தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

வெள்ளி, 16 மே, 2014

2014 – தேர்தல்- தமிழன் என்றோர் இனமும், தனியே அவர்க்கோர் குணமும்“


     இந்தியாவைத் தாய்நாடாக ஏற்றுக்கொண்டாலும், தமிழ் இனம் தனிஒரு குணம் கொண்டதாகத்தான் பல நூறாண்டுகளாக இருந்து வருகிறது என்பது 2014-தேர்தலிலும் மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

     1967, சுதந்திரத்திற்குப்பின் இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தியாவை ஆண்டுவந்த காங்கிரசை வீழ்த்தி திமுக என்னும் மாநிலக் கட்சியை ஆட்சியில் அமர வைத்தது தமிழ்நாடு. (அப்போது இந்தியா முழுவதும் 9மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது காங்கிரஸ்) அதன்பின் அகில இந்தியக் கட்சிகள் அனைத்தும் மாநிலக்கட்சிகளான திமுக, அதிமுக இவற்றில் ஒன்றின் ஆதரவோடுதான் சட்டமன்றம் ஏறிவருகின்றன.
1977, “அவசர நிலை“ஆட்சி நடத்திய இந்திரா காந்தியை இந்தியா முழுவதும் புறக்கணித்த போது, எம்ஜிஆர் எனும் மாநிலக்கட்சித் தலைவரை காங்கிரஸ் கூட்டணியோடு ஆட்சியில் அமர்த்தி யது தமிழ்நாடு.
1980, நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு 39தொகுதிகளை அள்ளித் தந்ததை மனதில் கொண்டு, மாநில அதிமுக ஆட்சியைக் கலைத்து நடத்திய தேர்தலில் –நாடாளுமன்றத் தேர்தலுக்கு முற்றிலும் மாறாக - அதிமுக பக்கம் சாய்ந்தது தமிழ்நாடு.
1984, அதிமுக எம்ஜிஆர் காங்கிரஸ் கூட்டணி
     1996, மாநிலத் தேர்தலில் “ஊழல் ஆட்சி“ நடத்தியதாக அதிமுக கட்சியையும், அதன் தலைவர் ஜெயலலிதாவையும் ஒருசேரத் தோற்கடித்தது.
(ஜிகேமூப்பனார் தலைமையில் தமிழ்மாநிலக் காங்கிரஸ் உருவாகி, காங்கிரசுக்கு எதிராக வெற்றிக் கூட்டணி கண்டது)
     2001, மீண்டும் அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தது 
2006, மீண்டும் திமுக (ஆனால் முழுப் பெரும்பான்மை இல்லை)
     2011, மீண்டும் அதிமுக மத்திய ஆட்சிக்கு எதிராக
     2014, காங்கிரசைத் தோற்கடித்து, பாஜக மத்தியில் ஆட்சியில் அமரும் நேரத்திலும், காங்கிரஸ்-பாஜக உள்ளிட்ட அகில இந்தியக் கட்சிகளைப் புறக்கணித்து, மீண்டும் அதிமுக எனும் மாநிலக் கட்சிக்கே ஆதரவளித்துள்ளது தமிழ்நாடு. (மத்தியில் பிறகு எதுவும் நடக்கலாம்)

இப்படி -
கடந்த -1967முதல்- 45ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்தியக் கட்சிகளைப் புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாட்டு மாநிலக் கட்சிகளையே நம்புவது ஏன் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்?
(1)    மாநில இனவெறியா?
(2)    அகிலஇந்தியக் கட்சிகளின் மீது நம்பிக்கையின்மையா?
(3)    மாநிலக் கட்சிகளின் மண் மணமா?
(4)    வேற வழி என்பதா?
(5)    “என்னமோ, தெரியல“ என்பதா?
(6)    வேறு காரணம் உண்டா?
----------------------------------
பி.கு. இப்போதையா(16-05-2914மதியம்2-00மணி) செய்திப்படி, காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளுக்கு, பலஇடங்களில் “நோட்டா“ அளவுக்கே வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

    

     

16 கருத்துகள்:

 1. இதற்க்கு பல காரணங்களை சொல்லலாம் எனத் தோன்றுகிறது. இருப்பினும்

  "மாநிலக் கட்சிகளின் மண் மணமே. . . " சரியாகப் பொருந்துவதாய்க் கருதுகின்றேன்.

  பதிலளிநீக்கு
 2. அரசியல் அறிவின்மையே காரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Sheer foolishness, why don't they see other alternatives with in T.N

   நீக்கு
 3. அகிலஇந்தியக் கட்சிகளின் மீது நம்பிக்கையின்மை தான் நண்பரே.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் ஐயா
  மாநில இனவெறி சுத்தமாக கிடையாது ஐயா. அகில இந்திய கட்சிகள் தமிழ்நாட்டிலும் தமிழ்மக்களின் மனங்களிலும் இன்னும் நிலையான இடம் பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். திராவிட கட்சிகள் மீது சவாரி செய்து கொண்டே தமிழகத்தில் அவர்கள் கால் பதிக்க முடியவில்லை. தமிழர்களும் இரு பெரும் திராவிட கட்சிகளுக்கே மாறி மாறி வாக்களித்து பழகி விட்டனர். வேறு ஒரு கட்சி வந்து இடம் பிடிப்பது இன்னும் வருடங்களுக்கு இயலாத காரியமாகவே எனக்கு தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

  பதிலளிநீக்கு

 5. வணக்கம்!

  இன்னும் தமிழா் எழில்தரும் கல்வியில்
  முன்வர வில்லை முகிழ்த்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லாவெள்ளி, மே 16, 2014

  by the means of 37 seats, i am afraid this term we cannot except benefit beyond for tn . only magic can happen.

  Seshan

  பதிலளிநீக்கு
 7. தேசிய கட்சிகள் தமிழ் மக்கள் மனதில் இன்னும் சரியாக இடம்பிடிக்காததே காரணம்!

  பதிலளிநீக்கு
 8. எதுவும் நடக்கலாம் - இனி நல்லதாகவே... நம்புவோம்...

  பதிலளிநீக்கு
 9. தேசிய கட்சியின் மீது நம்பபிக்கையின்மை என நான் நினைக்கிறேன் ..

  பதிலளிநீக்கு
 10. ஐயா வணக்கம்! அறியாமையால்தான் பகுத்துஅறியத் தெரியாமையால்தான்.

  பதிலளிநீக்கு
 11. பெரியார் இன்னும் வாழ்கிறார்

  பதிலளிநீக்கு
 12. தேசியக் கட்சிகள் மாநிலத் தலைமையை மதிப்பதில்லை !

  பதிலளிநீக்கு
 13. எப்போது தமிழகத்தில் இப்படி தான்..... இரண்டில் ஒன்று என்பதே முடிவுகளாக இருக்கின்றன.

  தேசிய கட்சிகளுக்கு அத்தனை பெரிய ஆதரவு இங்கே இல்லை - அவர்களுக்குள் அடித்துக் கொள்வதற்கே இக்கட்சியனருக்கு நேரமில்லையே!

  பதிலளிநீக்கு
 14. மத்திய, மாநில அரசுகளின் அதிகாரம் பற்றிய அறியாமை!!!

  பதிலளிநீக்கு
 15. தேசியக் கட்சிகள் மீது என்றுமே நம்பிக்கை இல்லை. காரணம் வடக்கில் உள்ள ஒருவரை தலைவராக கொண்டு வெறும் எடுபிடி போல மாநிலத்தில் ஆட்சி செய்வதால் தமிழர்கள் பத்தோடு பதினொன்றாக இருப்பர். ஆனால் மாநிலக் கட்சிகளின் ஆட்சியில் அவர்களின் முழு கவனமும் தமிழகத்தின் மீது இருப்பதோடு, தவறு செய்யும் போது மக்கள் வலுவாக இடித்துரைக்கவும் இயலும். உதா. திமுக. அதே சமயம் மாநிலக் கட்சிகள் மீது மக்கள் அதிகளவு அழுத்தங்களை பிரயோகித்து தேவையானவற்றை நிறைவேற்றியும் கொள்ளலாம். அதனால் தான் என்னவோ இன்றளவும் தமிழகம் கல்வி, பொருளாதாரம், சமூக வளர்ச்சியில் முன்னோடியாக திகழ்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக திராவிட அரசியலின் மீது மக்கள் இந்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்பதும் காரணம்.

  பதிலளிநீக்கு