வியாழன், 21 மார்ச், 2013


அறிவை வளர்க்க தேடல்கள் அவசியம்


First Published : 13 March 2013 05:28 AM IST

அறிவை வளர்க்கத் தேடல்கள் அவசியம் என்றார்                     கவிஞர் நா.முத்துநிலவன்.       
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5ஆம் ஆண்டு விழாவில், போட்டிகளில் வென்ற மாணவிகளுக்குப் பரிசளித்து அவர் பேசியது:
உயர்ந்த சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு, தங்களுக்கான குறிக்கோளை, இலக்கை தீர்மானிக்க வேண்டும். அதற்கு சிறந்த மனிதர்களை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். தேடல்கள் இருந்தால்தான் அறிவை வளர்த்தெடுக்க முடியும். இன்றைய பரபரப்பான உலகில் தொழில்நுட்பத் திறன் கற்பனைத்திறனுடனும் இணைதல் மிகவும் அவசியம் இவற்றோடு விற்பனைத்திறனும் சேர்ந்தால் நீங்களும் பில்கேட்ஸ்தான் என்றார் முத்துநிலவன்.
விழாவில் சிறப்பாகப் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும், பல்வேறு கலைஇலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் பரிசளிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஸ்ரீபாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன், செயலர் வீ. வைத்தியநாதன், மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எஸ். தனலெட்சுமி மற்றும் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.


First Published : 13 March 2013 05:28 AM IST
(சற்றே ஏறக்குறைய இதே செய்தியை தீக்கதிர், தினமலர், தினத்தந்தி நாளிதழ்கள் படத்துடனும், தினமணி படமில்லாமல் செய்தியை மட்டும் வெளியிட்டிருந்தன புகைப்படம் எடுத்த திரு.ஜெயச்சந்திரன் அவர்களுக்கு நன்றி)

-------------------------------------------------------------- 

4 கருத்துகள்:

 1. Venugopalan SV
  பெறுநர்: Muthu Nilavan
  எனக்கென்னவோ நீங்கள் பில் கேட்ஸ் உதாரணங்களைத் தவிர்த்துவிட்டு மனித நேய உணர்வுகள், சக மனிதர் மீது கரிசனம் கொண்டோர் உணர்ச்சிகள், சமூகத்திடமிருந்து பெற்றதை மீண்டும் சமூகத்திற்கே வழங்கும் உன்னத வாழ்வியலாளர் சிந்தனைகள் இவற்றை முன்னிறுத்திப் பேசலாம் என்று தோன்றியதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

  நீங்கள் பேசியதன் சுருக்கத்தை மட்டுமே நாளிதழ்கள் வெளியிட்டிருக்கும் என்றாலும், நீங்கள் பேசியதிலிருந்து எடுத்துப் போட்டிருப்பதன் மீது எனது உடனடி எண்ணம் இது...
  நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை...
  அன்புடன்
  எஸ் வி வி
  ------------------------------
  அனுப்புனர்: Muthu Nilavan
  பெறுநர்: Venugopalan SV
  ஏற்றுக் கொள்கிறேன் தோழா!
  எனக்கே அந்த உறுத்தல் இருந்தது...
  பிரபலமான பெயரைச் சொல்லவேண்டும் என்ற மேடை அவசரத்தில் சொல்லி விட்டதை உடனடியாக உணர்ந்தேன்.
  நீங்கள் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள் தோழா...
  ஏற்றுக்கொள்வதில் என்ன தடை?
  நன்றி நன்றி.
  (இவை இரண்டையும் எனது வலைப்பக்கக் கருத்துப் பகுதியில் போடுவதில் உங்களுக்கு ஒன்றும் தடையிருக்காதே? - இருக்காது என நம்பியே எடுத்துப் போடுகிறேன். மீண்டும் நன்றி தோழா...)

  பதிலளிநீக்கு

Blog Archive

படைப்புகளைப் பயன்படுத்த விரும்புவோர் ஆசிரியரிடம் முன்அனுமதி பெறவேண்டும். Blogger இயக்குவது.

பக்கப் பார்வைகள்

மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பெற :

My E.Books - http://valarumkavithai.blogspot.com/2017/04/blog-post_6.html

நட்பு வட்டம்

உலகத்தின் பார்வையில்

உலகத்தின் பார்வையில் இந்த வலை

Popular Posts

Google+ Followers

நட்பு வலைகள்

Our Facebook Page

எனது நூல்களில் சில...