கண்ணகி பத்தினித் தெய்வம் ஆனதெப்படி?


     

கற்புக்கரசி என்று சொன்னால் பலநூறு ஆண்டுகளாகத் தமிழர் நெஞ்சில் பதிந்து கிடக்கும் பெயர்  கண்ணகி என்பதுதான். 

அதிலும் ஒருபடி மேலே போய், எத்தனையோ பத்தினிகள் இருந்தாலும் கண்ணகியை மட்டும் “பத்தினித் தெய்வம்“ என்றே சொல்லும் வழக்கும் தமிழில் உண்டு. இது ஏன்?



நான் எழுதிவரும் வலைப்பக்கக் கவிதைத் தொடரின் பகுதி விளக்கமாக இதை எழுத நேர்ந்திருக்கிறது என்பதையும் முதலில் தெரிவித்து விடுகிறேன்.
    “ஆம்பளன்னா அப்படி இப்படித்தான் இருப்பான், கட்டுன பொம்பளதான் அனுசரிச்சி வாழணும்“ – என்னும் கருத்தும் பல்லாண்டுகளாக சமூகத்தின் கருத்தாகவே ஆக்கப்பட்டு விட்டது. அதற்கேற்ற கதை கண்ணகி கதைதான்.
     கட்டியவளை  விட்டுட்டு இன்னொருத்தியோடு வாழ்ந்தாலும், அதைப் பெரிய தப்பு என்று நினைக்காமல் “விட்டுக் கொடுத்துவாழ்ந்தவள் கண்ணகி. ஆனால், தன் கணவனைத் திருடன் என்று சொல்லிவிட்டதற்காக ஊரையே கொளுத்தியவளும் அவள்தான். (பொதுச் சொத்துக்கு நாசம் விளைவித்தவள்?) அதாவது, அவன் “நடத்தை கெட்டவன்“ என்பதில் ஒன்றும் சிறுமையில்லை, ஆனால் திருடன் என்று சொன்னால் அதைக் கேட்டுச் சகிக்காதவள் கண்ணகி.
     இதுதானே வேண்டும் ஆண்களுக்கு? “பிடி பத்தினித்தெய்வப் பட்டம்“ என்று கண்ணகியை நிரந்தரத் தெய்வம் ஆக்கிவிட்டார்கள்!  மனைவியர் அப்படி இருந்தால் கணவன்மார்களுக்கு சௌரியமில்ல?
(சீதா - தொலைக்காட்சிப் படிமம்) 
     இந்த விளக்கத்திற்கு உறுதுணையாக, கலைஞர் தொலைக்காட்சியில் இன்று -26-04-2014- இரவு 9.45மணிக்கு நான் பார்த்த ஒரு காட்சி கூடச்  சான்றாகி நின்றதுதான் என்னை உடனே வேகப்படுத்தி எழுத வைத்தது.
     அதில் வரும் ஒரு தாய் தன் மகளிடம் சொல்கிறாள் “ஆம்பளை யின்னா அப்படி இப்படித்தான்மா இருப்பாங்க, பொம்பளை நாமதான் அதையெல்லாம் அனுசரிச்சி வாழணும்”  
           ( தொடர் “தப்புத்தாளங்கள்“-கதை-ராஜேஷ்குமார்)

கண்ணகிபோல் வாழ்வதுதான்
     கற்புடைய வாழ்வெனில்பெண்
என்னசுகம் காண்பாள்?
     எதற்கிந்த இலக்கியங்கள்?என்னும் வரிகள் எனது “காதல் கடிதம்“ தொடரில் அடுத்து வரும் பகுதியில் வரும்....
அருந்ததீ
     பாஞ்சாலிக்குத்தான் 5கணவன்மார்கள் அவள் கணவர்களில் ஒருவனான அர்ச்சுனனுக்கு ஊரெல்லாம் மனைவி! கிருஷ்ணன்? சொல்லவே வேண்டாம்!
     கண்ணகி,சீதா,அருந்ததி என ஏழேழு பத்தினிகள் இருந்தாலும் “இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்“ என்று சொன்ன ஒரே நாயகன் இராமன் தான். ஆனால் அவனும், சீதாவை யாரோ என்னமோ சொன்னானு காட்டுக்கு விரட்டியவன் தானே?
     “அக்கினி தேவனும்
     வணங்கிய உன்னை,
     ஒரு வண்ணானின் நாக்கு
     அழுக்காக்கியதே“ – அப்துல் ரகுமான்.

கண்ணகிகள் வாழ்க!
கோவலன்கள் வாழ்க வாழ்க!
மனிதன் மகத்தானவன்!
தனக்குத் தேவையானபடியே
கதைகளையும் எழுதிக் கொள்கிறான்,
கடவுள்களையும் படைத்துக் கொள்கிறான்,
தலைவர்களையும் வைத்துக் கொள்கிறான்!
பிறகு? வேறென்ன சொல்ல?
         தொலைக்காட்சி நெடுந்தொடர் பார்ப்போம். 
------------------------------------------------------- 
   (படங்கள் மன்னிக்க - கூகுளில் இவைதான் கிடைத்தன)

29 கருத்துகள்:


  1. வணக்கம்!

