரா... கடினமான கேள்விகளுக்கு விடை வந்திருக்கு... மற்றவை என்னாச்சு? (குமரிச் சிலை உயரம் தெரியலை னா... நம்பமுடியாது) தவணை தவணையா எழுதுவியாம்மா? அடுத்த தவணை எப்ப?

      நீக்கு
    2. என்னாச்சு உங்க வலைப்படைப்புகள்?
      தொடர்ந்து எழுதும்மா. (விரைவில் சிறிய வட்டத்தில் ஒரு வலைப்பயிற்சி போடலாம் - டிடி வர்ரேன்னிருக்கார் ஒரே நாள், வலையில் 10பதிவாவது போட்ட 10பேர் மட்டும் என்ன?)

      நீக்கு
    3. வணக்கம் சார். நீங்கள் கேட்டிருக்கும் வினாக்களில் ஓரிரு வினாக்களுக்கும் மட்டும்தான் தெரியவில்லை சார். யாரும் விடையளிக்காத வினாவிற்கு விடை சொல்லலாம் என்றுதான் கடினமான வினாக்களுக்கு விடையளித்தேன். அத்துடன் எனது அலைபேசி வாயிலாக அனுப்பியதால் அனைத்திற்கும் விடையளிக்க இயலவில்லை சார். எனது மடிக்கணினியில் பிரச்சனை இருந்ததால் இதுவரை வலைப்பக்கத்தை சரியாக பின்பற்ற இயலவில்லை. இனி இனிதாய் தொடர்வேன் சார்.நன்றி. எனது பக்கத்தில் வீதியில் நான் வாசித்த கவிதையை பகிர்ந்துள்ளேன் தங்களின் பின்னூட்டத்தை எதிர்நோக்கி ஆவலுடன்.. நன்றி

      நீக்கு
    4. வலைப்பயிற்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்

      நீக்கு
  16. ஐந்து மதிப்பெண் பெற்று 20% 'தேர்ச்சி' பெற்றதால் விஜூ ஐயாவின் தளம் சென்று படித்துவிட்டேன். எது எது தெரியவில்லையோ அதைச் சொல்லி விடைகளையும் தெரிந்துகொள்ள வைத்ததற்கு நன்றி ஐயா.

    அடுத்த தேர்வு எப்போ ஐயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருபத்தைந்துக்கு ஐந்து என்றால் நூற்றுக்கு 20 என்பது கணக்கு. ஆனால் இதில் சிலவற்றுக்கு 2மதிப்பெண், சிலவற்றுக்கு அரை மதிப்பெண்தான். (கேள்விக்குத் தகுந்த மதிப்பெண்!) எனவே, எந்தக்கேள்விக்கான பதில் என்பதில்தான் வெற்றி. இது சும்மா ஒரு சுய சோதனைக்குத்தான் மா. வேறு யாரும் கேள்வி கேட்டிருந்தால் நான் கூட 40 அல்லது 50தான் பெறுவேன். தகவல் என்பது அறிவின் ஒரு பகுதி. தகவலே அறிவெனில் அகராதியும், கணினியும்தான் அறிவாளிகளாக முடியும். என்னைப்பொறுத்த அளவில் தகவல்களைக் கொண்டு சிந்தனையைத் தூண்டுவதுதான் அறிவு. அதற்கு உங்களிடம் பஞ்சமில்லை னு தெரியும். கல்வி கரையில... வாழ்த்துகள்

      நீக்கு
  17. 1. 133 அடி
    3. கம்ப ராமாயணம்
    4.பரிபாடல்
    5.புறனானூறு
    6.திருமூலர்
    7.ஔவையார்
    8.முக்கூடற்பள்ளு
    12.கவிக்கோ

    இத்தனைக்கு மட்டும் தான் விடை தெரிகிறது ஐயா! ரொம்ப மக்கா இருக்கனோ ???? ஸ்கூல்ல நல்லா படிச்சனே ???

    ஆனால் அருமையான பதிவு ஐயா !!

    பதிலளிநீக்கு
  18. 9 கேள்விகளுக்கு விடை தெரிந்தது.....ஆஹா....இருக்கிற ஏகப்பட்ட வேலையில் எப்படித்தான் இப்பட்யோ?????உங்களிடம் தமிழை மட்டும் அல்ல சுறுசுறுப்பு...கலகலப்பு,...பேச்சுத்தமிழ் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும்...ஹீம்..

    பதிலளிநீக்கு
  19. சபாஷ் சரியான போட்டி.

    பதிலளிநீக்கு
  20. சில கேள்விகளுக்கான விடைகள் தெரிந்து கொள்ள வேண்டும்...
    நல்ல முயற்சி ஐயா...
    தொடருங்கள் இது போன்ற கேள்விகளை....

    பதிலளிநீக்கு