ஓட்டுப் போடப் போறீங்களா? ஒரு நிமிடம்!

வசனம் உள்ளே இருக்கு... நன்றி அமிதாப்ஜி.
(தினமணி  நாளிதழ் –தலையங்கப் பக்கத்தில் வெளிவந்த எனது கட்டுரை
தலைவரகள் எது செய்தாலும் உடனடியாகத் தட்டிக் கேட்க முடியாத மக்கள் அது தவறா சரியா என்பதை உணர்த்தும் ஒரே வழி தேர்தல்தான்! இதை, நன்குணர்ந்தவன் நமது பாமர இந்தியன்.
ஐரோப்பியக் கலாசாரத்தில் நமக்கு ஆகாது கூறுகள் பல உண்டு. ஆனால் தவறு செய்யும் தலைவர்களைக் கிழி கிழி என்று செல்லாக்காசாக மாற்றி விடும் ஒரு விஷயத்தில் நாம் அவர்களிடமும் கற்றுக்கொள்ள சிலவுண்டு! குறைந்தபட்சம் பத்திரிகை நீதி மன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டும் என்னும் பயமாவது இருப்பது பாராட்டுக்கு உரியதுதானே?
ஆனால் நம் நாட்டில் ஆட்சிக்கு அல்லது நாடாளுமன்றத்துக்கு வந்து விட்டோம். தேர்தல் நெருங்கும் வரை அடிக்கும் கூத்துகளை மக்கள் மறந்து விடுவார்கள். தேர்தல் நேரத்தில் ஏதாவது மாறுதல் நடக்கும் மற்ற விஷயங்களைப் பின் தள்ளி நாம் ஜெயித்து விடலாம் எனும் நினைப்பே நமதுநாடாளுமன்ற ஆட்சிமுறையில் முதல் எதிரி;
http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence 
யாருக்கு வாக்களிப்பது என்று தேர்தலுக்கு 2- 3 நாள் வரை கூட முடிவெடுக்காதவர்கள் 10-15 சதவீதம்என்று கருத்துக் கணிப்புகள் வருவதைக் கவனித்திருக்கலாம். இதுவும் அதுவும் சேர்ந்தால் இன்னதுதான்என்னும் முடிவை திடமாக எடுத்துக்கொண்டு பிறகு எந்த வேடிக்கையைப் பார்த்தும் மனம் மாறாமல் இருப்பதல்லவோ விவேகம்.
தக்கார் தகவிலர்என்பது அவராவர் கடந்தகால “எச்சசெயல்பாடுகளால் அறியத் தக்கதுதானே? பிறகு அதில் மாற்றத்துக்கு அவசியமென்ன வந்தது?  
தேர்தல் அறிக்கை என்பது அந்தந்தக் கட்சிகளில் கடந்தகாலச் செயல்பாட்டின் தொடர்ச்சியாக இருக்கிறதா? என்பதை மட்டும் கவனமாகப் பார்த்தால் போதுமே! வெறும் நடிப்புச் சுதெசிகளை நன்குணர்ந்து ஒதுக்கிவிட உதவுமே!
நமது தேர்தல் முறையில் நிறைய மாற்றம் தேவை என்பது பற்றி நிறையவே விவாதிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் நடைமுறையில் இன்றுள்ள நமது தேர்தலையே நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்றும் கேட்கவேண்டியிருக்கிறதே! நம்மை சராசரி இந்தியரை- நாடிபிடித்து வெற்றி கொள்ளும் தலைவர்கள்தானே நாட்டை ஆளமுடிகிறது?  அப்புறம் அவர்கள் தான் நாட்டை கெடுத்துவிட்டார்கள் என்று புலம்புவதில் அர்த்தமென்ன?
அவர் நல்லவர் தான் சுற்றியிருப்பவர்கள் சரியில்லை’  என்பதும் ஒரு வறட்டு வாதம்தான். அவர் தலைமையில் நிகழ்ந்த நிகழக்கூடடிய விளைவு என்ன? என்பதுதானே முக்கியம்.
முப்பதாண்டுகள் திரையுலகின் மன்னராக ஆட்சி புரிந்துவிட்டு பத்தாண்டுகள் முதல்வராக இருந்துவிட்டுப் போன ஒரு நல்லவரால் அவரது சரித்திரத் தொடர்ச்சியால் நிகழ்ந்த சாதனைகள் என்ன?
அங்கே
நேரு நல்லவர் தான். பல நல்ல முற்போக்குத் திட்டங்களை முன்வைத்தவர்தான். ஆனால் அவர்தானே கேரளத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியை கலைத்து காங்கிரசின் கலைப்புக் கலாச்சாரத்துக்குக் கால்கோள் விழாக் கண்டவர்!
தலைவர்கள் எது  செய்தாலும் உடனடியாகத் தட்டிக்கேட்க முடியாத மக்கள் அது தவறா சரியா என்பதை உணர்த்தும் வழிதான் நமது தேர்தல்! அதனால்தான் உலக நாடுகள் எல்லாம் வியந்து சில நேரம் பயந்து நமது இந்தியாவைக் கவனித்துக்கொண்டே இருக்கின்றன!
மக்கள் நினைத்தால் மாந்திரி வாக்கு சீட்டில் மாற்றிக் குத்திகால் எந்திரி என்பதுதானே நமது ஜனநாயக வெற்றி முழக்கம்!
மன்னராட்சிக் காலத்து சமூக மாற்றங்கள் போர்களால் நிகழ்ந்தன எனில் மக்களாட்சிக் காலத்து மாற்றங்கள் தேர்தலால் நிகழ்வது ஆனால், இது, மக்கள் பலருக்குப் புரியவில்லை என்பதே நமது சோக வரலாற்றின் சுழல் மையம். வாக்களிப்பதில் அலட்சியம், வாக்களிக்காமல் இருப்பதில் பெருமை!
