ஞாயிறு, 14 ஜூலை, 2013

கடந்த மார்ச்-2013இல் காரைக்குடியில் நடந்த “கம்பன் கழகப் பவளவிழா” மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்புமலர்களில்  “காலமும் கணக்கும் நீத்த காரணன்“ எனும் (522 பக்கம்--88கட்டுரைகள்-ஏ8 அளவு) தொகுப்பில் நமது “கம்பனும் கார்ல்மார்க்சும்” கட்டுரை இடம்பெற்றிருந்ததை நண்பர்கள் அறிவீர்கள்.                            (நமது வலைஇணைப்பு  http://valarumkavithai.blogspot.in/2013/03/blog-post_754.html)

இப்போது, கடந்த மாதம் 29-06-2013 அன்று மதுரையில் நடந்த “தீக்கதிர்” நாளிதழின் பொன்விழாவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் நமது கட்டுரை “சங்க இலக்கியமும் தமிழ்ச்சமூகமும்” வெளியிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். (நமது வலைப்பக்கhttp://valarumkavithai.blogspot.in/2012/10/blog-post.html) இணைப்பு

தீக்கதிர் பொன்விழாச் சிறப்பு மலர் மிகச்சிறப்பாக வந்துள்ளது.
(448பக்கம்--60கட்டுரைகள்- 8நேர்காணல்-13கவிதைகள்-ஏ4அளவு)
1963 முதல் 2013 வரையிலான இந்திய-தமிழக -அரசியல்வரலாறு, சமூகம்-கல்வி-கலாச்சார-ஊடகம் சார்ந்த பதிவுகள் அரிய படைப்புகளாக இடம்பெற்றுள்ளதை அவசியம் படிக்க வேண்டும்.

பிரகாஷ்காரத், சீத்தாராம் யெச்சூரி, கே.வரதராஜன், ஆர்.உமாநாத், என்.சங்கரய்யா, டி.கே.ரெங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், ச.சீ.ராஜகோபாலன், வே.வசந்திதேவி உள்ளிட்ட கல்வியாளர்கள்,  அருணன்,மேலாண்மை பொன்னுச்சாமி, செந்தில் நாதன் உள்ளிட்ட எழுத்தாளர்கள், வி.பரமேசுவரன், எஸ.ஏ.பெருமாள், மதுக்கூர் ராமலிங்கம், அ.குமரேசன், சு.பொ.அகத்தியலிங்கம், ப.முருகன் முதலான ஊடகர்கள்,  மற்றும் கவிதைகள் நேர்காணல்கள் என மலர் வண்ணமயமாகவும் கருத்தைமட்டுமன்றிக் கண்ணையும் கவரும் வகையிலும் வெளிவந்துள்ளது.

மலர் வாங்க முகவரி -
தீக்கதிர் பொன்விழாச் சிறப்பு மலர், (விலை ரூ.150)
6-16,புறவழிச்சாலை,
மதுரை-625018

தொலைபேசி -
ஆசிரியர் குழு -+91 452-2669765
நிர்வாகக்குழு- +91 452-2669769

மின்னஞ்சலில் தொடர்பு கொள்ள -
theekkathir@dataone.in
theekkathir@rediffmail.com
----------------------------------------------------------------------------------

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...