நாம் பாராட்டவேண்டிய கணினி அறிஞர், சிறுமி விசாலினியைப் பாராட்டுவோம்!


நமது வலைப்பக்கம் மற்றும் முகநூல் நண்பர் திரு அலெக்ஸ் தரும் பின்வரும் செய்தியை அப்படியே நமது வலைப்பக்க நண்பர்களுக்குத் தெரிவித்து அதே வேண்டுகோளை நானும் வைக்கிறேன். -
ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!

வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். 

இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.

வயதிற்கேற்றார்போல் சைக்கிள் ஓட்டுவதும், கார்ட்டூன் பார்ப்பதும் இவள் பொழுதுபோக்கென்றாலும், இவள் படைத்துள்ளது இமாலய சாதனை. கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெற இவள் வயது காணாதாம். ஆம், பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவள் சாதனை இடம்பெறுமாம். இந்த வயதிலேயே, பள்ளிப்படிப்பிலும் இருமுறை இவள் தாவியுள்ளாள். ஆமாம், இரண்டுமுறை இவளுக்கு கிடைத்துள்ளது டபுள் புரமோசன்.

கல்லூரியில் பயிலும் B.E., B.TECH மாணவர்களுக்கு கணினிப்பிரிவில் உரையாற்றும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ளாள். சமீபத்தில் மங்களூரிலுள்ள NITMல் நடைபெற்ற அனைத்துலக மாநாட்டில் (INTERNATIONAL CONFERENCE), விசாலினிதான் சிறப்பு அழைப்பாளர். அதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சார்ந்த அறிஞர்களும் விசாலினியின் அறிவுத்திறனைக் கண்டு வியப்புற்றுள்ள்னர்.

உலக சாதனை படைத்துள்ள இந்த குழந்தையின் தந்தை திரு.கல்யாண குமாரசாமி ஒரு எலக்ட்ரிசியன். அவரது குழந்தை படைத்துள்ள சாதனைகள் இதோ:

MCP (Microsoft Certified Professional)

CCNA (Cisco Certified Network Associate),

CCNA Security(Cisco Certified Network
Associate Security),

OCJP (Oracle Certified Java
Professional).

CCNA
வில் இவள் பெற்ற மதிப்பெண் 90 சதவிகிதம். இதுவும் ஒரு உலக சாதனைதான்.மங்களூரிலுள்ள NITயும், திருவில்லிபுத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரி ஒன்றும் விசாலினியை தங்கள் கல்லூரியில் சேர அழைத்தும் இவர் பெற்றோர்கள், இன்னும் சில ஆண்டுகளுக்கு, இந்த இளம் அறிவாளியை, கல்லூரி வாழ்க்கைக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடவில்லை.பாகிஸ்தானில் உள்ள பன்னிரண்டு வயது மாணவர் இரிடிசா ஹைதரின் சாதனையை பத்து வயதில் முறியடித்து THE YOUNGEST CCNA WORLD RECORD HOLDER என்ற உலக சாதனை படைத்துள்ளார்.


வேண்டுகோள்:

1)
ஒரு இந்திய்ர்,அதிலும் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்த சிறுமியின் சாதனை உலகறியச் செய்திட, முடிந்தவரை அனைத்து நண்பர்களும் இந்தச் செய்தியினை அவரவர் தளத்தில் பகிருங்கள்.

2)
விசாலினியின் இ-மெயில் ஐ.டி: visalini2000@gmail.com. இதற்கு நம்மாலானது, ஒரு பாராட்டு மெயிலை அனுப்பி அப்பெண்ணை ஊக்குவிக்கலாமே!
நண்பர் திரு அலெக்ஸ் அவர்களின் முகநூல்  முகவரி - https://www.facebook.com/profile.php?id=100005485415479

-----------------------------------------------------------------------------
விசாலினியின் மின்னஞ்சல் முகவரி - visalini2000@gmail.com 
----------------------------------------------------- 
விசாலினிக்கு நான் எழுதிய மின்னஞ்சலையும் அதற்கு அவர் அனுப்பியிருந்த பதிலையும் அதன்பின் அவரது தளத்தில் நான் இட்ட கருத்துரையும் இங்கு.....