40 சதவீதம் பேர் வாக்களிக்காத போதும்கூட அவர்கள் வாழ்க்கையையும் சேர்த்துத் தீர்மானிப்பது வாக்களிக்கும் 60 சதவீத வாக்காளர்தான் என்பதை வாக்களிக்காதவர்க்கு உணர்த்த வேண்டும்!
அப்போதுதான்  நயத்தக்க நல்லோர்கள் எல்லோரும் விரும்பத்தக்க நாடாளுமன்றம் உருவாகும். நாமும் உலக நாடுகள் மத்தியில் நிமிர்ந்நத நெஞ்சோடு நிற்க முடியும். அதற்கு உதவியாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த சில சாட்சிகளை மேய்ச்சல் தரயில் அசைபோடும் மேதைகள் போல் அல்லாமல் மெதுவாகவே மென்மையாகவே எண்ணிப்பார்ப்பது பொருத்தமாய்த் தோன்றுகிறது.
நிலையான ஆட்சி பற்றி இப்போது நிறைய அடிப்படுகிறது. அது பற்றிய ஒரே ஓரு குறிப்பு போதுமென்று நினைகிறேன்.
1991 முதல் 1996 வரை மத்தியிலும் மாநிலத்திலும் நிலையான ஆட்சியே நடந்தது. ஆனால் அந்த மத்திய ஆட்சியில் ஓரே ஓரு பங்குப் பத்திர ஊழலில் மாத்திரம் 5 ஆயிரம் கோடி கொள்ளை அடிக்கப்பட்டது என்கிறார்கள்.
மாநில ஆட்சியில் தொட்டில் முதல் சுடுகாடு வரை முயன்று பார்ததும் 1500 கோடியைத் தாண்டவில்லையோ என்று அங்கலாய்க்கிறார்கள்.
அதே நேரம் நிலையற்ற ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சில நிலையான முடிவுகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
1977 முதல் 2 ஆண்டுகளே பிரதமராக இருந்தவர் மொரார்ஜி தேசாய்
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ? அழுது கொண்டியிருப்போமோ என்ற நம் பாரதியின் கேள்வியை பாரதக் கேள்வியாக  மாற்றி பன்னாட்டு பகாசுரத்  கம்பெனியாம் கொக்கோ கோலாவைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார். ஆனால் 18 ஆண்டுகள் கழித்து 1995-ல் அது பெப்சியோடு போட்டியிட்டு திரும்ப வந்தது. ராவுகாலத்தில் தானே? புரியலன்னா திரும்பவும் ராவுகாலம்தான் போங்க!
1989 முதல் மூன்று ஆண்டுகளே பிரதமராக இருந்த வி.பி.சிங் தான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த மண்டல் குழுசிபாரிசுகளை அமுல்படுத்தினார். அதற்காகத் தனது பிரதமர் பதவியைத் தெரிந்தே காவு கொடுத்த தேசத்தலைவர் அவர்!
தமிழகத்தில் சிறப்பாக யோசிக்க வேண்டிய குறிப்பு-
அயலானையும் நேசி  என்றுதான் ஆங்கிலேயர்கள் கூறுவார்கள் ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளாய் மனித நேய பண்பில் பழுத்த தமிழ்தான் அயலான் மட்டுமல்ல, அடுத்த வீடு வீதி - ஊர்-மாவட்டம் - மாநிலம் - நாடு தாண்டி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் பெருமைக்குரியவன். (ஐ.நா. சபை வரையும் போன தமிழ் வாசகமும் இதுதானே?).
பெரும்பாலான பண்டைத்தமிழ் இலக்கியங்கள் முதல் வார்த்தையில் அல்லது வரியில் அதுவுமில்லாவிட்டால் முதல் பாடலிலாவது உலகுஎன்றே தொடங்கும். அவ்வளவு பரந்த மனம் படைத்தவன் தமிழன் என்பது இன்று வரை தொடரும் பெருமை.
அண்மைக் காலத்தில் கூட பெரியார் கற்றுத்தந்த பாடங்களுக்கு எந்த இழப்பும் தன்னால் வராமல் பார்த்துக் கொண்ட அண்ணா ஆட்சி பொறுப்பில் - பொதுவாழ்வில் இறுதிவரை எம்மதமும் சம்மதமாகவே பல்வேறு சமயத் தலைவர்களும் சமமாக மதிக்கும்படி வாழ்ந்து மறைந்தார்.
அந்த அண்ணா மேடையில் எடுத்துபேசிய கவிதை  ஓன்றுன்று.
உன்வீடு உனது பக்கத்து வீட்டின்
இடையில் வைத்த சுவரை இடித்து
வீதிகள் இடையில் திரையை விலக்கி
நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
ஏறு விடாமல் ஏறு மென்மேல்!
அறிவை விரிவுசெய்! ஆகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்து கொள்! உன்னைச் சங்கம மாக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேதம் இல்லை
படிக்கப் படிக்க நெஞ்சு துடிக்கும் இக்கவிதையை எழுதியவர் பாரதிராசன்.
மனித நேயத்துக்கு சமய ஒற்றுமைக்கு பொதுவாழ்வில் நேர்மை தூய்மை தேவையெனும் சரித்திரத்துக்கு இப்போது சவால் எழுந்துள்ளது.
“உன் நண்பன் யாரென்று சொல்!
நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன்”
நாற்காலி மட்டுமே பார்வையாகி பொதுநலம் வெறும் போர்வையாகி பாரதமாத மறுபடி சூதாட்டத்தில்’ பணயம்  வைக்கப்படுகிறாள்

நயத்தக்க நல்லோர்கள் எல்லோரும் விரும்பத்தக்க - நாடாளுமன்றமே தேவை  என்பதை முடிவு செய்ய வேண்டிய நேரமிது.
நாம் என்ன செய்யப் போகிறோம்?
நெஞ்சினைப் பிளந்த போதும் நீதிகேட்க அஞ்சிடோம்!
நேர்மையற்ற பேர்களின் கால்களை வணங்கிடோம!
என்ற பட்டுக் கோட்டையார் பாடல் வரிகளை மறவோம்.
(சூதாட்டத்தில்’  மறுபடியும்  பாரதமாதா! எனும் தலைப்பில் 
கடந்த 05-01-1998அன்று தலையங்கப் பக்கக் கட்டுரையாக வெளியிட்ட தினமணி நாளிதழுக்கு நன்றி. நன்றி-google,wiki)

18 கருத்துகள்:

  1. நெஞ்சம் அதிர்கின்றது!..
    நயத்தக்க நல்லோர்கள் நிறைந்த - நாடாளுமன்றம்..
    அதுவே நமது - தேவை!..

    பதிலளிநீக்கு
  2. இன்றைக்கும் பொருந்துகிறது ஐயா கட்டுரை... ம்...

    பதிலளிநீக்கு
  3. இன்றைய சூழலுக்கும் பொருந்தும் கட்டுரை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. எல்லோருமே அரசியல் வாதிகள் இதில் மனிதனைத் தேர்ந்தெடுத்து ஓட்டுப் போடுவதெப்படி அய்யா?... அப்படி அந்த ஒருவருக்கு எல்லாரையும் தன் கீழ் கொண்டுவரும் வாய்ப்பிருக்கிறதா?... 60% மக்கள் மட்டுமே வாக்களித்து அதில் முன்னிலையில் இருப்பவர் எனும் முறையில் அவர் எப்படி பெரும்பான்மையினருக்கு பிடித்தமானவர் ஆவார்... NOTO முறை ஓட்டை பதிவு செய்பவருக்கு என்ன அங்கீகாரம்...

    பதிலளிநீக்கு
  5. NOTA தவறாக எழுதி விட்டேன்...

    பதிலளிநீக்கு
  6. கட்டுரை வெளியாகி ஆண்டுகள் பதிமூன்று கடந்து விட்டன.
    ஆனால் இன்றைக்கும் அழகாய் பொருந்துகிறது.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா
    மிகவும் அவசியமான கட்டுரையைத் தக்க தருணத்தில் எங்கள் பார்வைக்காக வெளியிட்டமைக்கு நன்றி. ஜனநாயகத்தின் கடைநிலை எஜமானர்கள் என்று வர்ணிக்கும் வாக்காளர்கள் கடைசி நாள் வரை ஓட்டு யாருக்கு என்று தீர்மானிக்காமல் துட்டு ஓட்டாக மாறும் அவலம் தொடர்ந்து அரங்கேறுவது கேலிகூத்தாக உள்ளது. படிக்கும் அனைவரையும் சிந்திக்க வைக்கும் அற்புதமான பதிவிற்கு நன்றிகள் ஐயா. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  8. ஐயா, தகுந்த நேரத்தில்சிந்தித்துசெயல்படுவீர்களாக,என்றுஒருகட்டுரையும்பாரதிதாசனின்அனல்பறக்கும்கவிதைவரிகளும்தந்துசூதாட்டத்தைசுட்டிக்காட்டிபகிர்ந்தமைக்குநன்றி.

    பதிலளிநீக்கு
  9. என்றோ எழுதியது என்றாலும் இன்றும் பொருந்துவது அருமைதான்! இம்முறையாவது, மாற்றமா ஏமாற்றமா!? காலம்தான் பதில் சொல்லும்!

    பதிலளிநீக்கு
  10. எக்காலத்தும் பொருந்தும் பதிவு! பொருத்தமான பதிவு! அரசியலே சூதாட்டம்தான்!

    “உன் நண்பன் யாரென்று சொல்!
    நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன்”

    அரசியலில் நிரந்தரமான நண்பனும் கிடையாது! நிரந்தரமான எதிரியும் கிடையாது! அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது! நல்லவருக்குக் காலம் இல்லை!

    பதிலளிநீக்கு
  11. //தக்கார் தகவிலர்’ என்பது அவராவர் கடந்தகால “எச்ச” செயல்பாடுகளால் அறியத் தக்கதுதானே? பிறகு அதில் மாற்றத்துக்கு அவசியமென்ன வந்தது? //மிகச்சரி ஐயா..ஆய்ந்து அறிந்து முடிவு செய்தபிறகு வேடங்களுக்கு மயங்கலாமோ?
    நாட்டில் என்ன நடக்கிறது, என்ன நடக்கவேண்டும், உலகில் என்ன நடக்கிறது என்று தெரிந்தால்தானே சிந்தித்து முடிவெடுப்பதற்கு..நாம் தான் உண்டு,குடித்து, யந்திரமாய்ப் பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கிறோமே. பதின்மூன்று வருடங்களுக்கு முன் எழுதியது இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது..வருத்தமாக இருக்கிறது ஐயா..
    நகைச்சுவையாக ஏதோ படத்தில் அமைந்த "ஓசியாக் குடுத்தா பினாயிலையும் குடிப்போம்" என்ற நிலை முதலில் ஒழியவேண்டும். எப்பொழுதும் எனக்கு நினைவில் வரும் பாரதியின் வரி, "நெஞ்சு பொறுக்குதில்லையே..இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்...." இந்த தேர்தளிலாவது நேர்மறை மாற்றம் உண்டாகட்டும். வாக்களிப்பதில் உள்ள உரிமையையும் கடமையையும் அனைவரும் உணர வேண்டும்..
    பகிர்விற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  12. தங்களால் எழுதப் பட்ட பல கட்டுரைகள் இன்றைக்கும் பொருந்துவது சிறப்பு. நான் அறியாத பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  13. எரியுற கொள்ளில எது நல்ல கொள்ளின்னு பார்த்துதான் ஓட்டுப் போடுறொம். ஆனா, அந்தக்கொள்ளி பதவி என்னும் எண்ணெய் பட்டவுடன் நம்மை எரிக்க ஆரம்பிக்குது.

    பதிலளிநீக்கு
  14. நேற்று இன்று நாளை ...என்றும் பொருந்தும் பொருள்ள பதிவு. பகிற்விற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  15. அண்ணா , மன்மோகன்சிங் திருதிருவென விழிக்க, தொடங்குகின்றது கட்டுரை அம்பானியை அணைத்து நிற்கும் மோடியோடு முடிகிறது. பாராபட்சமே இல்லாமல் எல்லோர் முகத்திரையையும் கிழிகிறீர்கள் வாக்காளனையும் சேர்த்து! ஒவ்வொரு முறை இந்த கவிதையை படிக்கும் போதும் சிலிர்த்துபோகும்! மானிட சமுத்திரம் நானென்று கூவு!!
    இதுபோலவே ஆனால் மென்மையிலும் மென்மையாக frost கூட mending walls கவிதையில் சொல்வர். தவிர்க்கமுடியாமல் இந்த இரண்டு கவிதைகளும் சேர்த்தே நினைவுக்கு வருகிறது! சிந்திப்போம், செயல்படுவோம்!!

    பதிலளிநீக்கு
  16. தங்களின் சிறந்த பகிர்வை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு