இயக்குநர் சேரனுக்கும் அவரது மகளுக்கும் என்ன பிரச்சினை?

உண்மைக்காதல் உயிர்க்காதல் என்கிறார் மகள் தாமினி.

இல்லை  பணம்பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவன் சந்துரு என்கிறார் இயக்குநர் சேரன் ...

ஒரு தந்தையாய், அவரது வலி புரிகிறது... காதலில் சாதியில்லை என்று பாரதிகண்ணம்மா முதல் பல நல்ல படங்களைத் தந்த சேரனின் சொல்ல மறந்த கதை புரிகிறது.  

சரி அத அவங்க பாத்துக்குவாங்க..

பின் நடப்பு - நாம் கணித்தது போலவே, திரு சேரன் அவர்களின் மகள், தாய்-தந்தையுடனே போகிறேன் என்று நீதிபதியிடம் சொல்லி, நீதிபதியும அவ்வாறே செய்யலாம என்று தீரப்புவழங்க சேரன் அனைத்து ஊடகங்களுக்கும் தலைக்குமேல் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொல்லியிருக்கிறார். 

இப்போதாவது என் மகள் எங்களைப்புரிந்துகொண்டதோடு, அவனைப் பற்றியும் புரிநதுகொகண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று சொல்லி வீட்டுக்கு மகளை அழைத்துச் சென்றுவிடடார்..

இதைவிட நாட்டைப் பாதிக்கும் சில விஷயங்களும் இந்த வாரம் நடந்திருக்கின்றன. 

என்ன என்று பார்ப்போமா? அட வாங்கங்க நம்ம வேலையைப் பார்ப்போம்....நா.மு.

இந்த வா...ரம்!..  

(1) உத்தரப்பிரதேசத்திலிருந்து ...

-----------------------------------------------------------

துர்காவை பணிநீக்கம் செய்தது தவறு என்கிறது நீதிமன்றம்

உத்திர பிரதேசத்தில் நேர்மைப் பெண்ணாக அழைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி நக்பால் அம்மாநில அரசினால் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட விவகார கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேசத்தில், கவுத புத்தா நகர் பகுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட துர்கா சக்தி நக்பால் மணல் மாபியாக்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது  அவர்களை கைது செய்து உள்ளே தள்ளியதை அடுத்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர். 

இந்நிலையில் அங்கு இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றின் சுவர் ஒன்றை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமலும், முறையான விதிமுறைகளை பின்பற்றாமலும், இடிக்க உத்தரவிட்டதாக துர்கா நக்பால் மீது வழக்கு தொடரப்பட்டு உடனடியாக உ.பி மாநில அரசினால் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நடவடிக்கைக்கு பாஜகா, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

இந்நிலையில்  துர்கா நக்பால் மீது எடுக்கப்பட்ட இந்த விவகாரம், மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை வரை சென்றுவிட்டது. இது குறித்து உரிய அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதேவேளை கௌதம் பூத் நகர் மாவட்ட மஜிஸ்திரே. நீதிமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா நக்பால் குறித்த பள்ளிவாசலின் சுவரை இடிக்க உத்தரவு இடவில்லை எனவும், உச்சநீதிமன்ற அறிவித்தலை பின் தொடருமாறு கிராம மக்களுக்கு மட்டுமே அவர் சொல்லியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதோடு மத்திய அரசு சொல்வது போல், குறித்த பள்ளிவாசல் மதில் சுவர் இடிப்பின் போது எந்தவித பதற்றமோ, கலவரமோ அப்பகுதியில் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அனைத்து இந்திய ஐ.எ.எஸ் அதிகாரிகளின் கூட்டமைப்பு மத்திய அமைச்சர் வி.நாராயணசாமியை சந்தித்து, துர்கா நக்பாலை பணிநீக்கம் செய்த உத்தரவை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. – தகவலுக்கு நன்றி -  http://4tamilmedia.com/newses/india 
உ.பி. அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மசூதி சுவரை இடித்தது ஐ.ஏ.எஸ் அதிகாரி அல்ல என்று வஃக்புவாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மணல் கொள்ளையர்கள்தாம் மசூதி சுவரை இடித்து விட்டு துர்காசக்தியின்மீது பழிபோட்டுள்ளனர் என்று உ.பி வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
மசூதியின் சுவரை இடிக்க வைத்து மத நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்க முயன்றதாகக் கூறி ஐ.ஏ.எஸ் அதிகாரி துர்கா சக்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் வஃக்பு வாரியம் தெரிவித்துள்ள கருத்து உ.பி. அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 – தகவலுக்கு நன்றி - http://4tamilmedia.com/newses/india    
சரீ, தூத்துக்குடி மாவட்டஆட்சியர் இடமாற்றம்-கடல்மணற் கொள்ளை -இந்தவாரம் குறிப்புக்கும் தொடர்பில்லிங்கோ சொன்னாக் கேளுங்க.
---------------------------  
(2) இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது!
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளரும், சுப்பிரமணியபுரம், பசங்க திரைப்படங்களின் இசையமைப் பாளருமான ஜேம்ஸ் வசந்தனை போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார்கள். மொத்தம் 4 வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது இவ்வளவு  பெரிய குற்றச்சாற்றுக்கு ஆளாகும்படி ஜேம்ஸ் வசந்தன் என்ன செய்தார்?  புகார் என்ன?

ஜேம்ஸ் வசந்தனின் பக்கத்து வீட்டில் வசிக்கும், ராதா வேணு பிரசாத் என்ற பெண்மணியை பார்த்து ஆபாசமாக சைகை செய்தாராம். அதற்குத்தான் இத்தனை களேபரமும். பெண்மணி என்று குறிப்பிட்டது மரியாதைக்காக. 68 வயது பேரிளம் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என்பதே சந்தேகத்தை எழுப்பும் விஷயம். ராதா பின்னணியும் அதை உறுதி செய்கிறது.

ராதா வேணு பிரசாத் தனது பக்கத்து வீட்டை – அதாவது ஜேம்ஸ் வசந்தனின் வீட்டை தனது மகனுக்காக வாங்க நினைத்து கேட்டிருக்கிறார். அவரின் மகன் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனில் அதிகாரியாம். ஆனால் வீட்டை விற்க ஜேம்ஸ் வசந்தன் மறுத்திருக்கிறார். இதன் காரணமாக ராதா வன்மத்துடன் பலமுறை பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கிறார். கடைசி அஸ்திரமாக கமிஷனர் ஜார்ஜின் மூலம் செக்ஸ் டார்ச்சர் என்று சிறையில் அடைத்திருக்கிறார்கள். 

கமிஷனர் ஜார்ஜ் ராதா வேணு பிரசாத்தின் உறவுக்காரர்களுக்கு வேண்டப்பட்டவர். 68 வயசு பேரிளம் பெண்ணை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக தமிழக்த்தின் பிரபலமான ஒருவரையே சிறையில் தள்ள முடிகிறது. இந்தக் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரசியல் பிரமுகர்கள் திரைப்படத்துறையினர் இப்போதுதான் குரல்கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். ஜேம்ஸ் வசந்தனுடன் தொலைபேசியில் பேசிய இயக்குநர்-நடிகர் பார்த்திபன் ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்ததாகத் தகவல்!
-----------------------------------------------------
(3) வாரம் ஒரு வலைப்பக்கம் –
முதுகலைத் தமிழாசிரியரும் கவிஞரும் கட்டுரை-எழுத்தாளரும், சிலம்புச் செல்வர் அய்யா ம.பொ.சி.அவர்களின் பேத்தியுமான தி.பரமேசுவரி அவர்களின் வலைப்பக்கம் பாருங்கள்...  - http://tparameshwari.blogspot.in/
-----------------------

11 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம்,வாரம் ஒரு வலைப்பக்கம் புதுமை. இது உங்களுக்கே உரித்தான தனிப்பாங்கு. செய்திகள் அனைத்தும் சமுதாயப் போக்கை சிந்திக்க வைக்கிற்து. நேர்மையான அதிகாரிகள் தவறான முறையில் தண்டிக்கப்படும் போது (தண்டிக்க்கப்படக் கூடாது) ஆதரவு குரல் பெருகுவது அவர்களின் நேர்மைக்கானச் சான்றிதழ் என்று எடுத்துக் கொண்டு தங்களின் பணிகளில் புதிய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பர் பாண்டியன் அவர்களே. இது எனது நீண்டகாலச் சிந்தனைதான் என்றாலும் உடனடிச் செயல்பாடு நண்பர் டிஎன் முரளிதரன் அவர்களின் பெட்டிக்கடை பார்த்துக் காப்பி அடித்ததுதான். நல்ல விஷயங்களைக் காப்பியடிப்பது தவறல்ல, அதைச் சொல்லிக்கொள்வதில் ஈகோ பார்ப்பதுதான் தவறு என்பது என் தாழ்மையான கருத்து.

    பதிலளிநீக்கு
  3. பெட்டிக்கடை பக்கம் நீங்கள் போகவி்ல்லையா? அவசியம் போய்வாருங்கள்.. நண்பர் முரளி உங்களை அன்புடன் வரவேற்கக் காத்திருக்கிறார்-http://tnmurali.blogspot.com/2013/08/pettikadai-shop-for-small-things.html

    பதிலளிநீக்கு
  4. பெட்டிக்கடை பக்கம் சென்று வந்ததில் பெருமகிழ்ச்சி அய்யா. தங்களின் மேலான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தங்கள் ஆதரவை விரும்பும் அன்பு நண்பன் அ.பா. நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான வலைப்பக்கம் உண்மைகளை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளது நன்றி .பெண் துணிவாக இருப்பதை ஏற்கும் உள்ளங்கள்.வரவேற்கிறோம்.நன்றி

    பதிலளிநீக்கு
  6. நண்பர்கள் என்னை மன்னிப்பார்கள்...
    இது என்ன? தலைப்புக்குரிய செய்தியை 4வரியில் தந்துவிட்டு... என்று... என்ன செய்ய? உடம்புக்குநல்லது மருந்து நாக்கு இனிப்பத் தேடுது! அதுக்காக இனிப்பத் தடவி மருந்துதருவது போல செய்வது தவறல்லவே? பாருங்க.. ஒரே நாளில் 700பேர் பார்த்து தமி்ழ்மண வாசிப்பில் டாப்-10இல் வந்திருச்சி!
    தொடர்ந்து வாசிப்போம் வாசிக்க வைப்போம். இன்று மாலை நீடாமங்கலம் , நாளை உடுமலை புத்தகக் கண்காட்சி நிறைவுரை பார்க்கலாம் நண்பர்களே, நன்றிகள் பலபல!பல்பல!! பற்பல!!! பலப்பல!!!!

    பதிலளிநீக்கு
  7. ஏன் இதைச் சொல்றேன்னா இந்த இரண்டுநாள்களில் தமிழ்மணம் திரட்டியில் அதிகம் பேர் படித்த சுமார் 400 பதிவுகளில், நமது இந்தப் பதிவு நாலாவது இடத்திற்கு வந்திருக்கிறது. வாசகர்களுக்கு நன்றியோ நன்றிங்க.. பார்க்க..
    http://www.tamilmanam.net/

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவுகளைப் படிக்க தயங்கும் சக பதிவர்களை தங்கள் பக்கம் இழுக்க சொல்ல வந்த கருத்து ஒன்றிருக்க வேறொரு பரபரப்பான செய்தியை பதிவுக்கு தலைப்பாக வைப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபாஷனாக இருந்து வருகிறது. அதைத்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.

    ஜேம்ஸ் வசந்தன் கைது பற்றிய செய்தி ஒரு அதிர்ச்சியான விஷயம்தான். ஆனால் அதை ஏதோ ஒரு உள்நோக்குடன் செய்யப்பட்டது என்பதை அறியும்போது சட்டென்று ஒரு கோபம் எழத்தான் செய்கிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

    பதிலளிநீக்கு
  9. ஆமாம் நண்பர் ஜோசப் அவர்களே, நான் முதலிலேயே இதைத் தெரிவித்துவிட்ட பின் நீங்கள் இதை உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் இது நல்லதல்ல என்றுதான் நானும் உணர்கிறேன்.. பார்க்கலாம்... காலம் புரண்டு படுக்கும் என்று வைரமுத்துவைப் போல நாமும் நம்புவோம்...

    பதிலளிநீக்கு
  10. வணக்கம். ஐயா! இயக்குனர் சேரனின் பிரச்சனையை சினிமாக்காரரின் பிரச்சனையாக மட்டும் கொள்ள முடியாது. காதலின் தவறான புரிதலை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியதில் சினிமாவிற்கு பெரும்பங்கு உண்டு.

    தங்களின் பரிந்துரையை ஏற்று பாண்டியன் அவர்கள் பெட்டிக்கடைக்கு வருகை தந்தார்.நன்றி

    பதிலளிநீக்கு
  11. //நன்றி நண்பர் பாண்டியன் அவர்களே. இது எனது நீண்டகாலச் சிந்தனைதான் என்றாலும் உடனடிச் செயல்பாடு நண்பர் டிஎன் முரளிதரன் அவர்களின் பெட்டிக்கடை பார்த்துக் காப்பி அடித்ததுதான். நல்ல விஷயங்களைக் காப்பியடிப்பது தவறல்ல, அதைச் சொல்லிக்கொள்வதில் ஈகோ பார்ப்பதுதான் தவறு என்பது என் தாழ்மையான கருத்து.//
    இது நிச்சயம் காபி அல்ல. சிறந்த பண்பாளர் தாங்கள் என்பதை உணர்த்தி விட்டீர்கள். பலரும் இணையத்தில் சிறு செய்திகள் மற்றும் தகவல்களை கருத்துகளை ஒரே பதிவில் தொகுத்து அளிப்பது நடைமுறையில் உள்ளது .பத்திரிகைகளிலும் இதை காணமுடியும்.
    நன்றி

    பதிலளிநீக்கு