தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

ரெண்டு புதுசு! ரெண்டு பழசு! - கவிதைகள் - நா.முத்து நிலவன்  பேடிக்கல்வி

 காலத்தால் அழியாத
 கவியாக்கும் அவசரத்தில்
 காளியம்மா வந்து
 சூலத்தால் எழுதியதில்-
 நாக்கு துண்டாகி,
 பேச்சும் போச்சு!
----------------------------------------------------------------
    சுதந்திரம்

  சட்டைத் துணி கேட்டு
 சண்டையிட்டோம்,
 ஒட்டுத்துணி கிடைத்தது-
 மூன்று வர்ணத்தில்.
 அதுவும் இப்போது
 நால்வர்ணத்திடையே
 நசுங்கி...
---------------------------------------------------------------------

                          என்சீர் வருத்தம்!

 காப்பித்தூள் கடைமாற்றி வாங்க, வழியில்
             காய்கறிக்கா ரன்பார்க்க, கடையை மாற்ற,
 'சாப்பாடு இல்லை,கேஸ் இல்லை, மதியம்
            சமாளியுங்கள்' எனமனைவி முகத்தைப் பார்க்க
 'மோப்பெட்'டில் 'ரிசர்வு'வர, பிள்ளைமுணு முணுக்க,
           'மூன்றாம்மாதம்' 'கேபிள்' காரன் திட்ட,
 நாய்ப்பாடு பட்டுவரும் நடுத்தர வர்க்கம்
            நாளொருபொழு தாகிவரும் நடுத்தெரு வர்க்கம்!

3 கருத்துகள்:

 1. எண்சீர் விருத்தம்
  "'ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
  அகத்தடியாள் மெய் நோவ.... "' என்னும் பழம்பாடலை நினைவுப் படுத்துகிறது.
  அருமை.

  பதிலளிநீக்கு
 2. மூன்றும் அருமை ஐயா..உங்கள் பதிவுகளை முதலில் இருந்து சற்றுக் கிளறலாம் என்று முடிவு.. பொக்கிஷம் கிடைக்கும் என்று..:) சரிதானே ஐயா?

  பதிலளிநீக்கு
 3. நன்றி சகோதரி, நானே -மனச்சோர்வு வரும்நேரங்களில் இப்படிக் கிளறுவது என் “பழைய பனைஓலை“களைத்தான்...

  பதிலளிநீக்கு