அன்பிற்குரிய விசாலினிக்கு,
உன் சாதனைகளைப் பற்றி அறிய வந்தபோது பெரிதும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.
கணினி உலகின் பெண் பில்கேட்ஸாக வளர்ந்து, பெரும் புகழ்பெறவும், பெரும் பணம் ஈட்டவும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இப்போது, தமிழில் மின்னஞ்சல் தரலாம் என்பதுகூடத் தெரியாமல் இருக்கும் தமிழ்நாட்டுத் தமிழருக்கு உன் அறிவால் உணர்வூட்டு.
வெற்றுத் தமிழ்ப் பெருமை பேசாமல், அறிவியல் வழியில் நம் கல்வியையும், சமூகத்தையும் மாற்றியமைக்க உன் அறிவைப் பயன்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
நா.முத்துநிலவன் 
Jun 30 (1 day ago)
-----------------------------------------------  
 Visalini Kumarasamy visalini2000@gmail.com Mon, Jul 1, 2013 at 11:24 AM 
hello sir 
thank you for your mail 
I saw you in  Tv program 
surely i will visit your website 
now i got 5 world records and 10 international certificates in computer networking 
I have been a chief guest for 7 international conferences and gave keynote speeches there
I am conducting seminars for engg students like BE Btech students in various universities and engg colleges
you know my grand parents , both of them are  Rtd  Tamil teachers  PG asst
pl visit my own website which is created by me     www.kvisalini.com
thank you 
-------------------------
இதன் பின், http://www.kvisalini.com/ எனும் விசாலினியின் தளத்திற்குப் போய்                                   அங்கு ஆங்கிலத்திலேயே இருந்த கடிதங்களிடையில் நமது  தமிழ் மின்னஞ்சல் கருத்தேற்றம் - 
------------------------------------------------ 
அன்பு விசாலினி, உன் கணினித் திறமைக்கு என் வாழ்த்துகள். அதே நேரம் உன் தொழில் நுட்பம் தாய்மொழிக்கும் பயன்பட வேண்டும என்பதே என் விருப்பம். நான் தமிழாசிரியர் என்பதாலோ உன் தாத்தாவும் பாட்டியும் தமிழாசிரியர்கள் என்பதாலோ அல்ல, உன் தாய்மொழி தமிழ் என்பதால்... உலக நுட்பங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் கொண்டுவா! உன்னால் கணித்தமிழும் வளரட்டும். 
அன்புடன், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை http://valarumkavithai.blogspot.in/.
Reply • 1 • Like • Follow Post • 7 minutes ago • 01-07-2013

----------------------------------------------------------- 

4 கருத்துகள்:

  1. ஹாய் விஷாலினி உன்னைப் போல் தான் என் பெயரும் கொஞ்சம் வித்தியாசம் ஹிஷாலீ உனது திறமைக்கும் வெற்றிக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் இன்னும் பல வெற்றிச் சாதனைகள் பெற வாழ்த்துகிறேன்

    நன்றிகள்
    ஹிஷாலீ

    பதிலளிநீக்கு
  2. அனுப்புனர்: Venugopalan SV
    பெறுநர்: MUTHU NILAVAN
    தேதி: 1 ஜூலை, 2013 7:57 AM
    தலைப்பு: நாம் பாராட்டவேண்டிய கணினி அறிஞர், சிறுமி விஷாலினியைப் பாராட்டுவோம்

    தினத் தந்தி நாளிதழில் இந்தக் குழந்தை பற்றிய செய்தியைப் பார்த்து வியந்தேன்...ஆங்கில நாளேடுகள் எதிலும் வரவில்லையோ என்று தேடித் பார்த்துக் கொண்டிருந்தேன்..

    உங்களது விரிவான தொகுப்பு எத்தனை இதம் அளிக்கிறது...அவசியம் மின்னஞ்சல் அனுப்பி வைப்பேன்...
    மிக்க நன்றி தோழர் முத்து நிலவன்...
    கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கிக் கிடக்கும்...
    சின்ன உளி தட்டித் தட்டி எழுப்பும்...என்ற திரைப்படப் பாடல் வரிகள், திறமை இருந்தும் உலகு அறியாத பல குழந்தைகளைப் பற்றிய ஏக்கத்தை இந்த நேரம் தவிர்க்க முடியாது...

    எஸ் வி வி

    பதிலளிநீக்கு
  3. அய்யா
    சிறுமியின் ஆற்றலை
    சிறப்பாக பதியமிட்டுள்ளீர்

    பதிலளிநீக்கு
  4. நன்றி உறிஷாலி, எஸ்விவி, மற்றும் பென்னி அரசு
    அவரிடமிருந்து வந்த பதிலையும் பதிவுசெய்திருக்கிறேன். நீங்கள் மின்னஞ்சல் செய்து பதில் பெற்றிருந்தால் தெரிவியுங்கள்... நன்றி

    பதிலளிநீக்கு