கல்வியறிவில் திரிபுரா மாநிலம் முதலிடத்தை பிடித்தது - இந்தவாரம்.

இந்திய அறிவொளி வளர்ச்சி பட்டியலில் திரிபுரா, கேரளாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனாலும் முழு கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலமாக அது மாறவில்லை. இன்றைய தினத்தில் திரிபுராவில் 94.65 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நூறு விழுக்காடு கல்வியறிவு என்பது எங்கள் இலக்கு. அதை விரைவில் நாங்கள் எட்டுவோம் என்று மிக நம்பிக்கையுடன் கூறுகிறார் திரிபுரா மாநிலத்தை வழிநடத்திச் செல்லும் இடது முன்னணியைச் சார்ந்த முதல்வர் மாணிக் சர்க்கார்.

Manik Sarkar

Politburo Member of Communist Party ofIndia (Marxist)
Chief Minister of Tripura
11 March 1998 to Still the date
உலக கல்வியறிவு தினத்தையொட்டி அகர்தலாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மாநில அறிவொளி இயக்கத்திற்கு அவர் நன்றி கூறியதுடன், மாநிலத்துக்கு பெருமை சேர்த்துத் தந்த இந்த பிரம்மாண்டமான இயக்கத்தில் தங்களது உடல் வருத்தங்களை பொருட்படுத்தாது பாடுபட்ட அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். மாநிலத்தின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் கிடைத்த மதிப்பீடுகளின் அடிப்படையில் அவர் மாநிலத்தின் அறிவொளி வளர்ச்சி 94.65 விழுக்காட்டை எட்டியது என்ற அறிவிப்பை கூட்டத்தில் வெளியிட்டார்.
இந்த அருமையான தருணத்தில் மாநிலத்தை முழுகல்வியறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால் சில பிரிவு மக்களை, குறிப்பாக மூத்த குடிமக்களை எங்களால் எட்ட முடியவில்லை என்று அறிவொளி இயக்க அதிகாரி வருத்தப்பட்டார். எஞ்சியுள்ள 5.35 விழுக்காடு மக்களுக்கும் கல்வியறிவு அளிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்றும் அவர் கூறினார். சுமார் 38 லட்சம் மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் முழுவெற்றி அடைவோம் என்றும் அவர் உறுதிபடக்கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் அதிகபட்ச கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பட்டியலில் திரிபுரா நான்காவது இடத்தில் இருந்தது. 2011 புள்ளிவிவரப்படி திரிபுராவில் 87.75 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றிருந்தனர். பாதுகாப்பு படையினர் ஆயுதமேந்திய கலவரக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்த பின் அறிவொளி இயக்கத்தினரால் தொலைதூர மலைப்பகுதி மக்களை அடைய முடிந்தது. அதன் பலனாக அப்பகுதிகளில் அறிவொளி இயக்க வேலைகள் சிறப்பாக நடந்தன. மிசோரமில் கல்வியறிவு வளர்ச்சி 88.80 விழுக்காடு என்றும் கேரளாவில் இது 93.91 விழுக்காடு என்றும் திரிபுரா அரசு அதிகாரிகள் கூறினர்.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திரிபுரா கல்வியறிவு வளர்ச்சியில் பன்னிரண்டாம் இடத்தில் இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது திரிபுரா நான்காவது இடத்துக்கு முன்னேறியது என்றும் அவர் கூட்டத்தில் கூறினார். 2011 கணக்கெடுப்பில் திரிபுரா 87.75 விழுக்காட்டை அடைந்த பின்பு, ஆகஸ்ட் 2012, அரசு எட்டு மாவட்ட ஆட்சியாளர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தியது. 38 லட்சம் மக்கள் வாழும் மாநிலத்தில் ஐம்பது வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களும் அடங்கிய 1.31 லட்சம் மக்கள் மட்டுமே கல்வியறிவு பெறாதவர்கள் என்று தெரியவந்தது என்று மாணிக்சர்க்கார் கூறினார். 
ஆகஸ்ட் 10 முதல் 25 தேதிவரை கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்ட இந்திய புள்ளிவிவர நிறுவனத்தின் (ஐஎஸ்ஐ) தலைமையில் புதிதாக கல்வியறிவு பெற்றவர்கள் பற்றிய இறுதி மதிப்பீடு நடத்தப்பட்டது. ஐஎஸ்ஐ இடைக்கால அறிக்கையின்படி மாநிலத்தின் கல்வியறிவு 94.65 விழுக்காட்டை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. ஐஎஸ்ஐ இறுதி அறிக்கை கிடைக்கும் போது மாநிலம் 96 விழுக்காட்டை எட்டியிருக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். கிராம பஞ்சாயத்து, கிராம சபைகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மன்றங்கள் ஆகியவை முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையிலான மாநில அறிவொளி இயக்கத்தின் மேற்பார்வையில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டதால் திரிபுரா இச்சாதனையை அடைய முடிந்தது. திரிபுராவில் ஆண்களை விட பெண்களின் கல்வியறிவு வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் திலிப் அச்சர்ஜீ கூறினார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பெண்களின் கல்வியறிவு 64.91 விழுக்காடாக இருந்தது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது 83.15 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது 18.24 விழுக்காடு உயர்வாகும். ஆண்கள் மத்தியில் இந்த உயர்வு 11.18 விழுக்காடுதான். ஆண்கள் மத்தியில் 2001ல் 81 விழுக்காடாக இருந்த கல்வியறிவு 92.18 விழுக்காடாக உயர்ந்தது என்றும் அவர் கூறினார்.இடது முன்னணி அரசின் திட்டங்களும் இதற்கு முன்னோடியாக இருந்தன. மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் படிக்கும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்குஆண்டுதோறும் ரூ.1718ம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1485ம் வழங்கப்படுகிறது. வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.856ம், ரூ.645ம் வழங்கப்படுகிறது. அதேபோல் கலைப்பிரிவு மாணவர்களுக்கு முறையே ரூ.855ம், ரூ.706ம் வழங்கப்படுகிறது. இதுபோன்ற முனைப்புகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.
நன்றி தீக்கதிர் நாளிதழ் 
---------------------------------------------------------------------------------------------   
தில்லி மாணவி பாலியல் வழக்கில் நால்வரும் குற்றவாளிகள்: உச்சநீதிமன்றம் உறுதி!  
·          
தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தெற்கு தில்லி விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. அவர்களின் தண்டனை விவரங்கள் புதன்கிழமை (செப்டம்பர் 11) அறிவிக்கப்படும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி யோகேஷ் கன்னா தெரிவித்தார்.(பின்னர் வெள்ளிக்கிழமை என அறிவிக்கப்பட்டது)
தீர்ப்பின் அம்சங்கள்: நாடு முழுவதும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் தொடர்பான இந்த வழக்கில், நீதிபதி அளித்த 230-க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு: இந்த வழக்கில் முகேஷ் சிங் (26), வினய் சர்மா (20), பவன் குப்தா (19), அக்ஷய் தாகுர் சிங் (28) ஆகியோர் மீது, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.
அவை வருமாறு:
பிரிவு 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 376 (2),(ஜி) (கூட்டுப்பாலியல்), 377 (இயற்கைக்கு விரோதமாக குற்றம் இழைத்தல்), 395 (கொள்ளை), 396 (கொள்ளையடிக்கும்போது கொலை செய்தல்), 120பி (உள்நோக்கத்துடன் குற்றம்புரிதல்), 364 (கொலை செய்யும் நோக்கில் கடத்திச் செல்லுதல்), தவறான நோக்குடன் கடத்தி ரகசியமாக குற்றம்புரிதல் (365), 394 (வழிப்பறியில் ஈடுபடும்போது காயம் ஏற்படுத்துதல்), 412 (வழிப்பறியில் ஈடுபடும்போது சட்டவிரோதமாக சொத்துகளைக் கொள்ளையடித்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
பாலியல் தாக்குதல் சம்பவத்தின்போது மாணவிக்கு கொடுமை இழைத்தது மட்டுமன்றி, சம்பவ நாளில் பேருந்தில் உடனிருந்த அவரது நண்பரையும் தாக்கிக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.
ஆகவே, கொள்ளையடிக்கும்போது கொலை செய்தல் பிரிவின்படி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீங்கலாக, மேற்கண்ட 12 இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்படிபோலீஸார் சுமத்திய குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் உறுதி செய்கிறது.
மரண வாக்குமூலம் அடிப்படையில் தீர்ப்பு: பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது சார் கோட்டாட்சியரிடம் அளித்த மரண வாக்குமூலம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொடுமை நேர்ந்தபோது நேரில் பார்த்த அவரது நண்பர் அளித்த சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் இத் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
