"கீற்று" இணைய இதழைக் காப்பாற்றுவோம்

தமிழ் இணைய இதழ்களில் புகழ்பெற்றது கீற்று இணையம். லாபநோக்கின்றி நண்பர்கள் சிலர்தம் உடல்உழைப்பால் நடத்தப்படும் கீற்று இதழில், அச்சில் வரும் ஏராளமான சிற்றிதழ்களின் இணைப்புகளும் தரப்படுகின்றன.  சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி ஏராளமான எழுத்தாளர்கள் உருவாகவும் அடித்தளம் அமைத்துத் தருவது கீற்று இணைய இதழாகும்.

அந்த இதழை முடக்கும் “நல்லநோக்கம்“ கொண்ட யாரோ தொடர்ந்து இணையதத்தை முடமாக்கும் வலைநோய்க்கிருமி(வைரஸ்)களைப் பரப்பி வருகின்றனர். அதன் ஆசிரியர் குழுவினர் அதிர்ச்சியுடனும் வருத்தத்துடனும் இதனைத் தெரிவித்து, உதவிகோரி உள்ளனர். நண்பர்கள் பின்வரும் இணைப்பைப் பார்த்து, தொழில்நுட்ப ஆலோசனையுடன் பணஉதவியும் செய்திட வேண்டுகிறேன்.
நான் வலைப்பக்கம் தொடங்குவதற்குமுன் தவாறமல் படிக்கும் இதழாகவும் அவ்வப்போது எழுதும் இதழாகவும் கீற்று, திண்ணை, பதிவுகள் ஆகிய இணையங்கள் இருந்ததை நினைவுகூர்ந்து, இந்த வேண்டுகோளை நம் வலை வாசகர்முன் வைக்கிறேன் நன்றி
கீற்று இணைய இதழ் இணைப்பு - http://www.keetru.com/
கீற்று இதழில் என் படைப்புகள் (நான் வலைப்பக்கம் தொடங்கும் முன்) -
----------------------------------------
கீற்று இணைய இதழில்-
தாமரை (ஜீவா தொடங்கிய சமூகஇலக்கியத் திங்களிதழ்)

உங்கள் நூலகம் 
(புதியநூல் வெளியீடுகளைப்பற்றிய மாதஇதழ்)

மாற்றுவெளி (தரமான சமூகஆய்விதழ்),

சிந்தனையாளன் மாதஇதழ், 
(ஆசிரியர் வே.ஆனைமுத்து)

தலித்முரசு 
(சமூகநீதி தலித்திய அரசியல், இலக்கியத் திங்களிதழ்),

புரட்சிப் பெரியார் முழக்கம் 
(திராவிடர் விடுதலைக் கழக வாரஇதழ்),

கருக்கல் 
(கலைஇலக்கிய பண்பாட்டு அரசியல் இருமாத இதழ்),

கருஞ்சட்டைத் தமிழர் (பெரியாரிய இதழ்)


முதலான பற்பல –தமிழின் மிகத்தரமான- சிற்றிதழ்கள் பலவற்றின்  இதழ்களைப் படிக்கலாம் என்பதோடு, பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் இவற்றின் பழைய இதழ்களையும் படிக்கலாம்.

18 கருத்துகள்:

  1. இவற்றை நீங்கள் கூறியபிறகுதான் கேள்வியேபடுகிறேன் ஐயா!
    இனிமேல் தவறாமல் படிக்க முயற்சிக்கிறேன் ஐயா!

    இது என்னுடைய முதல் சிறுகதை படித்துப்பார்த்து கருத்துக்கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஐயா!

    http://pudhukaiseelan.blogspot.in/2014/01/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  2. கீற்று நானும் படித்திருக்கிறேன் அண்ணா.
    தகவல் கவலை தருவதாக இருக்கிறது.
    தொழில்நுட்பம் தெரிந்தோர் உதவினால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல் தொழில்நுட்பத்தில் அனுபவம் உள்ளவர்களின் உதவியோடு, நாமும் உதவணும்பா.

      நீக்கு
  3. அதிர்ச்சியான தகவல் ஐயா...

    சில நாட்கள் எல்லா வெளிப்புற இணைப்புகளையும் எடுத்து விட்டு, கருத்துரை பெட்டியையும் நிறுத்தி வைக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைத்தான் அவர்களும் அறிவித்திருக்கிறார்கள். உங்கள் தொழில் நுட்ப ஆலோசனையை அவர்களுக்குத் தரமுடியுமா பாருங்கள் அய்யா. அவர்கள், இரண்டு வகையில நம்மைப் போன்றவர்கள், ஒன்று- பெரும்பணக்காரர்களில்லை, இரண்டு ஏதாவது செய்யமுடியுமா என்று நல்லவழியில் யோசிப்பவர்கள் எனவே நாம்தான் உதவ வேண்டும். நன்றி

      நீக்கு
  4. ஐயாவிற்கு வணக்கம்
    கீற்று இணையத்தின் தமிழ்ப்பணியை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது. அதற்கு ஒரு பிரச்சனை எனும் சூழ்நிலையில் அதனை காக்க தமிழ்க்கரங்கள் இணைய வேண்டியது மிக அவசியம். கண்டிப்பாக நம்மால் முடிந்த உதவியைத் தருவோம். கீற்று இணையத்தில் தங்கள் படைப்புகள் கண்டேன் மிகுந்த மகிழ்ச்சி ஐயா

    பதிலளிநீக்கு
  5. நம்பிக்கை கீற்றாகத் திகழும் அருமையான தளம்..
    வளர்ச்சி பெறட்டும்..!

    பதிலளிநீக்கு
  6. தங்களின் ஆதங்கம் எங்களின் ஆதங்கமே. இவ்வாறான ஒரு செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி. தொடர்ந்து படிப்பேன்.

    பதிலளிநீக்கு
  7. அதிர்ச்சியான தகவல். தகவல் கவலை தருவதாக இருக்கிறது.
    தொழில்நுட்பம் தெரிந்தோர் உதவினால் நல்லது.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா.

    தனாபாலன் (அண்ணா )சொல்லியது போலவும் யார் இடம் (www)இணையத்தளம் வேண்டப்பட்டதோ அவர்கள் இடம் தொடர்பு கொண்டால் இதற்கான தீவை பெற்றுக் கொள்ள வாய்ப்பு அதிகம் என்றுதான் சொல்ல முடியும்...

    முடிந்தளவு கட்டண அன்ரிவைரஸ் பாவியுங்கள்... Internet Security சில வலைக்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. கண்டிப்பாக உதவும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்! முயற்சிக்கின்றோம்! ஐயா!

    பதிலளிநீக்கு
  10. தளம் தற்பொழுது மூடப்பட்டுள்ளது. சரியானவுடம் கண்டிப்பாகப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரா !
    தம் புத்தியையும் சக்தியையும் ஏன் வீண் விரயம் செய்கிறார்களோ என்று நினைக்க வேதனையாக இருக்கிறது. ஆக்கத்திற்கு உதவாமல் அதை ஏன் அழிப்பதற்கு பயன் படுத்துகிறர்களோ ஆறறிவு கொண்ட மனிதர்கள். மிகவும் வேதனையாக உள்ளது.
    நன்றி !

    புதிய கவிதை இட்டிருக்கிறேன் முடிந்தால் பாருங்கள் சகோதரா. குறை நிறைகளையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். குறைகளும் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. தங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு