புரட்டிய பக்கங்கள்...

கொடுத்தும் குறையாது வளர்வது அன்பு

Saturday, July 20, 2013

கவிஞர் வாலியின் இறுதி நிகழ்ச்சி எழுப்பும் கேள்விகள்(கவிஞர் வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான கவிஞர்.இரா.தெ.முத்து. படம்-கவாஸ்கர்)
----------------------------------------------------------
தமிழின் மகாகவி பாரதியின் இறுதி ஊர்வலத்தில் வெறும் பதினெட்டுப் பேர்களே கலந்துகொண்டனர் என்றால், அன்றைய (11-07-1921)தகவல் தொடர்பு நிலையோடு தொடர்புடையதாகத்தான் புரிந்துகொள்கிறோம். இன்றும், தமிழக ஊடகங்களால் கொண்டாடப்பட்ட பிரபல திரைப்படக் கவிஞர் வாலிக்கும் அந்தக் கதிதான் எனும்போது, இந்த அவமானம் யாருக்கு என்னும் கேள்வி எழுகிறது.

அவர்கள் வீட்டில் இறுதி ஊர்வலம் மாலை 5மணிக்கு என்று தெரிவித்துவிட்டு பிற்பகல் இரண்டுமணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பியது ஏன்?

மின்மயானத்தில் அந்தக் கவிஞனுக்கு ஓர் இரங்கல் கூட்டம் நடத்தக் கூட யாரும் ஏற்பாடு செய்யவில்லையே! ஏன்?

இறுதி ஊர்வலம் கூட சரியாக ஏற்பாடு செய்யப்படவில்லையே ஏன்?

முதல்வர்களாகவும் திரைப்படத்தால் உயர்ந்தவர்களாகவும், இவற்றைவிட கவிஞர் வாலியோடு நெருக்கமானவர்களாகவும் அறியப்பட்ட இந்நாள்-மேனாள் முதல்வர்கள் சார்பாக மயானத்திற்கு யாரும் வரவில்லையே ஏன்?

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுபெற்ற புகழ்பெற்ற கவிஞருக்கு இறுதி மரிாதை  செலுத்தத் தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள் எவரும் மயானத்திற்கு  வரவில்லையே ஏன்?

இந்த நமது கேள்விகளோடு,

பெசந்த் நகர் மின் மயானத்தில் வாலிக்கு இறுதிமரியாதை செய்ய  வந்த வைரமுத்து, பாக்யராஜ், மேத்தா, பா.விஜய், கபிலன் போன்ற கலைஞர்கள் மிகச்சிலருக்குக்கூட, கவிஞர் வாலிக்கு ஒர் இறுதிஅஞ்சலி உரை நிகழ்த்தி, விடை கொடுக்க வேண்டும் என்று உணர்வில்லாது போனது ஏன்? என்று கேட்கும் கவிஞர் இரா.தெ.முத்துவின் கேள்விக்கும் யார் விடைசொல்வார்கள்?
http://thisaichol.blogspot.in/2013/07/blog-post.html

கவிஞர் கண்ணதாசன் பாடல் ஏனோ நினைவுக்கு வருகிறது...
“ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடும்வரை கூட்டம், கொள்ளிவரை வருமா?...
வீடுவரை உறவு, வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ?”
கடைசி வரை யாரோ????????

14 comments:

 1. இறுதிமரியாதை நிகழ்வு கொடுமை...

  ReplyDelete
 2. நீங்கள் கேட்ட கேள்விகள் நியாமானவை. சம்பவங்கள் உண்மையில் வருத்தம் அளிக்கிறது.
  //ஆடும் வரை கூட்டம் வரும்
  ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
  தாயாலே வந்தது! தீயாலே வெந்தது
  மெய் என்று மேனியை யார் சொன்னது?//

  ReplyDelete
 3. தங்கள் கேள்விக் கணைகளை வரவேற்கிறேன்.
  எப்படி இருப்பினும்
  வாலியின் பாடல்கள் அவரை வாழவைக்கும்

  ReplyDelete
 4. ஒருவரின் படைப்பை முன் வைத்து,அவரை அங்கீகரித்துக் கொண்டாடும் பொதுவான மனநிலை இல்லாது போனதுதான் இந்த இழிவுகளுக்குக் காரணம்.மேலும் சமுகம் சுயலாபம் கொண்ட நோக்கில் போகும் பொழுது,தவிர்க்க முடியாமல் அணைத்துக் கொள்வதும்,இல்லாத பின்பு,மறந்து போவதுமான கதியில் போவதை மாற்ற வேண்டும்

  ReplyDelete
 5. ஆங்கிலேயர் நாடுகளில் poet corner என்று இலக்கியவாதிகளுக்கும் புலவர்களுக்கும் தனியாக கல்லறைத் தோட்டம் உண்டு...இன்னும் அமெரிக்கா,ஜப்பான் போன்ற சில நாடுகளிலும் இன்றும் உண்டு...அங்கே கவிஞர்களை கடவுளாக வணங்கினார்கள்..இங்கே போற்றுபவரைவிட...தூற்றுவோரே அதிகம்...யார் பெரியவர் என்ற ஈகோ வேறு...அதனால் இப்படி இருக்கலாம்?

  ReplyDelete
 6. Since he is from Brahmin community
  being the reason for this state of affair. Both ADMK & DMK are against
  Brahmins.
  M.Senthilkumaran.

  ReplyDelete
 7. தாங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதை போல்(தாசில்தார் வீட்டு நாய் ஊரே கூடும்)தானே நடந்திருக்கிறது.இது தான் உலகம்.

  ReplyDelete
 8. இறுதி சடங்கிற்கு நிறைய பேர் வராத காரணத்தை நீங்களே (“அவர்கள் வீட்டில் இறுதி ஊர்வலம் மாலை 5மணிக்கு என்று தெரிவித்துவிட்டு பிற்பகல் இரண்டுமணிக்கே வீட்டை விட்டுக் கிளம்பியது“) சொல்லிவிட்டீர்கள்.

  அதிகம் பேர் இல்லாத காரணத்தால் இறுதி அஞ்சலி உரைத்தால் யாரும் கேட்க மாட்டார்கள், அல்லது இறந்தவரா கேட்கப் போகிறார் என்று விட்டு விட்டார்களோ...!

  உயிரோடு வாழ்பவர்களுக்கே செய்ய வேண்டிய மறியாதையைத் தமிழக அரசு செய்யாது. இதில் இறந்தவருக்கா...?

  என்ன கொடுமை...

  ReplyDelete
 9. இறுதி மரியாதை நிகழ்வு வருத்தமளிக்கும் விஷ்யம்...

  ReplyDelete
 10. ஒரு மிகச் சிறந்த கவிஞரின் இறுதிப் பயணத்தில் உடன் செல்லாததையோ இரங்கல் கூட்டம் நடத்தாதைப் பற்றியோ ஏன் கவலைப்பட வேண்டும்? அவரின் பாடல்கள் இப்புவியில் உயிரோடு இருக்கும்வரை அவர் மறைந்ததாக யாரும் நினைக்கத் தேவையில்லை.

  ReplyDelete
 11. அவசரமோ?அவசரப் படுத்தினார்களோ?

  ReplyDelete
 12. இந்த நாட்டில் கவிஞர்களுக்கும் அறிவாளிகளுக்கும் இவ்வளவுதான் மரியாதை.

  ReplyDelete
 13. அவர் எழுதிய கவிதை புத்தகங்களை காசு கொடுத்து வாங்கிபடிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...