    கண்ணகி காதையைக் காட்டும் கருத்துக்கள்
    விண்ணிடி என்றே விளம்பு

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறட்பாவில் நீங்கள் குழைத்துக் கொடுக்கும்
      அருட்பாவின் உள்ளடக்கம் அன்பு

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    மிக அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.... பகிர்வுக்கு நன்றி ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன். நம் போட்டிகளுக்கான பரிசுளைத் தரும்போது எனது நூற்பரிசுகளையும் தந்துவிட விரும்புகிறேன். தங்களுக்கு நேரமிருக்கும்போது பேசுங்கள்.

      நீக்கு
  3. --///மனிதன் மகத்தானவன்!
    தனக்குத் தேவையானபடியே
    கதைகளையும் எழுதிக் கொள்கிறான்,
    கடவுள்களையும் படைத்துக் கொள்கிறான்,///
    சரியாகச் சொன்னீர்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுதத வரியைத்தான் அடுத்த மாதம் பார்க்கப்போகிறோமே என்று விட்டுவிட்டீர்களா அய்யா? நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. இன்றா, நேற்றா, எத்தனை ஆயிரம் ஆண்டுக்கால சமூகக் கருததின் திரட்டுகள்... அவ்வளவு லேசில் உடைத்துவிட முடியுமா? எனினும் எறும்பு ஊரக் கல்லும் தேயுமாமே?

      நீக்கு
  5. அண்ணா கண்ணகி பற்றிய அறிமுகத்தை ஒன்றிரண்டு பத்திகளில் நிறுத்திக்கொண்ட இளங்கோ மாதவியின் சிறப்பு உணர்த்த சில பக்கங்கள் எடுத்துக்கொண்டதாக பிரபஞ்சன் துறவாடைக்குள் தொலைந்த காதல் மனம் நூலில் குறிப்பிடுகிறாரே! அந்த நூலை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் தவறாமல் படியுங்கள். பெண்ணடிமை போற்றும் பண்டைய புழவர்களின் காரண காரியத்தை அலசி, பிழிந்திருப்பார். மறுமுறை ராமன் சென்று அழைத்த போது சீதை இனியும் உன்னுடன் வாழமாட்டேன் என் தன தாயிடமே (பூமிக்குள்ளே) சென்றுவிட்டதாய் முடியும் வால்மீகி ராமாயணம் ( என் பெயர் காரணம் தேடியபோது கிடைத்த தகவல்) டேக் இட் ஈஸி என்ற (வாலினு நினைக்கிறேன் ) பாடலை பார்த்தீர்களா? கண்ணகி சிலை தான் இங்குண்டு சீதைக்கு தனியாய் சிலையேது என கேட்டு கண்ணிகி போல் டக் இட் ஈஸியா வாழ சொல்லுறார். ரொம்ப பேசிட்டேனோ?! இது போலும் தலைப்புகள் பேசவைத்து விடுகின்றன :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “அந்த நூலை படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்“ - இல்லையே.. தொடராக வந்தபோது ஒன்றிரண்டு படித்ததுதான்.. நேற்று சாப்பிடும்போது ஒருசில நிமிடம் பார்த்த தொ.கா.தொடர் என்னை எழுத வைத்ததும் உன்னைப் பேச வைத்ததும். சரிதான்.

      நீக்கு
  6. நீங்கள் சொல்வது உண்மைதான் ஆண்களுக்கு சவுகரியம் கண்ணகிப் பெண்கள்தான்,விளக்கங்கள் அருமை
    வைரமுத்து கருப்பு நிலா என்ற கவிதையில் கண்ணகியை கேட்கும் கேள்விகள் எனக்கு பிடித்தவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்துக் கடவுள்களின் ஆயுதங்கள் அந்த வழிபாடு தொடங்கிய காலத்தைக் குறிக்கும், கதைகள் அந்தந்த சமூகப் பிரதிபலிப்புகள். அப்படிப் பார்த்தால், உழவு கண்டுபிடிக்கப் பட்டபின் வந்த சீதையை விட உணவு சேகரித்த காலததிலேயே வந்துவிடட நம் வள்ளி மூத்தவள்! 657இல் தமிழநாட்டுக்கு வந்த கணபதியைவிட ஏற்கெனவே இங்கிருந்த நம் முருகன் மூத்தவன்! ஆனால், என்ன ஒரு இதுன்னா... அண்ணனைவிட தம்பி மூத்தவன் ! என்னை.. ஒருமாதிரி...!!?

      நீக்கு
  7. ஆணாதிக்க ,பெண்ணடிமைத் தனத்தின் மறைமுகக் கூற்றுதான் 'பொம்பளையை 'பத்தினித் தெய்வம் ஆக்குவது !
    --///மனிதன் மகத்தானவன்!
    தனக்குத் தேவையானபடியே
    கதைகளையும் எழுதிக் கொள்கிறான்,
    கடவுள்களையும் படைத்துக் கொள்கிறான்,///
    மனிதனிலும் ஆண் மிகவும் மகத்துவம் ஆனவன் என்றாலும் பிழையில்லை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகத்துவம் என்பதற்கு சூழ்ச்சி சுயநலம் மற்றும் எதையும் செய்துகொள்ளும் ஆற்றல் என்றெலலாம் கொள்ளலாம்.. (குறள்-1073 அணிக்கு எடுத்துக்காட்டே மனிதன் தானே?)

      நீக்கு
  8. சிந்திக்கவைக்கிறது நியாயமாகவே படுகிறது. நன்றி வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல சிந்தனை நலவழிப்படுத்தும். அந்த சிந்தனை இந்தச் சமூக முன்னேற்றத்திற்கு உதவுமானால் வரவேற்க வேண்டியதுதான்.

      நீக்கு
  9. ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீீதி ? கொடுமை சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு கண்ணில் வெண்ணெய் மறுகண்ணில் சுண்ணாம்பு என்று நம் கிராமத்துச் சொலவடை சொல்வதும் இதைத்தானே?

      நீக்கு
  10. சுயநலமிக்க ஆண்களின் கண்ணோட்டத்தில் ..........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எலலா ஆண்களும் அப்படி அலல. இன்னும் அம்பேத்கரும் பெரியாரும் பாரதியாரும் தந்த சிந்தனைகளின் வெளிச்சம்தான்

      நீக்கு
  11. இது இனி ரொம்ப நாள் ஓடாது சார்.தெளிவாயிட்டு வர்றோம்ல

    பதிலளிநீக்கு
  12. பயனுள்ள திறனாய்வு
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. ஐயா கண்ணகிகள் காலமெல்லாம் மலையேறிகொண்டிருக்கு வீட்டுக்காரர்பேருகேட்டா? ஊரசுத்தி கதைசொன்ன காலமெல்லாம் மலைஏறிக்கொண்டிருக்கிறது கணவன்மார்கள் டா... டேய் ஆகிவிட்டார்கள். கண்ணகிபோல் வீட்டிற்குள் இருப்பவர்கள் எண்ணிக்கையில்தானேஇப்பொழுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டீ போடும் இடத்தில் டா போட்டால் தப்பில்லை.
      இப்போது -கல்லூரியில் படிக்கும் ஆண்,பெண் நண்பர்கள் முதலாய் காதலன்-காதலி தொடர கணவன்-மனைவியானதும் அப்படியே பேச்சு வழக்குத் தொடர்வது நல்லதுதான். ரொம்பக்காலம் அப்படிப் பேசிக்கொள்கிறார்களா என்பதை இனிவரும் தலைமுறைதான் சொலலவேண்டும. சொல்லிக்கொண்டால் நல்லதுதான் என்பது என் கருத்து.

      நீக்கு
  14. மிகவும் அற்புதமான அலசல். பெண்ணைத் தெய்வமெனப் போற்றுதலையும், பேயெனத் தூற்றுதலையும் தவிர்த்து தனியொரு மனுஷியாய்ப் பார்க்கும் தன்மை ஒன்று போதும் எனும்படி அழகான விளக்கங்கள். பாராட்டுகள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் பூஜைக்குரிய புனிதமானவளும் அல்ல, சித்தர்கள் போல் இகழ்தலுக்குரிய கீழானவளும் அலல. இயல்பான மனுஷி. ஆணைப்போலவே-ரத்தமும்-சதையும்-உணர்வும்-பசியும்-கோபமும்-ஆசையும்-அழகும்-அறிவும் கொண்ட மனுஷி என்பதை ஆணும் பெண்ணும் உணர்ந்து கொள்ளும் இடம்தான் சொர்க்கம் என்பதை எப்போது உணரப்போகிறோம்? (கற்பனைச் சொர்க்கம்தான் என்றாலும் வானும் வசப்படும் அலலவா?)

      நீக்கு
  15. அருமை சார்... பல முறை நான் விவாதித்த தலைப்பு இது! கண்ணகியை கற்ப்புக்கரசி என்பது! மதுரையை எரித்து அதில் வாழ்ந்த பல கற்ப்புக்கரசிகளை, தன் முறை தவறிய கணவனுக்காக தீக்கிரயாக்கியவள்.... அப்படி இருக்க அவள் மட்டும் தான் நாடு போற்றும் கற்ப்புக்கரசி என்பதில் எனக்கு உடன்பாடே இல்லை.. இதவிட மாதவியை கற்புக்கரசி என்பேன்...

    அவள் குலம், கண்ணகி போன்று ராஜ வம்சம் இல்லை.. அவள் பிறந்ததே தேவதாசி குலம்..இருப்பினும் கோவலன் ஒருவனை மட்டுமே கணவனாக கொண்டு வாழ்ந்ததாக இதிகாசங்கள் சொல்கின்றன.. அப்படி பார்த்தாள், மாதவி தான் கண்ணகியை விட சிறந்தவள்!!!!

    பதிலளிநீக்கு