உயிரிழந்தாலும் குற்றவாளி: இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ராம் சிங் (34), விசாரணை காலத்தில் கடந்த மார்ச் 11-ஆம் தேதி திஹார் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார்.
 அவர் மீது போலீஸ் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு அவரையும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. நால்வருக்குரிய தண்டனை விவரம் புதன்கிழமை அறிவிக்கப்படும்' என்று நீதிபதி யோகேஷ் கன்னா கூறினார்.
பலத்த பாதுகாப்பு: பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி, குற்றம்சாட்டப்பட்ட முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் சிங் தாகுர் ஆகியோர் நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு காலை 10 மணிக்கு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். தீர்ப்பை நண்பகல் 12.30 மணிக்கு நீதிபதி அளித்தார்.
கண்ணீர், அதிர்ச்சி...: நால்வரையும் "குற்றவாளிகள்' என்று நீதிபதி அறிவித்தவுடன் பவன் குப்தா கண்ணீர்விட்டு அழுதார். வினய் சர்மா, அக்ஷய் தாகுர் ஆகிய இருவரும் எதுவும் பேசாமல் அதிர்ச்சியில் உறைந்ததுபோல காணப்பட்டனர்.
 "நாங்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்' என்று முகேஷ் சிங் கண்ணீர்விட்டார்.
தள்ளுமுள்ளு: நீதிமன்ற அறைக்குள் குற்றம்சாட்டப்பட்ட நால்வரின் குடும்பத்தினர், வழக்குரைஞர்கள், துணை மருத்துவ மாணவியின் பெற்றோர், மாணவியின் நண்பர், காவல் துறை அதிகாரிகள் இருந்தனர். நீதிமன்ற அறைக்கு வெளியே நூற்றுக்கணக்கில் செய்தியாளர்கள், தொலைக்காட்சி நிருபர்கள், பொதுமக்கள் குழுமியிருந்தனர். அவர்களை சமாளிக்க முடியாமல் நீதிமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னணி: தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து முதலில் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு அந்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி மாணவியின் உயிர் பிரிந்தது.  மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ராம் சிங் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மைனர் நபர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்திலும் மற்ற ஐந்து பேர் மீதான வழக்கு தெற்கு சாகேத் விரைவு நீதிமன்றத்திலும் விசாரிக்கப்பட்டது. அதில், மைனர் நபருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து தில்லி சிறார் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்து வந்த பாதை...
2012
டிசம்பர் 16: ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.
டிசம்பர் 17: மாணவி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்ப்பு
டிசம்பர் 17: ராம் சிங், முகேஷ், பவன், விநய்  அடையாளம் தெரிந்தது.
டிசம்பர் 18: நால்வரும் கைது; மைனர் நபர், அக்ஷய் தாகுர் தேடுதல்.
டிசம்பர் 20: மாணவியின் நண்பர்  புகார்; 6 பேர் மீதும் வழக்குப் பதிவு.
டிசம்பர் 21: மைனர் நபர் ஆனந்த் விஹார் அருகே கைது.
டிசம்பர் 22: பிகார் மாநிலம், ஒளரங்காபாதில் அக்ஷய் தாகுர் கைது.
டிசம்பர் 26: சிங்கப்பூரில் மாணவிக்கு சிகிச்சை.
டிசம்பர் 29: மாணவி உயிரிழப்பு.
2013
ஜனவரி 3: 5 பேர் மீது விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை.
ஜனவரி 17: விரைவு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.
பிப்ரவரி 2: ஐந்து பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு.
மார்ச் 11: திஹார் சிறையில் ராம் சிங் தற்கொலை.
ஆகஸ்ட் 22: இறுதிகட்ட வாதங்கள் தொடங்கியது.
ஆகஸ்ட் 31: மைனர் நபருக்கு 3 ஆண்டுகள் தண்டனை.
செப்டம்பர் 10: குற்றம்சாட்டப்பட்ட நால்வர் குற்றவாளி எனத் தீர்ப்பு.
நன்றி தினமணி நாளிதழ் - http://dinamani.com/india/2013/09/11
--------------------------------------------------------------------------------------------  
இனி இந்தவார நமது நிகழ்ச்சிகள் –
புதுக்கோட்டை நேஷனல் அகாடமியில் 11.09.2013 அன்று மகாகவி பாரதியின் 93ஆவது நினைவு நாளையொட்டி,  புதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை பாரதியார் கனவு கண்ட சமுதாயம் மலரவில்லைஎனும் வழக்காடு மன்றத்தை நடத்தியது.

பொன்.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற வழக்காடு மன்றத்திற்குக்  கைக்குறிச்சி சுபபாரதி கல்வியியல் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் வீ.கே.கஸ்தூரிநாதன் நடுவராக இருந்தார்.

தாய்மொழி, பெண் சமத்துவம், சமதர்ம சமுதாயம் பற்றிப்  பாரதியார் கண்ட கனவுகள் நனவாகவில்லை என கவிஞர் மு.கீதா, கோ.வள்ளியப்பன் ஆகியோர் வழக்குத் தொடுத்தனர்.
வழக்கினை புலவர் மகா.சுந்தர், கவிஞர் செ.சுவாதி ஆகியோர் மறுத்து வாதிட்டனர். இருதரப்பினரும் பாரதியாரின் கவிதை களையும் இன்றைய நடப்பியல் நிகழ்வுகளையும் சான்றுகாட்டி வாதிட்டனர்.
நிறைவில் பெண்களின் இன்றைய முன்னேற்றம், தமிழ்மொழி, கணினி, மருத்துவ, வழக்குமன்ற மொழியாக உயர்ந்துள்ளமை, சமூகத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கப்படியான மேன்மை இவற்றை ஒப்பிட்டு பாரதியாரின்   கனவுகள் நனவாகி வருகின்றன என நடுவர் தீர்ப்பளித்து, தொடுக்கப் பட்ட வழக்கினைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் வரவேற்க, நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்த பாவலர் பொன்.கருப்பையா நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த கவிஞர் நா.முத்துநிலவன், இரா.சம்பத்குமார், கிருஷ்ண வரதராசன் ஆகியோர் கருத்துரை வழங்கி, பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசாக நூல்களை வழங்கினர்.

திருவள்ளுவர் நற்பணிமன்ற கண்ணதாசன், மரகதவள்ளி அறக்கட்டளை அறங்காவலர் க.மதிவாணன், , நண்பா அறக்கட்டளை கார்த்திக், நேஷனல் அகாடமி மணிகண்டன், நாகரெத்தினம் மற்றும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
[செய்தி – பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்
படத்துடன் செய்தி வெளியிட்ட 13-09-2013 தினமணி, தினகரன் (திருச்சி) நாளிதழ்களுக்கு நன்றி]
---------------------------------------------------------------
இளம்கவிஞர்-கவிதை ஆர்வலர் பயிற்சி வகுப்பு
 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழு நடத்தும் கவிதைப் பயிற்சி வகுப்பு  
திண்டுக்கல் பகுதிசார்ந்த நண்பர்கள் முக்கியமாகக் கல்லூரி மாணவ-மாணவியர் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
 நாள் -14-09-2013 -சனிக்கிழமை
 (காலை10-மாலை 5மணி) 
- இடம் -
சக்தி கலைப்பண்பாட்டு மையம், 
பாலகிருஷ்ணாபுரம், திண்டுக்கல் 
--நிகழ்ச்சி நிரல்—
-துவக்கி வைத்துச் சிறப்புரை-
கவிதை வரலாறும் - வகைப் போக்குகளும்
கவிஞர் நா.முத்துநிலவன்
-வாழ்த்துரை-
கவிஞர் க.பாலபாரதி M.L.A.
கவிஞர் வரத.ராஜமாணிக்கம்
(முன்னாள் தலைவர் - பழனி நகராட்சி)
-நிறைவுரை-
திரு.கே.வேலாயுதம்
மாநிலத் துணைப் பொதுச்செயலர்-தமுஎகச.,
------------------------------- 
தொடர்புக்கு – திரு இரா.சு.மணி, திண்டுக்கல் – 94424 05969
-------------------------------- 

10 கருத்துகள்:

  1. பல பதிவுகளை ஒன்றாக போடுவது ஏனோ ...
    இருபினும் நன்று ....

