சின்னச் சின்ன சிந்தனைகள்...(1) அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மக்களில்லையா?

அரசு ஊழியர்கள் எல்லாம் அரசின் அடிமைகள் என்னும் கருத்து, ஆங்கிலேயர் ஆட்சியில் -அவர்களுக்கு- சரிதான்.

சுதந்திர இந்தியாவில் மக்களுக்காகப் பணியாற்றும் (?) அரசியல் வாதிகளைவிட அரசுஊழியர்-ஆசிரியர்கள் தேசப்பற்று இல்லாதவர்களைப் போல நினைக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது?

அவர்களுக்கான நடத்தை விதிகள் அனைத்தும் ஆங்கில அரசு இயற்றியதை அப்படியே -அறுபது ஆண்டுக் கழித்தும்- வைத்திருப்பதில் யாருக்கு நன்மை?

அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்
மக்களில்லையா?

இதுபற்றிய
நண்பர்களின்
கருத்துகளை வரவேற்கிறேன்.

உதாரணத்திற்கு - தன் உடல்நிலை சரியில்லையென்று மருத்துவ விடுப்பு போடுவதென்றால், மருத்துவரிடம் “ஆமா இவருக்கு உடம்பு சரியில்லை” என்று சான்று வாங்கி வரவேண்டும். அதற்கு ரூ.ஐம்பது முதல் நூறுவரை அவருக்குத் தரவேண்டும். அவர் சொன்னால் மட்டும் நம்புவார்களாம் (ஐம்பது ரூபாயை யார் தருவார்கள்?)
 சரி விடுப்பு முடிந்துவிட்டது, அப்போது யார் சான்றளித்தாலும் கிடையாதாம். அப்படியெனில், ஊழியரை நம்பாத அரசு மருத்துவரை மட்டும் நம்புவது சரிதானா? தற்செயல் விடுப்பு போல்  விடவேண்டியதுதானே? ஏன் இப்படி? மக்களைப் போலவே அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இந்த முறை சரிதானா? இதை மாற்றலாம்தானே?
----------------------------------------------------------------

17 கருத்துகள்:

  1. இப்படியெல்லாம் சிந்திப்பதால் தான் ஆசிரியர்களே அந்நியன் போல பாக்குறாங்க .....நல்ல விஷயம் தான் நடந்தால் .......!.தோழர் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல விஷயம்தானே? நாம் முன்மொழிவது பரந்து விரிந்து ஒருநாள் உலகம் ஏற்கும்படி வளர்ந்துவிடும். எனக்கு நம்பிக்கையானதைத்தான் நான் எழுதுவேன். நடக்கும். நான் பணிஓய்வு பெற்றாலும், நீங்கள் ஓய்வுபெறுவதற்குள்...

      நீக்கு
  2. மிகச் சரியான கேள்வி எழுப்பி உள்ளீர்கள்
    ஒருவேளை அரசு கூட உங்கள் கேள்வியின்
    நியாயம் புரிந்து மருத்துவச் சான்றிதழ் தேவையில்லை
    எனச் சொன்னால் மருத்துவர்கள் அதற்காக
    எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்யாமல்
    இருக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. நம் 50ரூபாயை நம்பியா அவர்கள் இருக்கிறார்கள். (அது ஓய்வு பெற்ற மருத்துவர்களின் ஒதுக்கீட்டு வேலை.) கையைத் தொட்டால் எங்கள் ஊரில் 100ரூ. மருத்துவ உயர்கல்வி ஒரு கோடியாம்ல? அப்பறம் கையத்தொட்டா என்ன கண்ணால பாத்தாலே பணம் கேக்கத்தானே செய்வாங்க... விதச்சத அறுக்கணும்ல?

      நீக்கு
  3. ஐயா இன்று சட்டங்கள் செய்பவர்களும், பட்டங்கள் பெற்று, உயர் பதவி முதல், அனைத்து பதவிகளிலும் இருப்பவர்கள் அனைவருமே, ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டவர்கள்தான், ஆசிரியர்களால் உயர்ந்தவர்கள்தான், ஆனாலும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாகப் படிக்கும் மாணவர்களை ஆசிரியர்கள்தான் நினைவு வைத்திருப்பார்கள், (அப்படியானவர்கள் தம் ஆசிரியரை நினைவு வைத்திருப்பது விதிவிலக்கு) அப்படி-இப்படி என்றிருக்கும் மாணவரில், ஆசிரியரின் ஒருசில வார்த்தைகளால் உந்தப்பட்டு தேர்ச்சிபெற்ற மாணவர்தான் ஆசிரியரை மறக்காமல் இருப்பார்கள் என்பது என் அனுபவம்.

      நீக்கு
  4. மற்றவர்கள் செத்தால் தொழில் சாமர்த்தியம் ,தர்மம்
    பிசினெஸ் ட்ரிக் என உலகம் பாராட்டும்
    நமக்காக நாம் குரல் கொடுத்தால் சுயநலம் என்பார்கள்
    என்னத்த சொல்ல ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லித்தான் ஆகவேண்டும் -
      செய்தக்க அல்ல செயக்கெடும், செய்தக்க
      செய்யாமை யானும் கெடும் - குறள்
      “காலம் அறிந்து கூவும் சேவலைக்
      கவிழ்த்துப் போட்டாலும் நிறுத்தாது
      கல்லைத் தூக்கி பாரம்வைத்தாலும்
      கணக்காய்க் கூவும் தவறாது” - ம.க.ப.கோ.க.சு.

      நீக்கு
  5. சரியான கேள்வி ஐயா...
    ஆனால் யார் இதற்கு மணி கட்டப் போகிறார்கள்... என்ன செய்தாலும் ஒரு புறம் எதிர்ப்பு இருக்கதான் செய்யும்...

    பதிலளிநீக்கு
  6. ஒரு தினக்கூலிக்கு உடம்பு சரியில்லைனா அவர் வேலை செய்யாதபோது அவருக்கு யார் கூலிகொடுப்பது. எடுக்காத லீவ சரண்டர் செய்து பணம்வாக்குகிற அரசு ஊழியர்கள் எடுத்த லீவுக்கு சர்டிபிகெட் கொடுத்தா என்ன குறைந்துவிடுவீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஆங்... இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.
    அரசு ஊழியர் - ஆசிரியர்க்கும் சலுகைகளும் அதிகம். உரிமைகளும் அதிகம்தான். உரிமைக்குறைவும் அதனாலேயே வருகிறது. (1980இல் நான் தமிழாசிரியராகப் பணியேற்றபோது இருந்த சம்பளத்தைப் போல இப்போது வாங்கும் சம்பளம் சுமார் 120மடங்கு! ஆனால், விலைவாசி அதைவிட ஏறித்தான் இருக்கிறது ) இது யாரின் கருணையாலோ, அன்பினாலோ கிடைத்ததல்ல... அவர்களே 1985,86 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைச்சல்... இதுபோல ஒன்றிணைந்து மக்கள் போராடினால் அதன் பெயர்தான் சமூகமாற்றம்... அந்தப் போராட்டங்களின் போது மக்களின் வரிப்பணம் எல்லாம் இவர்களின் (அ.. ஆ.) சம்பளத்துக்கே சரியாகப் போகிறது என்று சொன்ன அரசுகளும் உண்டு, அப்போது, “மக்கள் கேட்டால் எங்களைக் காட்டி, நாங்கள் கேட்டால் மக்களைக் காட்டி எல்லாருக்கும் நாமக்கட்டி..” என்று முழங்கினர் அ.ஆ.! அதே அரசு பின்னால் அவர்கள் கேட்ட ஊதிய உயர்வை வழங்கியது... தொடர்கிறது. பீகாரில் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து மக்கள் அடிதடியில் இறங்கினரே நினைவிருக்கிறதா?... காரணம் என்ன ஜீ? தொடர்ந்து விவாதிப்போமா?

    பதிலளிநீக்கு
  8. மருத்துவ சான்றுக்கு பணம்

    பழகிப் போன ஏற்றுக் கொண்ட ஒரு விசயம் ,

    இப்படி ஒரு ஆரோகியமான விவாதப்பொருள்,
    சரி
    எத்துனை பேர் உண்மையில் மருத்துவ காரணங்களுக்காக மருத்துவ விடுப்பை பயன்படுத்துகிறோம்.

    பதிலளிநீக்கு
  9. பழகிப் போன ஏற்றுக் கொண்ட ஒரு விசயம் - இதுதான் சிக்கல்.
    “வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
    கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்” - பாரதிதாசன்.
    சரி, உண்மையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களுக்கும் அந்தச் சான்றிதழ் தனியே தேவையா? அல்லது உடல்வலி பெண்களுக்கு வெளியில் சொல்லவியலாத பிரச்சினைக்கு ஓய்வு தேவை என்றாலும் அந்தச் சான்றிதழ் தரணுமா? என்பதுபோல என் கேள்வியை யோசித்துப் பாருங்கள் மது. நன்றி

    பதிலளிநீக்கு
  10. ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட வழக்கம் இது. காரணம், 'இந்தியர்கள், சரியான கண்காணிப்பு இருந்தால் தான் சரியாக வேலை செய்வார்கள்' என்ற ஆங்கிலேயர்களின் கணிப்பு தான். ஒருவரைப் பற்றி இன்னொருவர் தரும் சான்றிதழுக்கு இதனால் தான் மதிப்பு ஏற்படுகிறது. பல அரசுத் துறைகள் இந்த வழக்கத்தை இப்போது தளர்த்தி வருகின்றன. (இது கணினியின் வளர்சசி யாலும் சாத்தியமாகி வருகிறது.) இன்னும் தளரவேண்டும். (2) 1974 இல் நான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு விண்ணப்பித்தபோது,பள்ளி/கல்லூரிச் சான்றிதழ்களுக்கு attestation தேவைப்படவில்லை. விண்ணப்பதாரரே attest செய்தால் போதும் என்று இருந்தது. ஆனால் தமிழ்நாட்டு சர்வீஸ் கமிஷனுக்கு விண்ணப்பிப்பதற்கோ, கெசட்டட் ஆபிசரின் கைஎழுத்துக்காக அலையோ அலையென்று அலைவோம். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழக அரசு இன்னும் UPSC இன் முன்மாதிரியைப் பின்பற்ற முன்வரவில்லை என்பது வேதனையே.

    பதிலளிநீக்கு

  11. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
    தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு