கவிஞர் கந்தர்வன் நூலகத்துக்கு நூல்கள் அனுப்புங்கள்..முத்துநிலவன் வேண்டுகோள்


       நூலக வளர்ச்சிக் குழுக் கூட்டம்

--நன்றி -தினமணி நாளிதழ், The Hindu (Trichy Edition), & தினகரன் நாளிதழ், தீக்கதிர் நாளிதழ்.
புகைப்படம்-நன்றி திரு.சு.மதியழகன் 
----------------------------------------------------- 



















ஆரியபட்டா
வானத்தைக் கிழித்தது,
அணுகுண்டு சோதனை 
பூமியைக் கிழித்தது,
அரைக்கைச் சட்டை
கிழிந்தது மட்டுமே
நெஞ்சில் நிற்கிறது.
பிள்ளை வேண்டாமென்று
கருப்பையைக்கிழித்தார்கள்,
இனி
உணவும் எதற்கென்று
இரைப்பையைக்
கிழிப்பார்கள்,
எல்லாம் கிழிந்த
எங்கள் தேசத்தில்
வாய்கிழிவது மட்டும்
வகைவகையாய் இருக்கும்
      --கவிஞர் கந்தர்வன்
--------------------------------------------- 
30-03-2013 அன்று நூல்கள் சேகரிப்பைத் தொடங்கிவைத்து,  கவிஞர் நா.முத்துநிலவன்  வழங்கிய நூல்கள் பட்டியல்
புதிய நூல்கள் -
பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள்-ஆனைமுத்து-
20 நூல்கள் -       மதிப்பு ரூ.5,800-
காலந்தோறும் பிராமணியம் – அருணன் –
7 நூல்கள்  -        மதிப்பு ரூ.2,000-
பழைய நூல்கள் –  
மூலதனம் – தமிழில் தியாகு -NCBH வெளியீடு      
5 நூல்கள்-         மதிப்பு ரூ.  900-
லெனின் தேர்வு நூல்கள் – 12 பாகங்கள் -         
12 நூல்கள்-         மதிப்பு ரூ.  500-
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு 
பாரதிபுத்தகாலயம்-  மதிப்பு ரூ.  180-
கம்ப ராமாயணம் -6காண்டம்- வர்த்தமான்ன் -
9நூல்கள் –         மதிப்பு ரூ. 1,000-
காந்தியின் கடைசி 200நாட்கள்
மொழிபெயர்ப்பு      மதிப்பு ரூ.  200-
 ---------------------------------------------------
ஆக மொத்தம் 54 நூல்கள் மதிப்பு ரூ.10,000 +     
---------------------------------------------
இச்செய்தியைப் படிக்கும் யாவரும் “கவிஞர் கந்தர்வன் நூலகம்வளர நூல்கள்வழங்கி உதவலாம். தொடர்பிறகு – நா.முத்துநிலவன்-94431 93293, கவிவர்மன்-94434 20444
--------------------------------------------------- 

7 கருத்துகள்:

  1. ஒரு சிறந்த சமூகப் போராளியும் சிந்தனைப் படைப்பாளியுமாகிய கவிஞர் கந்தர்வன் நூலகம் வளர்ச்சியுற வாழ்த்துகள். என்னாலான நூல்களை அந்நூலகத்திற்கு விரைவில் வழங்குகிறேன். பாவலர் பொன்.க.

    பதிலளிநீக்கு
  2. KANTHARVA NULAKAM pudukottai makaluku arivoliyai valangatum.....na nillam portrum nullaka varuchaiyil muthal(1) agatum valthukal........BY A.Paul murugan, chief pharmasist,Theni medical college

    பதிலளிநீக்கு
  3. நன்றி பாவலர் பொன்.க. அவர்களே!
    அந்த மாபெரும் படைப்பாளிக்கு நாம் செய்யும் மரியாதையாக மட்டுமல்ல, அவர் பாடுபட்ட இந்த மக்களுக்கு, நாம் செய்யும் தொடர் கடமையாகவும் நான் இதை நினைக்கிறேன். முதல் தவணை, இரண்டாம் தவணை என்ன... என் வீட்டில் இருக்கும் நூல்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கந்தர்வன் நூலகத்தில்தான் கொண்டுபோய் வைக்கப் போகிறேன்... மக்கள் படிக்கட்டும், இளைஞர்கள் பயன்படுத்துமிடமாக மாற்றவேண்டும்..

    பதிலளிநீக்கு
  4. பாலமுருகன்... புத்தகங்களோடு எப்ப வர்ரே...? 22ஆம் தேதி அவரது நினைவு நாள் அன்று ஒரு சிறு நிகழ்வு நடத்திட எண்ணம். அடுத்தமாதம் பெரிய அளவில் கருத்தரங்கம், மலர் வெளியீடு... நீ எப்ப வேணாலும் வரலாம்... உன் இடம்... எப்ப வந்தாலும் குடும்பத்தோடு வரவும்
    அன்புடன், நா.மு.

    பதிலளிநீக்கு
  5. I will do something for the library ...if you suggest what books are required It is good for me to send! Also I need delivery address.

    பதிலளிநீக்கு
  6. Dear sir, Could you please suggest list of books!!
    I will send money ,somebody can buy book and give to library since I am in qatar.

    பதிலளிநீக்கு
  7. ஏப்ரல் 22ஆம் தேதி கந்தர்வன் நினைவு நாள், ஏப்ரல் 23ஆம் தேதி உலகப் புத்தக நாள் (ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியரின் பிறந்தநாள் மற்றும் இறந்தநான்) என்பதால், அன்று ஒரு சிறு நிகழ்வை -
    ”கந்தர்வனை நேசிப்போம்” என்றும் ”புத்தகங்களை வாசிப்போம்” என்றும் தலைப்பிட்டு இரண்டுபேரைப் பேச அழைப்போம் என்று திட்டமிட்டோம்.
    ஆனால், நான் SSLC தாள் திருத்தும் பணியில் மாட்டிக்கொண்டதால் திட்டமிடடபடி நடத்த முடியவில்லை.
    மே-05 காரல்மார்க்்ஸ் பிறந்த நாளை ஒட்டி நடததிட எண்ணியிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு