சாகித்திய அகாதெமியின் “புதிய தமிழ் இலக்கிய வரலாறு” -


சாகித்திய அகாதெமியால் மூன்று தொகுதிகளாக வெளியிடப்படும் புதிய தமிழ் இலக்கிய வரலாறு இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து இலக்கிய வரலாற்று நூல்களினின்றும் வேறுபட்டது. பண்டைக்காலம், இடைக்காலம், இக்காலம் என மூன்று காலங்களுக்கும் தனித்தனித் தொகுதிகள் கொண்டது.
இந்நூலில் அந்தக்கால மொழியின் வளர்ச்சி, சமூக அரசியல் பின்புலம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. வெவ்வேறு தலைப்புகளில் அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு.

மக்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் பயன் நல்கும் தகவல்களஞ்சியம் புதிய தமிழ் இலக்கிய வரலாறு.
தொகுப்பாசிரியர்களாகவும் முதன்மைப் பதிப்பாசிரியர் களாகவும் விளங்குபவர்கள் பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளர் நீல பத்மநாபன் ஆகிய இருவரும் ஆவர்.


பண்டைக்காலம் ரூ.450, 
இடைக்காலம் ரூ.500, 
இக்காலம் ரூ.850.

இந்த மூன்று தொகுதிகளும் புதிய வெளியீட்டுச் சலுகையாக, சிறப்புத் தள்ளுபடி விலையில் ரூ.1,200-க்கு 31-03-2014வரை கிடைக்கும். 

இத்துடன் உள்ள படிவத்தை நிரப்பி Sahithya Akademy பெயரில் D.D. அல்லது M.O. சென்னை சாகித்திய அகாதெமி முகவரிக்கு அனுப்புக. நூல்கள் அகாதெமி செலவில் உடனே அனுப்பி வைக்கப்படும்.
             --------- படிவம் வருமாறு ----------
---------------------------------------
I hereby order ------------  set of PUTHIYA TAMIL ILAKKIYA VARALARU please find enclosed herewith DD/MO No.----------------- for ----------------  dated -------------- in favour of M/s Sahithya Akademy, Chennai-600 018

Place ------------------                                              -----------------------------------
Date -------------------                                                          (signature)
                                                                (Name in Full)  -----------------------
---------------------------------------------------------------------

படிவம் அனுப்ப வேண்டிய முகவரி

SAKITHYA AKADEMY
GUNA COMPLEX, 2ND FLOOR,
443, ANNA SALAI
TEYNAMPET
CHENNAI – 600 018
Phone – 044 2435 4815
------------------------------------------------------ 

அகாதெமியின் இந்த  அறிவிப்பை இலவச விளம்பரமாக நான் வெளியிடுவதற்கு,  எனது ஒரு குற்ற உணர்வும் காரணம். 

கவிஞர் பாலா அகாதெமியின் தமிழ் மொழிக்குழு ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, இதில் என்னையும் பங்கேற்கச் சொல்லிக்கொண்டே இருந்தார். “பெண்ணியக் கவிதைகள்” மற்றும் “தலித்தியக் கவிதைகள்” ஆக இரண்டு கட்டுரைகளை என்னை எழுதச் சொன்னார். 
நான் அஞ்சிக் கொண்டே இருந்தேன். 
ஒருவாறு எழுதி முடிக்கும்போது அவர் காலமாகிவிட்டார்... நான் அனுப்பாமலே இருந்துவிட்டேன்...

இதோ இப்போது அந்த நூல் வருகிறது.
சிற்பி சாதித்துவிட்டார்

                  புத்தகம் எப்படியும் மிகச் சிறப்பாக இருக்கும்
                  என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
                  நான் வாங்கப் போறேன் அப்ப நீங்க...?
-------------------------------------------------
          தஞ்சைப் புத்தகக் கண்காட்சியில் பேசப்போன நான்
(பேசி முடிக்கவே 9மணி ஆகிவிட்டதால்)
அறிந்துகொள்ள முடியாமல் போன இந்த அறிவிப்பை,
கவிஞர் கீதா படிவமாகவே கொண்டுவந்து தந்தார்
அவருக்கு என் நன்றி
-------------------------------------------

23 கருத்துகள்:

  1. நன்றி சார்.ஒரு பதிவில் எல்லோருக்கும் சொல்லிட்டீகளே.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா
    தங்களின் இந்த இலவச அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. புத்தகத்தின் விலையைப் பார்த்ததும் சற்று மனம் சறுக்கியது போல இருந்தது. விலைச்சலுகை மீண்டும் நிமிர்ந்து நடை போட வைத்துள்ளது. அவசியம் வாங்கி படித்து மாணவர்களுக்கு தகவல்களைக் கொண்டு செல்வோம் ஐயா. சாகித்ய அகாதெமிக்கு நீங்கள் எழுதாமல் போனது சற்று வருத்தம் தான். வருங்காலங்கள் கண்டிப்பாக மீண்டும் அந்த வாய்ப்பை வழங்கும். பகிர்வுக்கு நன்றிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் அறிந்து கூவும் சேவலை
      கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
      கல்லைத் தூக்கி பாரம் வைத்தாலும்
      கணக்காய்க் கூவும் தவறாது - பட்டுக்கோட்டை.
      (மின்னஞ்சலில் படம் சேர்ததிருப்பது நல்லாருக்கு பாண்டியன், ம்ம்..? மணமேடைக்குத் தயார்.. ஜமாய்ங்க...வாழ்த்துகள்)

      நீக்கு
  3. தகவலுக்கு நன்றி ஐயா
    வாங்கிவிடுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா.
      சி.கோ.அய்யா இழப்பு பெரிதுதான். நான் வந்திருக்க வேண்டும் இயலாத சூழல். மன்னியுங்கள். நீங்கள் எழுதியது ஆறுதலானது.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பயன்படுத்த (வாங்க) வேண்டியது உங்க பொறுப்பு. நான் அனுப்பிட்டேனே!

      நீக்கு
  5. எல்லா தலைப்புகளும் மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்டுள்ளன,இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து எழுதியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.மற்றபடி இந்த விலைக்கு இந்த நூல் கிடைப்பது மிகவும் வரவேற்க தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் விஜயன். நிறையப் படிப்பீர்கள் என்பதும் நல்லவற்றை ரசிப்பீர்கள் என்பதும் உங்கள் வலைப்பதிவிலும் தெரிகிறது. ஏன் நண்பரே ஒரே பதிவோடு நிறுத்திவிட்டீர்களே ஏன்? தொடர்க...

      நீக்கு
  6. பதில்கள்
    1. எல்லாரும் இன்புற்றிருக் நினைப்பதோடு செயல்படவும் செய்வதல்லால் வேறொன்றறியேன் பராபரமே!

      நீக்கு
  7. பயன்தரும் தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள தகவலை அளித்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  9. பயனுள்ள அறிவிப்பு அண்ணா !
    மற்றுமொரு முறை வரும் வாய்ப்பில் நீங்கள் பொலிவு செய்தானே போகிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “கிடைக்கிறது, சிலநேரம் கிடைக்காம இருக்காது,
      கிடைக்காம இருக்கிறது பல நேரம் கிடைத்துவிடும்” -ரஜினி மன்னிக்க. ” நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்துவிடும்” - கண்ணதாசன் நல்லதே யோசிப்போம் என்னப்பா?

      நீக்கு
  10. அனைவருக்கும் தேவையான தகவலைத் தாங்கள் தந்துள்ள விதம் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நன்றி சகோதரர் சீனி. உங்கள் வலைப்பக்கம் நல்லா இருக்கு. தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. தோழர் முத்து நிலவன் அவர்களுக்கு ! உங்கள் பதிவினை வழக்கமாக பார்பதுண்டு ! சாகித்ய அக்தமி பற்றிய இன்றய பதிவு உட்பட ! என் முக நூலிலும், என் இடுகைகளிலும் எழுதி வருகிறேன் ! பா.ஜ.க பற்றியும் மோடி பாற்றியும் அதிகமாக பதிவிடுகிறேன் ! உங்கள் தொடர்புக்கு நன்றி தோழா !---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஐயா,
    நான் இப்பொழுது தான் தங்களை தொடர ஆரம்பித்துள்ளேன்.
    நேரம் கிடைக்கும்போது மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்.

    நல்லதொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு