என் தோல் வெள்ளையாக இருந்திருந்தால்…


பிரபல  கால்பந்துவீரர் ஒருவரின் ஆதங்கம்!
 மார்ட்டின் லூதர் கிங், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, பரக் ஒபாமா ஆகியோர்க்கு சமர்ப்பணம் செய்து செய்தியை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.


–செய்தி வெளியீட்டுக்கு நன்றி
– தினமணி-04-03-2014 அனைத்துப் பதிப்பு விளையாட்டுச் செய்திகள்

என் தோல் வெள்ளையாக இருந்திருந்தால் 10 ஆண்டுகளுக்கும்  மேலாக இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக இருந்திருப்பேன் என அந்நாட்டின் முன்னாள் கால்பந்து வீரர் சோல் கேம்ப்பெல் தெரிவித்தார்.
கேம்ப்பெல், 2012-ம் ஆண்டு சர்வதேச கால்பந்து ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற 73 ஆட்டங்களில் அணியில் இடம்பிடித்திருந்தார்.
1998-இல் பெல்ஜியம் மற்றும் செக் குடியரசுக்கு எதிரான ஆட்டத்திலும் 2005-இல் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்தார். இவை மூன்றும் நட்பு ரீதியிலான ஆட்டங்கள். தேசிய அணியின் கேப்டனாக செயல்பட நினைத்த தன் கனவு நிறைவேறாதது குறித்து தன் வாழ்க்கை வரலாறுப் புத்தகத்தில் கேம்ப்பெல் தற்போது குறிப்பிட்டுள்ளார்.
அதன் விவரம்:
கிளப் அணிகளில் கேப்டனாக இருந்ததால் தேசிய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவேன் என நினைத்தேன். ஆனால் கடைசி வரை நியமிக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென எனக்கு நானே பலமுறை கேள்வி எழுப்பிக் கொண்டேன். தோல் நிறம்தான் பிரச்னை என்று பின்னர் தெரிந்து கொண்டேன். என் தோல் மட்டும் வெள்ளையாக இருந்திருந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்திருப்பேன். பெரும்பாலான இங்கிலாந்து ரசிகர்கள் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் கேப்டனாக செயல்படுவதை விரும்ப மாட்டர் என கால்பந்து சங்கம் நினைத்து விட்டது.
லிவர்பூல் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஓவென் சிறந்த முன்கள ஆட்டக்காரர். ஆனால், அவர் கேப்டனாக செயல்படத் தகுதியற்றவர். அவருக்கு கேப்டன் பதவி வழங்கியதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை' என கேம்ப்பெல் குறிப்பிட்டுள்ளார்.
கேம்ப்பெல் குறிப்பிட்டுள்ள காலத்தில் கால்பந்து சங்கத்தின் இயக்குநராக இருந்த டேவிட் டேவிஸ், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
"கேப்டன் யார் என்பதை மேலாளர்கள்தான் தேர்வு செய்வர். இதில் கால்பந்து சங்கம் தலையிட்டதாக நினைவில் இல்லை. இந்த குற்றச்சாட்டு தவறானது. என் காலத்தில் கால்பந்தில் இருந்து இன வேறுபாட்டை வேரறுக்க வேண்டும் என்பதில் சிலர் உறுதியாக இருந்தனர். இது பெருமை அளிக்கும் விஷயம். வாய்ப்பு கிடைத்தால் கேம்ப்பெல்லுடன் அவரை கேப்டனாக நியமிக்காதது குறித்து பேசுவேன்' என டேவிட் டேவிஸ் தெரிவித்தார்
http://www.dinamani.com/sports/2014/03/04/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/article2088681.ece

---------------------------------------------------------------------------------- 

11 கருத்துகள்:

  1. என்னமோ போங்க...

    கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு...!

    பதிலளிநீக்கு
  2. அண்ணா
    இந்தப் பதிவுக்கு நம்மவர்கள் இடும் பின்னூட்டம் முக்கியம்
    அதில் ஒரு கேள்வியும் தொக்கிநிற்கிறது
    என்ன பிரச்சினை என்றால் அங்கே வெள்ளை கருப்பூ
    இங்கே ஆதிக்கசாதி, வஞ்சிக்கப்பட்ட சாதி ...
    இந்தப் பதிவிக்கு கொடுமை என்று போடும் பெரும்பாலோனோர் நம் கண்முன் நடக்கும் சாதிக் கொடுமைகளை ரொம்ப இயல்பாகவே செய்வார்கள் என்பது என் கணிப்பு ...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    அவர்களின் நினைவு எல்லாம் விசும்பின் மறுல் போல் .அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்..

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  4. நிறவெறி நம்ம ஊர்லதான்னு பார்த்தா எல்லா ஊர்லயும் இருக்கா!?

    பதிலளிநீக்கு
  5. அன்புடையீர்..
    தங்களுடைய தளம் இன்று வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    http://blogintamil.blogspot.com/2014/03/blog-post_4.html

    பதிலளிநீக்கு
  6. திறமை இருந்தும் நிறத்தின் காரணமாக ஒடுக்கப்படுவோர்
    உலகமெங்கும் இருக்கிறார்கள் போலவே!!
    நீங்க, உங்க தம்பி , கீதா டீச்சர் , C.E.Oசார், பாண்டியன் சகோ என நம் பட்டாளமே இன்று வலைச்சரம் அறிமுகம் ! ரொம்ப ரொம்ப சந்தோசம் !

    பதிலளிநீக்கு
  7. நிறவெறி நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டுதான் இருக்கிறது !

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஐயா
    சகோதரர் ம்து அவர்கள் சொல்வது போல் இந்த செய்திக்கு பின்னூட்டம் தான் பேச வேண்டும். தோல் கருமையாக இருப்பவர்களை அவர்கள் விளையாடும் கால்பந்து ஓட ஒட விரட்டி உதைத்த செய்தி எல்லா நாடுகளிலும் அரங்கேறியுள்ளதை கேட்கும் போது இனவெறியின் உச்சபட்ச ஆதிக்கம் புரிகிறது. இன்றளவும் கூட ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் கொல்லப்படுவதும் இதில் தான் அடக்கம். டேவிட் டேவிஸ் அவர்களே அவரது காலத்தில் இனவெறி தலைவிரித்து ஆடியதை என் காலத்தில் கால்பந்தில் இருந்து இன வேறுபாட்டை வேரறுக்க வேண்டும் என்பதில் சிலர் உறுதியாக இருந்தனர் எனும் வார்த்தைகளின் மூலம் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரே நிறம் ஆனால் குலம் வேறு என்று ஒதுங்கி வைக்கும் நம்பவர்களை என்னவென்று சொல்வது! மாற்றம் என்பதை நம்மிள் இருந்தே தொடங்குவோம். பகிர்வுக்கு நன்றீங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  9. நிறவெறி நீக்கமற எங்கும் நிறைந்திருப்பது வருத்தமளிக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
  10. இந்த நிறவெறி என்பது நம்மைவிட்டு எப்போது நீங்கப்போகின்றதோ. அறிவு நிலையில் நாம் மேம்பாடு அடையவேண்டும் என்று நம்மை உணர்த்துவதில் ஒன்று இந்த நிறவெறி.

    பதிலளிநீக்கு