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் .இந்த வழக்கில் மரண தண்டனை கொடுப்பது மட்டும் நிரந்தர தீர்வாகாது.ஆண்களின் வக்கிர எண்ணங்களுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும்.சமுக மாற்றம் வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி அய்யா. திரிபுராவை போல் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் பாடுபடுவார்கள் என்பதை சிந்திக்க வைக்கிறது பதிவு. தில்லி மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளிக்கானத் தண்டனைகள் வரவேற்கத் தக்கது. இளம் குற்றவாளிக்கான தண்டனை சட்டத்தில் ஓட்டை என்பதையே காட்டுகிறது. “பாரதியார் கனவு கண்ட சமுதாயம் மலரவில்லை“ என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் மகிழ்ச்சியளிக்கிறது. தங்களிடம் சக்தி கலைப்பண்பாட்டு மைய நிகழ்ச்சியின் தங்களுடைய பேச்சைப் பதிவாக இட வேண்டும் என்று வேண்டுகிறேன். பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  4. அப்படியானால் படிக்க இரவு நேரத்தில் போவது குற்றமா? முதலமைச்சர், ஒரு கட்சித்தலைவர்,ஆட்சியர், ஆணையர், என்று எந்த துறையில் இருந்தாலும் அவர்கள் தங்களை பாதுகாக்கவே போராடினால் மக்களை எப்படிக் காப்பார்கள்? வல்லுறவு சம்பவங்காளால் நிறைந்து போகும் செய்தித்தாள்களை படித்தால் அவ்வளவு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. இதற்கு தீர்வை எங்களுக்கு இறைவன் தான் வழ்ங்க வேண்டும் என்று சொல்லி இனியுமா தப்பிப்பார்கள்? அப்படிப்பட்ட இறைவனெ எங்களுக்கு வேண்டாம். மன்னிக்கவும் அய்யா. current cut ஆனதால் 2 விமர்சனங்களாக வருகிறது. எனக்கு பதில் சொல்வீர்கள் என்று நம்புகிறேன். இரண்டுமே வெளி வரும் என்றும் நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் எனக்கு பரிசு அளிக்கும் புகைப்படம் வெளியிட்டதற்கு நன்றி. உங்கள் கையில் பெற்றுக்கொண்டதை பெருமையாகக்கருதுகிறேன். நன்றி பாவலர் பொன்கா ஐயா அவர்களுக்கும். உங்கள் கையால் வாங்க வேண்டும் என்ற என் ஆசையை நிறைவேற்றியதற்கு. {அவர் என் அப்பா. அவர் எப்படி என் ஆசையை நிறைவேற்றாமல் இருப்பார்?} நீங்களோ என் ஞானகுரு.

    பதிலளிநீக்கு
  6. எவளோ கல்வி அறிவு பெற்று என்ன அய்யா? பொருளாதார விழ்ச்சி, அரசியல் அராஜகங்கள், பாலியல் கொடுமைகள், இதை தடுத்துவிட்டு அவர்கள் மார்தட்டிக்கொள்ளட்டும்.வெற்றுப்புள்ளிவிவரங்களால் என்ன பயன்?/

    பதிலளிநீக்கு
  7. பொதுக் கணக்கெடுப்பின் போது தகவல் தருபவர்கள் தனக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்றே தகவல் தருகிறார்கள். கல்விப் புள்ளி விவரங்கலின நம்பகத் தன்மை சற்று குறைவானதே என்றே நினைக்கிறேன். இருப்பினும் அதற்காக எடுக்கப் பட்ட முயற்சிகளை பாராட்டித் தான் ஆகவேண்டும்.
    ****************************
    வழக்கில் விரைந்து தண்டனை அறிவிக்கப் பட்டது சிறு ஆறுதல்.
    நல்ல தகவல்கள் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  8. வெக்கமாத்தான் இருக்கு
    இருந்தாலும் நம் சாதனைகள் ஒன்றும் சளைத்தவை அல்ல ...
    இன்னும் நல்ல பண்ணலாம்..
    சரிதானே

    பதிலளிநீக்கு
  9. ஐயா, தமிழ்மொழி சீர்கெட்டிருக்கிறதென்றால் இல்லையென்போர் யாருமிலர். சீர்கெட்டிருக்கிறதென்பது பலரும் மேலோட்டமாகப்பார்க்கின்ற ஒரு பார்வை. உண்மையில் அது தன் சக்தியை முற்றிலுமிழந்துவிட்டதென்பது ஆய்வுக்குரியவொன்று. அதன் இயற்கையான நடை அதற்கு இப்போது இல்லை. அதன் நடை இப்போது தள்ளாடுகிறது. இதற்கெல்லாம் புணர்ச்சியென்னும் இலக்கணத்தை நாம் சரியாக கடைப்பிடிக்காததேயாகும்.
    'யார்வீட்டிலேயிருந்துவாங்கிக்கொண்டுவந்தீர்கள்?' என்பது ஒரு வினா. இது ஒரேதொடர்மொழியாலானது. இதில் இன்றுங்கூட பேசும்போது பிரிவிருக்காது. ஆனால் எழுதும்போது?

    'யார் வீட்டில் இருந்து வாங்கிக் கொண்டு வந்தீர்கள்?' என்றிருக்கும்.

    புணர்ச்சிக்கு என்னநேர்ந்தது? தமிழ்கற்றோர் யாருமேயில்லையா, இந்த தமிழ்நாட்டில்?

    பதிலளிநீக்கு